போலந்து நாட்டைச் சேர்ந்த வேதியலாளரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான டுடோஷ் ராயிட்டெய்ன் (Tadeusz Reichstein) பிறந்த தினம் இன்று (ஜூலை 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* போலந்து நாட்டில் வ்ளோக்ளாவெக் என்ற இடத்தில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் (1897). இவருடைய 8 வயதில் குடும்பம் சுவிட்சர்லாந்தில் பாஸல் என்ற இடத்துக்கு குடியேறியது. வீட்டிலேயே ஆசிரியர்கள் ஏற்பாடு செய்து ஆரம்பக் கல்வி கற்றுத்தரப்பட்டது.
* 1914-ல் குடும்பம் சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றது. சூரிச்சில் உள்ள ஸ்விஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றார். 1916-ல் தொழில்நுட்பத்துக்கான ஃபெடரல் நிறுவனத்தில் வேதியியல் பயின்று 1920-ல் டிப்ளமோ முடித்தார். 1922-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
* 1931-ல் லியோபோல்ட் ருஸிக்கா என்ற உயிரி வேதியியலாளரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 1934-ல் மருந்தியல் ரசாயனப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1933-ல் வைட்டமின்கள் பற்றிய ஆய்வில் தற்போது ராயிட்டெய்ன் செயல்முறை என்று குறிப்பிடப்படும் வைட்டமின்-சி (ஆஸ்கார்மிப் அமிலம்) செயற்கைத் தொகுப்பு செயல்முறையைக் கண்டறிந்தார்.
* பி-வைட்டமின்களில் ஒன்றான பாந்தோதேனிக் அமிலம் குறித்தும் ஆராய்ந்தார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த மக்களுக்கான சமுதாயப் பணிகளில் ஈடுபட்டார். 1946-ல் பேசல் பல்கலைக்கழகத்தில் கரிம வேதியியல் மற்றும் உடலியங்கலியலில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
* பேசல் பல்கலைக்கழக ஃபார்மாசூடிகல் இன்ஸ்டிடியூட்டில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அட்ரினல் சுரப்பிகள், ஹார்மோன்கள் குறித்த ஆராய்ச்சிகளில் தனியாகவும் பிரிட்டன் விஞ்ஞானிகளுடன் இணைந்தும் ஈடுபட்டார். அமெரிக்க வேதியியலாளர் இ.சி. கெண்டால் மற்றும் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பி.எஸ். ஹென்ச் ஆகியோருடன் இணைந்து அட்ரினல் கார்டெக்ஸின் எக்ஸ்ட்ராக்ட் குறித்து ஆராய்ந்தனர்.
* குரோமோடோகிராஃபி முறையைப் பயன்படுத்தி, இந்த எக்ஸ்ட்ராக்டின் புதிய பொருள்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார். இவ்வாறு 29 ஹார்மோன்களின் கட்டமைப்பு மற்றும் அவற்றின் ரசாயன, உயிரியியல் விளைவுகள் கண்டறியப் பட்டன. கார்டிசோன் ஹார்மோனை இந்த மூவரணி தனிமைப்படுத்திய போது அதிகபட்சமாக தூண்டப்படுகிறது என்பதையும் கண்டறிந்தனர்.
* இதற்காக இம்மூவருக்கும் 1950-ம் ஆண்டு, உடலியங்கலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1947-ம் ஆண்டு ஸ்விஸ் நோபல் பரிசு எனக் குறிப்பிடப்படும் மார்செல் பெனோயிஸ்ட் பரிசு வழங்கப்பட்டது. இவரது வைட்டமின் சி-யின் வேதியியல் மற்றும் கார்டிகோஸ் - ஸ்டெராய்டுகளைக் குறித்த ஆராய்ச்சிகளுக்காக 1968-ம் ஆண்டு காப்ளே பதக்கம் பெற்றார்.
* தனது ஆய்வுகளைப் பற்றிய 80 கட்டுரைகளை வெளியிட்டார். கலப்பின முறை மற்றும் பல தொகுதிகளாகும் இயல்பு இவற்றைக் குறித்த வரலாறு பற்றிய விளக்கத்தில் குரோமோசோம்கள் எண்ணிக்கை மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் தொடர்பு குறித்து ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்தார்.
* 10-க்கும் மேற்பட்ட அறிவியல் கழகங்களில் கவுரவ உறுப்பினராகவும் செயல்பட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் அயல்நாட்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனியாகவும் பிறருடன் இணைந்தும் மொத்தம் 635 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
* 90 வயதைத் தாண்டியபோதும் அறிவியல் கட்டுரைகள் எழுதியும் ஆலோசனைகள் வழங்கியும் வந்தார். வேதியியல் மற்றும் உயிரியியல் களங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய டுடோஷ் ராயிட்டெய்ன் 1996-ம் ஆண்டு தமது 99-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago