பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியர்
இந்தி திரைப்பட முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரும் 40 ஆண்டுகளுக்கும் மேல் இந்தி திரையுலகில் புகழ்பெற்று விளங்கியவருமான ஆனந்த் பக்சி (Anand Bakshi) பிறந்த தினம் இன்று (ஜூலை 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பாகிஸ்தானின் ராவல்பின்டி நகரில் பிறந்தார் (1930). சிறு வயதிலேயே தாயை இழந்தார். தாயின் உறவினர்களிடம் வளர்ந்தார். படிப்பு பாதியிலேயே நின்றது. இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் இந்திய ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணியாற்றினார்.
* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் லக்னோ வந்தார். அங்கு டெலிபோன் ஆபரேட்டராகப் பணியாற்றினார். பின்னர் டெல்லி சென்று மோட்டார் மெக்கானிக் வேலை செய்தார். சிறுவயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், ராணுவத்தில் பணியாற்றியபோதும் கவிதைகள் எழுதினார்.
* இவரது கவிதைத் தொகுப்புகள் இந்திய ராணுவத்தின் ‘சைனிக் சமாசார்’ என்ற பத்திரிகையில் வெளிவந்தன. ராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர், பம்பாயில் இந்தித் திரையுலகில் வாய்ப்புத் தேடி அலைந்தார். நல்ல குரல் வளமும் கொண்ட இவர் முதன் முதலாக ‘மோம் கீ குடியா’ என்ற படத்தில் பாடினார்.
* அடுத்து ‘ பாகோம் மே பஹார் ஆயி’ என்ற பாடலைப் பாடினார். ‘தன் பலா ஆத்மி’ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. 1965-ல் வெளிவந்த ‘ஜப் ஜப் ஃபூல் கிலே’ என்ற படத்தில் இவர் இயற்றிய பாடல்களின் வெற்றியால்தான் இவருக்கு இந்தித் திரையுலகில் ஒரு அடையாளம் கிடைத்தது.
* பாடல்கள் எழுதுவதிலும் பின்னணி பாடுவதிலும் இந்தி திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றார். காலத்தைக் கடந்து ரசிகர்கள் மனதில் ரீங்காரமிடும் பாடல்களைப் படைத்தவர்.
* எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல்கள் எழுதுவது இவரது தனி முத்திரை. அதே சமயம் பாடலின் சூழலையும் அதனுள் ஊடுருவிக் கிடக்கும் ஆழ்ந்த உணர்வையும் இவரது பாடல்கள் அபாரமாக வெளிப்படுத்தின.
* ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட அன்றைய சூப்பர் ஸ்டார்கள் இவரது பாடல்கள்தான் வேண்டும் என வலியுறுத்தும் அளவுக்கு இவரது பாடல்கள் வசீகரமானவை. ‘அமர் அக்பர் ஆன்டனி’, ‘ஏக் துஜே கேலியே’, ‘அமர் பிரேம்’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு இவரது பாடல்களும் பங்களித்தன.
* இவர் இயற்றிய ‘ராம் கரே ஐஸா ஹோ ஜாய்’, ‘தம் மரே தம்’, ‘ஆஜ் மவுசம் படா பேயிமான்’, ‘ஹம் தும் யுக் யுக் ஸே கீத் மிலன் கீ காத்தே ஹை’, ‘தேரே மேரே பீச் மே’, ‘து சீஸ் படீ ஹை’, ‘ஐ லவ் மை இன்டியா’ உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் இன்றும் மக்கள் மனங்களில் பதிந்துள்ளன.
* சுமார் 600 படங்களில் 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். ஏறக்குறைய 40 முறை ஃபிலிம்ஃபேரின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்ட இவர், 4 முறை இந்த விருதைப் பெற்றுள்ளார்.
* இலக்கியத்திலோ, இசையிலோ பயிற்சி பெறாத இவர், தனது ஆர்வத்தாலும் மேதமையாலும் மட்டுமே 40 ஆண்டு காலம் இந்தி திரையுலகில் நட்சத்திரப் பாடலாசிரியராகப் புகழ்பெற்றார். இந்தி திரையுலகோடு இரண்டறக் கலந்துவிட்ட ஆனந்த் பக் ஷி, 2002-ம் ஆண்டு தமது 72-வது வயதில் மறைந்தார்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago