இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரும் 2 முறை ஆஸ்கர் விருது பெற்றவருமான ரிச்சர்ட் அட்டன்பரோ (Richard Attenborough) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
* இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் பிறந்தார் (1923). தந்தை அறிஞர் கல்வியாளர். வைக்ஸ்டன் பாய்ஸ் கிராமர் பள்ளியில் பயின்றார்.
* நடிப்பதில் ஆர்வம் இருந்ததால், ‘ராயல் அகாடமி ஆஃப் டிராமடிக் ஆர்ட்டில்’ நாடகவியல் பயின்றார். இரண்டாம் உலகப் போரில் ராயல் விமானப் படையில் பணியாற்றினார். யுத்தம் நடைபெறும் இடங்களில் படம்பிடிக்கும் குழுவினருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
* முதன்முதலில் நாடக நடிகராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். அகதா கிறிஸ்டியின் நாவலைத் தழுவி தயாரிக்கப்பட்ட ‘தி மவுஸ்ட்ராப்’ நாடகம் இவரைப் பிரபலமாக்கியது. 1942-ல் ‘இன் விச் வி செர்வ்’ என்ற படத்தில் முதன்முறையாக நடித்தார்.
* அடுத்து, ‘நியு அட்வென்சர்ஸ்’, ‘ஏ மேட்டர் ஆஃப் லைஃப் அண்ட் டெத்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் 1947-ல் இவர் நடித்த ‘பிரைட்டன் ராக்’ படம்தான் இவருக்கு நடிகராக அங்கீகாரம் பெற்றுத் தந்தது. 1950-களின் இறுதியில் ‘பீவேர் ஃபிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.
* ‘பிரயான் ஃபோர்ஸ்’, ‘தி லீக் ஆஃப் ஜென்டில்மேன்’, ‘தி ஆங்க்ரி சைலன்ஸ்’ மற்றும் ‘விசில் டவுன் தி வின்ட்’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தார். இவரது ‘பிரைவேட் புரோகிரஸ்’, ‘தி சான்ட் பெபிள்ஸ்’, ‘செயான்ஸ் ஆன் ஏ வெட் ஆஃப்டர்நூன்’ உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத்தக்கவை.
* ‘தி கிரேட் எஸ்கேப்’ என்ற படத்தில் 1963-ல் நடித்தார். இது பெரும் வெற்றி பெற்று, வசூலில் ஆறாவது மிகப் பிரபலமான நடிகர் என்ற அந்தஸ்துக்கு இவரை உயர்த்தியது. 1969-ல் ‘ஓ வாட் ஏ லவ்லி வார்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1977-ல் சத்தியஜித் ரேயின் ‘சதரன்ஞ் கே கிலாடி’ படத்தில் நடித்தார்.
* மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 1982-ல் ‘காந்தி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்தார். இது உலகம் முழுவதிலும் மகத்தான வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த எடிட்டிங் உள்ளிட்ட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளையும், 4 பாஃப்ட்டா விருதுகள், 4 கோல்டன் குளோப் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் இப்படம் பெற்றது.
* நீண்ட இடைவெளிக்குப்பின் ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘மிராக்கிள் ஆன் தர்ட்டிஃபோர்த் ஸ்டீட்’, ‘ஹாம்லட்’, ‘எலிஸபெத்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1992-ல் ‘சாப்ளின்’ திரைப்படத்தை இயக்கினார்.
* நாடு, மதம், இனம், ஜாதி, நிறம் எந்த பாகுபாடும் இல்லாமல் மனிதர்கள் அனைவருக்கும் கல்வியும் சுகாதாரமும் பெறும் உரிமை உள்ளது என்பதை மனதார நம்பிய இவர், உலகளாவிய பல்வேறு சேவை மையங்களோடு இணைந்து சேவைகள் புரிந்துவந்ததோடு, அவற்றுக்குத் தாராளமாக நிதி உதவியும் வழங்கினார்.
* நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், தொழிலதிபரும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஹாலிவுட்டில் வெற்றிகரமாக இயங்கி வந்தவரும், உலகப் புகழ்பெற்ற பன்முகப் பரிமாணம் கொண்ட ஆளுமையுமான இவர், 2014-ம் ஆண்டு தனது 91-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago