சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12). அவரை பற்றிய அரிய முத்துக்கள் பத்து..
கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஐந்து வயதில் தாயை இழந்தார். பெங் களூரில் உள்ள ஆச்சாரிய பாடசாலை, விவேகானந்த பால சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக் காரராக விளங்கியவர்.
சிறு வயதில் பயமே இல்லாதவ ராக, எதைப் பற்றியும் கவலைப்படாதவராக இருந்தார். பெங்களூரில் பேருந்து நடத்துநராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் மேடை நாடகங்களில் பங்கேற்ற இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆசை பிறந்தது.
நடிக்கும் ஆசையுடன் சென்னை வந்தார். நண்பரின் உதவியுடன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்தார். 1975ல் கே. பால சந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இது அவரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு சில படங்களில் வில்லனாக, சில படங்க ளில் நல்லவனாக, வேறு சில படங்களில் அதிரடி நாயகனாக, நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என்று வேறுபட்ட வேடங்களில் முத்திரை பதித்தார். ரசிகர்கள் ‘ரஜினி ஸ்டைல்’ என்று கொண்டாடினர்.
இவரது படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இடம் பெறும் ‘பஞ்ச் டயலாக்’ அனைத்துத் தரப்பினரிடமும் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த இவரது திரைப்படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் உருவாக்கப்படுகின்றன.
முத்து திரைப்படம் ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அங்கும் இது மகத் தான வெற்றி பெற்று, ஏராளமானோரை இவரது ரசிகர்க ளாக மாற்றியது. அண்ணாமலை, எஜமான், வீரா, பாட்ஷா, போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, சூப்பர்ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றுத் தந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் என பல மொழிகளில் ஏறக்குறைய 160 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது படங்கள் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ் தர்களுக்கும் லாபம் பெற்றுத் தருகின்றன. இந்தியா முழுவதும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஆசியாவில் ஜாக்கி சானுக்கு அடுத்தபடியாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர். 60 வயதைக் கடந்தும் கதாநாயகனாக நடித்து, சூப்பர் ஹிட் படங்களைத் தந்து வருகிறார்.
பத்ம பூஷன், ஃபிலிம்ஃபேர், கலைமாமணி உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஜனரஞ்சக மான நடிகராக இருந்தாலும், இவர் தனிமை விரும்பி. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் இமயமலைக்குச் சென்று, அங்குள்ள ஆசிரமத்தில் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். தன்னம்பிக்கையுடனும், சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடனும் கடுமையாக உழைத்தால், வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளவர் ரஜினிகாந்த்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 hours ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago