இந்தியா, பாகிஸ்தானில் புகழ்பெற்று விளங்கும் கவாலி, கஜல் இசைப் பாடகர் யில் ராஹத் ஃபத்தே அலிகான் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத்தில் இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். மாமா உஸ்தாத் நுஸ்ரத் ஃபத்தே அலிகானிடம் கவாலி மற்றும் சாஸ்திரிய இசை பயின்றார். மாமாவுடன் இங்கிலாந்து சென்றபோது இவரது முதல் பொது இசை நிகழ்ச்சி நடந்தது. அப்போது வயது 11.
700 ஆண்டுகள் பழமையான சூஃபிக்களின் பக்தி இசையான கவாலி இசையில் திறமை வாய்ந்தவர். 2002-ல் பூஜாபட், கராச்சி சென்றபோது இவரது குரலைக் கேட்டார். தன் படத்தில் அவரைப் பாடவைத்தார். 2004-ல் ‘பாப்’ திரைப்படம் மூலம் பாலிவுட் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.
பிறகு பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். ‘சிறு வயதில் என் குரல் இந்த அளவுக்கு இருந்ததில்லை. கவாலி இசை பயின்ற பிறகே குரலுக்கு தனிச் சிறப்பும் இனிமையும் வந்தது’ என்கிறார்.
முதன்முதலாக மாமாவுடன் இணைந்து பியல் ஜாம் என்ற அமெரிக்க ராக் இசைக் குழுவுடன் ‘டெட் மேன் வாக்கிங்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் சவுண்ட் டிராக்கில் 1995-ல் பாடினார். மாமா தன்னை மகன் போல நேசித்ததையும் சங்கீதத்துடன் சேர்த்து பல நல்ல பண்புகளைக் கற்றுத் தந்ததையும் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறார். மாமா தன்னை இசை வாரிசாக அறிவித்ததை பெருமைக்குரிய விஷயமாகக் கருதுகிறார்.
பாகிஸ்தான் பிரபல பாடகரான இவர், இந்தியாவிலும் பிரபலமாகத் திகழ்கிறார். குரலுக்கு எல்லைக் கோடுகளோ, சுவர்களோ, தடைகளோ கிடையாது என்பது இவரது கருத்து. ‘இரு நாடுகளின் கலைஞர்கள், பாடகர்கள் அமைதிக்காக நிறைய சேவையாற்றியுள்ளனர். இன்னமும் கடுமையாகப் பாடுபட வேண்டும். மக்களின் மனங்கள் இணையவேண்டும். இரு நாட்டு மக்களும் பரஸ்பரம் அன்பு கொண்டவர்கள்தான். அந்த அன்பு இன்னும் பெருக வேண்டும்’ என்பதே இவரது விருப்பமாம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இசையால் இணைந்துள்ளன. இந்தியாவில் எனக்கு இவ்வளவு அன்பு, மரியாதை கிடைத்துள்ளது. அதற்காக, என் இதயத்தின் ஆழத்தில் இருந்து இந்த தேசத்துக்கு நன்றி கூறுகிறேன் என்கிறார்.
பாகிஸ்தான் தேசபக்திப் பாடல்கள் உட்பட பல தனிப் பாடல்கள், 40-க்கும் மேற்பட்ட ஆல்பங்கள், பாகிஸ்தானில் 7 நாடகங்களின் சவுண்ட் டிராக், 41 பாலிவுட் படங்களில் சவுண்ட் டிராக், 3 ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் டிராக் பாடியுள்ளார்.
உலகம் முழுவதும் இசைப் பயணம் செய்து ஏராளமான கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கவாலி, கஜல் மட்டுமின்றி, பிற மெல்லிசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார்.
கடந்த நவம்பரில் நோபல் பரிசு வழங்கும் விழாவில் பாட இவரும் இந்தியாவின் அம்ஜத் அலிகானும் விசேஷமாக அழைக்கப்பட்டிருந்தனர். இந்த கவுரவத்தை மறக்கவே முடியாது என்கிறார் இந்த சங்கீத சாதனையாளர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
15 hours ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago