குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த பாபு ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
பிஹாரில் பிறந்தவர். 5 வயதில் ஒரு மவுல்வியிடம் பாரசீக மொழி கற்றார். சாப்ரா மாவட்டத்தில் தொடக்கக் கல்வி, டி.கோஷ் அகாடமியில் 2 ஆண்டுகள் பயின்றார்.
கல்கத்தா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றதால் மாதந்தோறும் ரூ.30 உதவித் தொகை கிடைத்தது. கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தார்.
பணிபுரியும்போதே சட்ட மேற்படிப்பு பயின்று முதல் மாணவராக தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பணியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
விவசாய சாகுபடிகளுக்கு ஆங்கில அரசு விதித்த கட்டுப்பாட்டை எதிர்த்து சம்பாரன் என்ற இடத்தில் விவசாயிகள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாகப் போராடிய காந்திஜி, அங்குள்ள நிலையை அறிந்து வருமாறு இவரை அனுப்பிவைத்தார்.
உண்மை அறியும் குழுவுக்குத் தலைமையேற்ற ராஜேந்திர பிரசாத், முக்கியத்துவம் வாய்ந்த தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைத்து, விவசாயச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். இது காந்திஜியின் அஹிம்சை போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. ராஜேந்திர பிரசாத் வாழ்விலும் திருப்புமுனையாக அமைந்தது.
தொண்டர்கள் இவரை ‘பாபுஜி’ என்று அன்புடன் அழைத்தனர். இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் முன்னணித் தலைவரானார். காந்திஜியின் எளிமையால் கவரப்பட்டார். பணியாளர்களை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளை அவரே செய்தார்.
1934-ல் பிஹாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ ரூ.38 லட்சம் நிதி திரட்டினார். வைஸ்ராயால் அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிதி திரட்ட முடிந்தது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1946-ல் அரசியலமைப்பு அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3-வது முறையாகப் பதவியேற்றார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, முதன் முதலாக அமைந்த அரசில் கேபினட் அமைச்சரானார்.
இந்திய அரசியல் சாசனம் வகுக்கும் பணிக் குழுவுக்குத் தலைமை ஏற்றார். இந்தியக் குடியரசு அமைந்ததில் இவரது பங்கு மகத்தானது. 1950-ல் நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். 1962 வரை அந்த பதவியில் இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர்களில் 2-வது முறையாக அந்த பதவியை வகித்தவர் இவர் மட்டுமே.
இந்தியக் குடியரசை திறம்படவும் உறுதியாகவும் வழிநடத்தியவர் என்று போற்றப்படும் இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத், 78-வது வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago