காந்தியத்தை பரப்பிய ஜீவித்ராம் பகவன்தாஸ் கிருபளானியின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10.
சிந்து மாகாணத்தின்(பாகிஸ்தான்) ஹைதராபாத்தில் பிறந்தவர். அதே ஊரில் மெட்ரிகுலேஷன் வரை படித்தார். பிறகு மும்பை வில்சன் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரி முதல்வர்,
`இந்தியர்கள் பொய்யர்கள்' என்று கூறியதற்காக மாணவர்களை ஒன்று திரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத் தில் ஈடுபட்டதால் கல்லூரியி லிருந்து நீக்கப்பட்டார். பின்னர் புனே ஃபர்கூசன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்தார்.
முஸாஃபர்பூர் கல்லூரி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும், மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யாபீடத்தின் முதல்வராகவும் பணியாற்றினார். மகாத்மா காந்தியின் கொள்கைகளில் பெருமதிப்பு வைத்திருந்த இவர், வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாகவே திகழ்ந்தார்.
ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு, பலமுறை சிறை சென்றுள்ளார். 1934 முதல் 1945 வரை இந்திய தேசிய காங்கிரன் பொதுச் செயலாளராக பணியாற்றினார். 1946ல் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தனை பதவிகளை வகித்து வந்தாலும் இவர் தன்னை எப்போதுமே முன்னிறுத்திக்கொள்ளாமல், பின்னணியிலேயே சேவையாற்றி வந்தார்.
பனாரஸ் ஹிந்து கல்லூரியில் பணியாற்றி வந்த சுசேதாவைத் திருமணம் செய்து கொண்டார். சுசேதா கிருபளானி பின்னாளில் உத்தரபிரதேசத்தின் முதல் பெண் முதலமைச்சரானார்.
இந்தியா சுதந்தரம் அடைந்த பின் பிரதமர் பதவிக்காக காங்கிரசில் நடைபெற்ற தேர்தலில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வாக்குகளைப் பெற்றார்.
இவருக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் தலைமைப் பொறுப்பிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் விலகினார். க்ருஷக் மஸ்தூர் பிரஜா பார்ட்டி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
பிறகு இந்தக் கட்சி பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியுடன் இணைக்கப்பட்டது. இவர் 1952, 1957, 1962, 1967-ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1954-ல் கட்சியிலிருந்து விலகி அதையடுத்த ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்தார்.
அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் சமூக, சுற்றுச்சூழல் நலன்களுக்காகவும் பணியாற்றி வந்தார். வினோபா பாவேவுடன் இணைந்து காந்தியத்தைப் பரப்பி வந்தார். காந்தீய கொள்கைகளைக் குறித்த புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
பழுத்த அனுபவசாலியான கிருபளானி, நாடாளு மன்றத்தில் எந்தக் கட்சியையும் சாராமலேயே மதிப்பு வாய்ந்த எதிர்கட்சித் தலைவராக செயல்பட்டார். இவர் 94-ஆம் வயதில் காலமானார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago