ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இந்தியா முழுவதும் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Shahjahan R
வளையல், பொட்டு, குங்குமம், செந்தூரம் - 0% ஜிஎஸ்டி; சானிட்டரி நாப்கின்கள் - 12-18% ஜிஎஸ்டி. பாரம்பரியம் முக்கியம் அமைச்சரே!
Elamathi Sai Ram
முன்பெல்லாம் ஒரு திமிர்த்தனம் இருக்கும். வேலை இல்லன்னா ஊர்ல ஒரு துண்டு நிலத்த வாங்கி பொழச்சிக்கலாம், மாடு மேய்ச்சி... ஒரு கடை வச்சி...கடலை மிட்டாய் வித்து பொழச்சிக்கலாம்னு. ஆனால் அந்த நம்பிக்கையையும் நமக்கு விட்டுத்தர இந்த அரசு தயாராக இல்லை. எப்படியாவது வாழ்ந்து கரையேற வேண்டியதான்.. !
Prem Suriyan
ஹோட்டலில் சாப்பிடப் போனால் நூறு ரூபாய்க்கு பதினெட்டு ரூபாய் ஜிஎஸ்டி வரியாம். பாவம் டிப்ஸ் கிடைக்காத சர்வர்கள்...
டி.வி.எஸ். சோமு
500,1000 நோட்டு தடை செய்யப்பட்டபோதே இந்தியா வல்லரசாகிவிட்டது. இந்த ஜி.எஸ்.டி. அமலான தினத்துடன் மேலும் வல்லரசாகிவிட்டது. #தேசத்துரோகி பட்டம் சுமக்க நான் தயாரில்லை.
Anu Chandramouli
இந்த ஜிஎஸ்டி வரி நாட்டிற்கு அவசியமான ஒன்று, ஒரு இந்தியனாக இதனை வரவேற்கிறோம், கூட்டணி அரசாங்கத்தால் இதனை நிச்சயம் கொண்டு வந்திருக்க முடியாது, அது இது என இழுத்து கிடப்பில் போட்டிருப்பார்கள்.
தனிப்பெரும்பான்மையுடன் திகழும் பாஜக அரசு இதனை செய்திருக்கின்றது, நாட்டிற்கு தேவையான விஷயங்களை செய்யும்போது பாராட்டத்தான் வேண்டும்.
Ovia Rajamoni
இந்த நாட்டில் எதை நடத்தினாலும் நள்ளிரவில்தான் நடத்துவார்கள் போல. இந்த நாட்டின் சுதந்திரம் போலவே. நேற்றும் அப்படித்தான். நள்ளிரவில் ‘ஒரே தேசம் ஒரே வரி’ என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி என்றழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்திருக்கிறது.
நமது இளைஞர்கள் சேவை மற்றும் சரக்கு வரி தொடர்பான அறிவு புதிய சுய தொழில் வாய்ப்பை வழங்கிடும் என்பதை உணர்ந்து அது தொடர்பான பட்டறிவை வளர்த்துக் கொண்டால் தன்னம்பிக்கையுடன் தொழில் உலகத்துக்குள் நுழைவதற்கு வாய்ப்பாக இருக்கும்.
H Umar Farook
'ஜி.எஸ்.டி வரியால் ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படாது'...அருண் ஜெட்லி.
Vinayaga Murugan
ஒரு பேஸ்புக் தேசபக்தர் சொன்னது:
வெளியில் கண்ட கண்ட உணவகங்களில் சாப்பிட்டு நம்ம உடம்பை கெடுத்துக்க வேண்டாமுன்னு நல்ல எண்ணத்துலதானே ஜிஎஸ்டி கொண்டு வந்திருக்காங்க. பேச்சிலர் பசங்க காலாகாலத்துல கல்யாணம் செஞ்சுகிட்டு வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்ங்கற அக்கறைதான்.
Hariharasuthan Thangavelu
ஜிஎஸ்டி என்பது பகவத் கீதை போன்றது - மோடி
நெசந்தானுங்க, படிக்கும் போது முழுசும் புரியாது,
பட்டாத்தானுங் நல்லா புரியும்.
Sivasankaran Saravanan
ஜிஎஸ்டி காரணமாக ஏசி அல்லாதஉணவகங்களில் 2லிருந்து 12 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நான் வழக்கமாக சாப்பிடும் ஹாட் சிப்ஸ் உணவகத்தில் அளவு சாப்பாடு 70 ரூபாயிலிருந்து 78 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி காரணமாக ஒரு தனிமனிதனாக நான் இன்று சந்திக்கும் முதல் இழப்பு இது. இதேபோல் ஜிஎஸ்டி யால் எனக்கு லாபம் ஏற்பட்டாலும் அதை நான் பதிவுசெய்கிறேன். இணையத்தகவல்களே ஒரு பெரும் வரலாற்று ஆவணமாக மாறக்கூடியவை..!
H Umar Farook
ஜிஎஸ்டி நம் நாட்டிற்கு கிடைத்த இன்னொரு சுதந்திரம் - பிரதமர் மோடி பேச்சு.
#நள்ளிரவில் கொடுப்பதால் மட்டும் சுதந்திரம் ஆகாது!
கிரிஷ் ராம்
மூணு வருசமா ஆட்சி நடக்குதான்னே நாங்க குழப்பமா இருக்கோம், இதுல ஜிஎஸ்டி குழப்பமா இருக்காமா. போங்கப்பு..!
Prabin Raj
இனி கையேந்திபவனுக்கு ஆதரவளிப்போம்;ஓட்டல் #டிபன் தவிர்ப்போம். #ஜிஎஸ்டி #GST
C P Senthil Kumar
சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்?- டி.ராஜேந்தர்.
ரெய்டு வந்தா நீங்க காப்பாத்துவீங்களா?- ரஜினி.
தியாகராஜன் எம்
100 ரூபா டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி 18% மாநில வரி 30% அநியாயம்ன்னா, 10 ரூபா பப்ஸ்க்கு தியேட்டர் உள்ளே முப்பது (200%) ரூபா விலை வச்சி விக்குறிங்களே அதுக்கு பேரு என்ன?
குழந்தைங்களுக்கு வாங்கிட்டு போற ஸ்நாக்ஸை பிடுங்கி வச்சிகிட்டு உள்ளே அனுப்பறிங்களே, அந்த பாவத்துக்கு இதெல்லாம் அனுபவிங்க...ன்னுதான் சொல்ல தோணுது
Sivakumar Palanisamy Gounder
ரெண்டே ரெண்டு இட்லி பில்லை வைத்து போராளிகளை காலி பண்ணலாம்.
முன்னதாக 23% வரி இருந்தது. (14.5% VAT, சேவை வரி 5.6%, செஸ் & கிரிஷ் கல்யான் 3%). இப்போ மாநிலத்துக்கு 9%, மத்திய அரசுக்கு 9%. மொத்தமே 18% தான். இதை விட சிம்பிளா உங்களுக்கு எப்படி விளக்கறது போராளிஸ்?
Saravanaprasad Balasubramanian
டீமானிடைஸேஷனுக்கும் ஜிஎஸ்டி'க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.
டீமானிடைஸேஷன் டைம்ல பொதுஜனம் எல்லாம் எகனாமிஸ்ட் ஆயிட்டாங்க.
ஜிஎஸ்டி டைம்ல எகனாமிஸ்ட் எல்லாம் பொது ஜனம் ஆயிட்டாங்க.
Abdul Hameed Sheik Mohamed
’நள்ளிரவில் சுதந்திரம்’
அது எத்தனை ஆண்டுகால கவித்துவ படிமம்
இன்று நீங்கள் அதைக் கேலிசித்திரமாக்கிவிட்டீர்கள்
அது குறித்த நினைவுகளை சிதைத்துவிட்டீர்கள்
*
நேருவின் மலரை
இன்று நீங்கள் சட்டையில் அணிந்துகொள்கிறீர்கள்
அது மக்களின் குருதி வடியும் ரோஜா என்பதை
தெரிந்துகொள்வதற்கு
அவகாசமில்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள்
Shan Karuppusamy
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிகழ்வை அடுத்து சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மாற்றமாக ஜிஎஸ்டி இருக்கும். அதைப்போலவே பெரிய அளவில் சாதக பாதகங்கள் இருக்கும். டீமானிடைசேஷனைப் போல தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக பல விஷயங்கள் மாறுகின்றன. பெரிய அளவில் உரையாடலும் விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் தேவை.
மேலோட்டமான வாட்ஸ் அப் ஃபார்வேர்டு அளவைத் தாண்டியும் அவரவர் அது குறித்து அறிந்து வைத்திருப்பது அவசியம். ஆனால் சுற்றி விசாரித்த வகையில் அந்த ரயில் வருவதே தெரியாமல் பலர் தண்டவாளத்தில் உட்கார்ந்து சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில் எஞ்சின் எப்படி இயங்கும் என்று தெரியாவிட்டாலும் ரயில் வரும்போது பிளாட்பாரத்தில் ஏறி நிற்கும் அளவுக்காவது அறிவு தேவை.
Dhivya Dhuraisamy
ஏய் ஜிஎஸ்டி... கடைசில என்னயே சமைக்க வச்சிட்டல்ல.!
#ஜிஎஸ்டி #ஹோட்டல்_விலை_அதிகரிப்பு.
அருண் குமார்
இந்த ஜிஎஸ்டி உங்களுக்கு புரியவே இன்னும் மூணு வருஷம் ஆகும்.. அதுக்குள்ள மறுபடியும் நான் ஜெயிச்சிருவேன்.
Boopathy Murugesh
ஜிஎஸ்டி என்பது பகவத் கீதை போன்றது - மோடி
மக்கள் : ஐயா... வாங்குன சம்பளமெல்லாம் வரி கட்டியே போச்சுயா..
மோடி : எதை நீ கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? (கீதை)
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
18 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago