மொழியியல் வல்லுநர், எழுத்தாளர், அரசியல் தத்துவவாதி என பன்முகத் தன்மை கொண்ட நோம் சாம்ஸ்கி பிறந்தநாள் இன்று (டிசம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
அமெரிக்காவில் பிறந்தவர். பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல் பயின்றார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பல மொழியியல் அறிஞர்களிடம் பயிற்சி பெற்றார். தத்துவம், கணிதமும் பயின்றார்.
புத்தகம் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். எண்ணிலடங்கா புத்தகங்கள் படித்துள்ளார். இவர் எழுதிய சொற்றொடர் இயல் அமைப்புகள் (Syntactic Structures) என்ற புத்தகம் முக்கிய மொழியியல் புத்தகமாகக் கருதப்படுகிறது.
பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதைக் கேள்விப்பட்டு, பாசிசக் கொள்கைகள் பரவும் ஆபத்து இருப்பதாக இவர் எழுதிய கட்டுரை பள்ளி பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 10.
மாமாவின் பொறுப்பில் இருந்த செய்தித்தாள் கடையில் மாலை நேரங்களில் வேலை பார்த்தார். பெரிதாக லாபம் இல்லை என்றாலும், பலரும் பல கருத்துகளையும் விவாதிக்கும் களமாக இருந்தது அந்த இடம். தனது அரசியல் அறிவு அங்குதான் விரிவடைந்தது என்கிறார் சாம்ஸ்கி.
மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) உட்பட பல கல்வி நிறுவனங்களில் 50 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர். உலகின் மனிதவியல் வல்லுநர்களில் மிகச் சிறந்த 10 பேரில் ஒருவராக கருதப்படுகிறார்.
மொழியியல் துறை பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர். உள்ளம், அறிவுத் திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் ஆகியவற்றைத் தொடர்புகொள்ளும் அறிதிறன் அறிவியல் (Cognitive Science) துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள், செயல்பாடுகளைத் திறனாய்வு செய்து அவற்றின் முடிவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அரசியல், மொழியியல் குறித்து சுமார் 90 புத்தகங்கள் எழுதியுள்ளார். கணினியியலிலும் புத்தகம் எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் உரையாற்றியுள்ளார். உலக அளவில் கலை, இலக்கிய வட்டாரத்தில் அதிகம் சுட்டிக்காட்டப்படும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்குகிறார். உலகப் புகழ்பெற்ற அரசியல் தத்துவவாதியாகப் போற்றப்படுகிறார்.
எல்லா மனிதர்களும் சமூக, கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டுள்ளனர் என்று கூறும் இவர், மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல்தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார்.
வாழ்நாளின் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. நோபல் பரிசுக்கு இணையான ஜப்பான் நாட்டு கியோட்டோ விருது உட்பட ஏராளமான பரிசுகள், விருதுகள், பட்டங்கள் பெற்றுள்ளார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago