இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இத்தாலியக் கவிஞர் ஹாரஸ் எனப்படும் குயின்டஸ் ஹாராடியஸ் ஃபிளாக்கஸ் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
இத்தாலியின் வெனூசியா பகுதியில் பிறந்தவர். அடிமை யாக அவதிப்பட்ட அப்பா, இவர் பிறப்பதற்கு முன்பு சுதந்தர மனிதனாக மாறியவர். கடுமையாக உழைத்து சிறிய பண்ணைக்கு முதலாளி யானார். தன்னைப் போல பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில், அவரது கல்விக்காக தாராளமாக செலவு செய்தார்.
தொடக்கக் கல்வியை உள்ளூரில் முடித்த ஹாரஸ், ரோம் நகரில் புகழ்பெற்ற பள்ளியில் உயர் கல்வி கற்றார். அங்கு கிரேக்கம், மெய்யியல் கற்றார்.
மகன் அறிவாற்றல் நிறைந்தவனாக இருப்பதோடு ஒழுக்கமாகவும் திகழவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் அப்பா. ‘‘நான் நல்ல முறையில் வளர்ந்து, மிகவும் குறைவான தவறுகளுடனும், நாகரிகமாகவும், ஒழுக்கமாக வாழ்வதற்கும், பலருக்கும் நல்ல நண்பனாக இருப்பதற்கும் என் அப்பா மட்டுமே காரணம்’’ என்று கவிதை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் ஹாரஸ்.
தன் எழுத்துக்களில் தனது குணாம்சங்கள், முன்னேற்றம், வாழ்க்கை முறை ஆகியவற்றை ஹாரஸ் வெளிப்படுத்தியுள்ளார் என்கிறார் ‘லைப் ஆப் ஹாரஸ்’ என்ற புத்தகம் எழுதிய ஸ்யுடோனியஸ்.
ஜூலியஸ் சீசர் படுகொலைக்குப் பிறகு ரோமப் பேரரசில் அடுத்தடுத்து பிரச்சினைகள் வெடித்தன. ஹாரஸ் வாழ்விலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. மார்க்கஸ் புரூட்டஸ் தன் கட்சிக்கு ஆதரவாளர்களைத் திரட்டினார். அதில் ஹாரஸும் ஒருவர். நன்கு படித்த இளைஞரான இவர் எடுத்த எடுப்பிலேயே உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டார். இது அவருடன் இருந்தவர்கள் மத்தியில் பொறாமையையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது.
ரோமப் பேரரசர் அகஸ்டஸ் தன் எதிரிகளுக்கு பொது மன்னிப்பு தருவதாக அறிவித்த உடனேயே அதை ஏற்றுக்கொண்டு இத்தாலி திரும்பினார் ஹாரஸ். ஆனால், அங்கு இவரது தந்தையின் சொத்துகள் பறிபோயிருந்தன.
ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதில் வருமானம் கிடைக்கவில்லையே தவிர, பலரது அறிமுகமும் பணக்காரர்களின் ஆதரவும் கிடைத்தது. இதன்மூலம், அரசுக் கருவூலத்தில் வேலையும் கிடைத்தது.
பணியின்போது ஓய்வு நேரம் அதிகம் கிடைத்ததால் நையாண்டி (Satires) பாடல்களையும், உணர்ச்சி மிகுந்த கவிதைகளையும் எழுத ஆரம்பித்தார். அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், சொந்த வாழ்க்கை சம்பவங்கள் இவற்றின் உட்கரு, அரசியல், காதல், தத்துவம், சமூகத்தில் தன் சொந்த பங்களிப்பு ஆகியவற்றை இவரது கவிதைகள் உள்ளடக்கியிருந்தன.
ஏராளமான சிறு கவிதைகள் அடங்கிய 3 கவிதைப் புத்தகங்களை வெளியிட்டார். அகஸ்டஸின் நண்பர் மீசீனஸ் இவருக்கு நல்ல வீட்டையும், பண்ணையையும் பரிசளித்தார்.
வார்த்தைச் சிக்கனம்தான் இவரது கவிதைகளின் சிறப்பம்சம். காதல், ஒயின், இயற்கை, நண்பர்கள் பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். 56 வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago