ம.ரா.ஜம்புநாதன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நான்மறைகளையும் தமிழில் மொழிபெயர்த்த மகாபண்டிதரும்,கல்வியாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான ம.ரா.ஜம்புநாதன் (M.R. Jambunathan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருச்சியை அடுத்த மணக்காலில் பிறந்தவர் (1896). இவரது முழுப்பெயர் மணக்கால் ராமசாமி ஜம்புநாதன். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். சென்னையில் வில் இன்ஜினீயரிங் பயின்று 1921-ல் பட்டம் பெற்றார்.

* ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக சென்னையில் செயல்பட்டுவந்த Depressed Classes League என்ற அமைப்பின் அமைப்பாளராக 1918-ல் இருந்து 1920 வரை பணியாற்றினார். பம்பாய் மாநகராட்சியில் சிவில் இன்ஜினீயர் வேலை கிடைத்ததால் அங்கு சென்றார். அங்கு அடித்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகினார்.

* சாலையோரச் சிறுவர்கள், கல்வி பெறுவதற்காக 1924-ல் ஒரு தொடக்கப் பள்ளியை ஆரம்பித்தார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிதான் பம்பாயில்தமிழர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப்பள்ளி.

* ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் புரியும்படியாக வேதங்கள் அவரவர் தாய்மொழியில் முழுமையாகவும் முறையாகவும் கற்றுக்கொடுக்கப்பட்டால் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லாமல் அனைத்து மக்களும் தோழமையுடன் இணக்கமாக வாழமுடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

* இந்த அடிப்படையில் நான்மறைகளையும் தமிழில் மொழி பெயர்த்தார். தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காசி மடாதிபதி ஆகியோரின் உதவியுடன் சாம வேதத்தின் தமிழ்ப் பதிப்பை 1935-ல் வெளியிட்டார். 1938, 1940-ம் ஆண்டுகளில் யஜுர், அதர்வண வேதங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார்.

* 30 ஆண்டு காலம் அயராது பாடுபட்டு மொழிபெயர்த்த ரிக் வேதம் முதல் தொகுதியை, இவரது மறைவுக்குப் பிறகு பம்பாயில் 1978-ல் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா வெளியிட்டார். இரண்டாவது தொகுதி 1980-ல் வெளியிடப்பட்டது.

* தனது முதல் படைப்பான ‘சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை’ ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி 1918-ல் வெளியிட்டார். ‘வேதசந்திரிகை’, ‘சீன வேதம்’, ‘மாஜினியும் மனிதர் கடமைகளும்’, ‘யோக உடல்’, ‘ஸ்வாமி ஸ்ரத்தானந்தர்’, ‘திரிமூர்த்தி உண்மை’, ‘உபநிடத சிறுகதைகள் அடங்கிய கதா ரத்னம்’ உள்ளிட்ட நூல்களைப் படைத்து, வெளியிட்டார்.

* சர்வதேச ‘பென்’ சென்டர் (International PEN - Poem Essayists and Novelists Centre) அமைப்பின் இந்தியப் பிரிவின் கவுரவச் செயலாளராக 1933-ல் இருந்து பல ஆண்டுகள் பணியாற்றினார். இந்த அமைப்பு சார்பாக சிதம்பரம், அண்ணாமலை நகரில் சர்வதேச மாநாட்டை 1954-ல் நடத்தினார்.

* இந்த மாநாட்டை அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர்எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அன்றைய பிரதமர் நேரு தொடங்கி வைத்தார். பண்டைய நாணயங்கள் சேகரிப்பில் ஈடுபாடு கொண்டிருந்ததால், 7-ம் நூற்றாண்டில் இருந்து 10-ம் நூற்றாண்டு வரையிலான பல்லவ, சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்கள் கால நாணயங்களையும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் அரசுகள் வெளியிட்ட நாணயங்களையும் சேகரித்தார்.

* அவுரங்கசீப், மைசூர் உடையார்கள், மைசூர் சுல்தான்கள், ஹைதராபாத் நிஜாம்கள் ஆகியோர் கால நாணயங்களையும் சேகரித்து வைத்திருந்தார். இவை தற்போது மும்பை ரிசர்வ் வங்கி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அடக்கமான குணமும் எளிமையான பண்பும் கொண்டிருந்த ம.ரா.ஜம்புநாதன் 1974-ம் ஆண்டு தனது 78வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்