இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான பால் அட்ரியன் டிராக் (Paul Adrien Dirac) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் பிறந்தார் (1902). பிஷப்டன் பகுதியில் வளர்ந்தார். பிஷப் சாலை ஆரம்பப் பள்ளியில் பயின்றார். சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணத் திறனை வெளிப்படுத்தினார்.
* பின்னர் தந்தை வேலை பார்த்த மெர்சன்ட் வென்சர்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி உள்ளிட்ட பல மொழிகளை அறிந்திருந்தார். கல்வி உதவித்தொகை பெற்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார்.
*பொது சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் களங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காகக் கிடைத்த கல்வி உதவித்தொகை குறைவாக இருந்ததால் அங்கு சேர முடியவில்லை.
*எனவே பிரிஸ்டல் பல்கலைக்கழகத்திலேயே இலவசமாகப் படிக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கணிதத்தில் இளங் கலைப் பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். அதிலும் முதல் வகுப்பில் தேறினார். இதனால் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சித் துறையின் உதவித்தொகையைப் பெற்றார்.
* கேம்பிரிட்ஜ் சென்று, தான் ஆர்வம் கொண்டிருந்த விஷயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். 1926-ல் குவாண்டம் விசையியல் குறித்த தனது முதல் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் தனது ஆராய்ச்சிகளைக் கோபன்ஹேகனில் உள்ள கோடிங்கன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார்.
* எர்வின் ஷ்ரோடிங்கர் அலைவிசையியல் வெர்னர் ஐசன்பர்கில் அணி விசையியலை உள்ளடக்கிய குவாண்டம் விசையியலை உருவாக்கினார். கதிர்வீச்சின் குவாண்டம் கோட்பாட்டை மேம்படுத்தி னார். 1928-ல் சார்பியல் மற்றும் குவாண்டம் இயக்கவியலுக்கான தொடர்பை விளக்கும் டிராக் சமன்பாட்டைக் கண்டறிந்தார்.
*மேலும் பருப்பொருளுக்கு (matter) எதிரான பருப்பொருளின் (antimatter) இருப்பை முன்கணித்துக் கூற இவரது இந்தச் சமன்பாடு வழிகோலியது. ‘பிரின்சிபல்ஸ் ஆஃப் குவாண்டம் மெக்கானிக்ஸ்’, ‘டைரக் ஷன்ஸ் இன் ஃபிசிக்ஸ்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும் ‘லெக்சர்ஸ் ஆன் குவாண்டம் மெக்கானிக்ஸ்’ மற்றும் ‘குவான்டிசேஷன் ஆஃப் தி கிராவிடேஷனல் ஃபீல்ட்ஸ்’ உள்ளிட்ட கட்டுரைகளை வெளியிட்டார்.
* குவாண்டம் இயக்கவியலுடனான பொது சார்பியல் ஒப்புரவாக்கல் (reconciliation of general relativity) களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளார். குவாண்டம் விசையியல், சுழற்சி சார்புத் தன்மையின் விளைவால் ஏற்படுகிறது என்பதையும் கண்டறிந்தார்.
* அணுவியல் கோட்பாட்டின் புதிய உற்பத்தி வடிவங்களைக் (new productive forms) கண்டறிந்தமைக்காக ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கருடன் இணைந்து 1933-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், மாக்ஸ் பிளாங்க் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
*அமெரிக்கன் இயற்பியல் கழகம் மற்றும் லண்டன் இயற்பியல் கழகங்களில் கவுரவ ஃபெலோஷிப்பும் பெற்றார். அமெரிக்கா, ஜெர் மனி மற்றும் இங்கிலாந்தில் இவரது பெயரில் அறிவியல் விருதுகள் வழங்கப்படுகின்றன. 20-ம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க இயற்பியலாளர்களுள் ஒருவராகப் போற்றப்பட்ட பால் அட்ரியன் டிராக் 1984-ம் ஆண்டு தமது 82-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago