பிரான்ஸின் அறிவியல் அறிஞரும் ‘தற்கால வேதியியலின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான ஆன்டோனி லாவியோசியர் (Antoine Lavoisier) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார் (1743). 5 வயதில் தாயை இழந்தார். பள்ளியில் படிக்கும்போதே உயிரியியல், வேதியியல், கணிதம் மற்றும் வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆசிரியர் இவரை வானியலில் உயர்கல்வி படிக்கும்படி ஊக்கப்படுத்தினார். இவரோ குடும்பத்தினரின் விருப்பப்படி 1764-ல் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
* ஆனால், இவரது ஆர்வம் முழுவதும் அறிவியலில் மையம் கொண்டிருந்தது. 25 வயதில் பிரான்ஸ் நாட்டு அறிவியல் கழகத் தின் உறுப்பினரானார். தவறான பல கொள்கைகள் காரணமாக பின்தங்கியிருந்த வேதியியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் இவர் முக்கியமானவர்.
* 1769-ல் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். நெருப்பு எரிவதற்குக் காற்றில் உள்ள பிராணவாயுதான் காரணம் என்பதையும் கண்டறிந்தார். தனது ஆராய்ச்சிகள், சொந்த வாழ்க்கை அனைத்தையும் குறித்து எழுதி வைத்தார். அதை இவர் மனைவி நூலாக வெளியிட்டார்.
* அதில் காணப்பட்ட வேதியியல் தொடர்பான பல கருத்துகள் இன்றும் அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகின்றன. அரசாங்க வெடிகுண்டுத் தூள் அதிகாரியாகப் பணியாற்றியபோது, வெடித்தல் மற்றும் எரியும் தன்மை குறித்து ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1789-ல் ‘எலிமண்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற பாடநூலை எழுதி வெளியிட்டார்.
* அந்த நூலில் தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகள், கோட்பாடுகளை ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். ஓர் உலோகத்தை எரிக்கும்போது அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைவிட அதிகமாக இருக்கும் என்பதை சோதனைகள் மூலம் மெய்ப்பித்தார்.
* வேதியியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார். இதையடுத்து, உலகம் முழுவதிலும் உள்ள வேதியியலாளர்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் ஒருவருக்கொருவர் தத்தம் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து பரிமாறிக்கொள்ள முடிந்தது.
* பிரான்ஸ் முழுவதும் எடை மற்றும் அளவுகளைக் கணக்கிடும் முறையை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அரசு விஞ்ஞானியாக 20 ஆண்டு காலம் பணியாற்றினார். கந்தகம் உள்ளிட்ட சில பொருட்கள் கூட்டுப் பொருட்கள் அல்ல, அவை தனிமமே என நிரூபித்தார்.
* ஆக்சிஜன், நைட்ரஜன் இரண்டும் கலந்ததுதான் காற்று என்பதையும் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் கலந்ததுதான் நீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவினார். பொருட்களின் நிறை குறையாப் பண்பினை (Conservation of Matter) கண்டறிந்தவரும் இவரே. ப்ளோசிட்ரான் குறித்த ஆய்வுதான் இவரது ஆய்வுகளிலேயே மிகவும் புகழ்பெற்ற ஒன்று.
* உயிரினங்கள், சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரித்து, சக்தி பெறுகின்றன என்பதைக் கண்டறிந்து கூறினார். ‘எலிமன்டரி சப்ஸ்டன்சஸ்’ என்ற தனிமங்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
* பிரெஞ்ச் ராயல் அறிவியல் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் செயல்பட்டார். இயற்பியல், வேதியியல், கணிதம், வானியல் உள்ளிட்ட களங்களில் முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய அறிவியல் மாமேதை ஆன்டோனி லாவியோசியர், 1794-ம் ஆண்டு, மே மாதம் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 51
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago