ராபர்ட் ஹூக் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

 இங்கிலாந்து அறிவியலாளர் 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளரும், கணித அறிஞரும், கண்டுபிடிப்பாளருமான ராபர்ட் ஹூக் (Robert Hooke) பிறந்த தினம் இன்று (ஜூலை 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தில் ஃபிரஷ்வாட்டர் என்ற இடத்தில் பிறந்தார் (1635). சிறுவயது முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிச் செல்லவில்லை. வீட்டிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. ஓவியம் தீட்டுவதில் சிறந்து விளங்கினான் சிறுவன்.

* 1648-ல் தந்தை இறந்துவிடவே, தனக்குக் கிடைத்த கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு லண்டன் சென்று, ஒரு பள்ளியில் தானாக சேர்ந்து கொண்டார். அங்கு கிரேக்கம், லத்தீன், இயந்திரங்கள், அறிவியல், கணிதம் கற்றார். 1655-ல் பிரபல விஞ்ஞானி ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.

* இயந்திரங்கள் வடிவமைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். இயந்திரவியலில் அடிப்படையில் கோள்களின் இயக்கங்களை ஆராய்ந்தார். புவியீர்ப்பு விதியுடன் தொடர்புடைய பல விதிகளையும் உருவாக்கினார். நடைமுறையில் பயன்படுத்த முடிகிற வகையில் தந்தி முறையை உருவாக்கினார்.

* முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் இவர்தான் வடிவமைத்தவர். ஸ்பிரிங்கின் நீள் தன்மையை விவரிப்பதற்கான ஒரு சமன்பாட்டைக் கண்டறிந்தார். இது ‘ஹூக் விதி’ எனக் குறிப்பிடப்படுகிறது. உயிர்வாழ் இனங்கள், சிறு, சிறு பூச்சிகள், தாவரங்களை ஆராய விரும்பினார். அப்போது நுண்ணோக்கி ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தாலும் மிகவும் அரிதாகவே அது பயன்படுத்தப்பட்டு வந்தது.

* அதில் ஒரு பொருளை நூறு மடங்கு அதிகமாக்கி ஃபோகஸ் செய்து காண்பதும் மிகவும் கடினமானதாக இருந்தது. அதை ஆராய்ந்து தன்னால் அதை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி, 1662-ம் ஆண்டு அதை முன்னூறு மடங்கு பெரிதாக்கிக் காட்டும் வகையில் வடிவமைத்தார். அதன் வழியாக தேனீக்களின் கண்கள், வண்ணத்துப் பூச்சிகளின் இறகுகள் என அனைத்தையும் ஆராய்ந்தார்.

* ஒரு தக்கையை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்து கொண்டிருந்த சமயத்தில் அதில் தேன்கூட்டில் இருப்பது போல சிறு சிறு அறைகள் இருப்பதைக் கண்டார். அவற்றுக்கு ‘செல்கள்’ எனப் பெயரிட்டார். ‘மைக்ரோஸ்கிராவியா’ என்ற நூலை எழுதினார். இதில் தாவரத் திசுக்களின் நுண்ணமைப்பு பற்றி எழுதியுள்ளார்.

* நுண்ணோக்கி வழியாகப் புதைபடிவங்களை முதன்முதலில் ஆராய்ந்தவரும் இவர்தான். வானியல் குறித்து ஆராய்வதற்காக ‘ரிஃப்ளெக்டிங் டெலஸ்கோப்பை’ உருவாக்கினார். செவ்வாய், வியாழன் கிரகங்களை ஆராய்ந்து, படங்களை வரைந்து விளக்கங்களையும் எழுதினார். இவை 200 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கிரகங்கள் சுழலும் வேகத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டன.

* இதுவரை வாழ்ந்தவர்களிலேயே அதிக விஷயங்களைக் கண்டுபிடித்த ‘புதுமைப் புலி’ எனப் போற்றப்பட்டார். ‘டாக்டர் ஆஃப் ஃபிசிக்ஸ்’ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. ‘ராயல் சொசைட்டி ஆஃப் லண்டன்’ அமைப்பில் அறிவியல் ஆராய்ச்சிகளின் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

* இன்றைய மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் ஜாயின்ட், கேமராவின் அமெச்சுர் அளவை மாற்றி அமைக்க உதவும் ஐரிஷ் டயாஃபரம், கடிகாரங்களில் இருக்கும் பேலன்ஸ் வீல் ஸ்பிரிங் கன்ட்ரோல், காற்றடிக்கும் பம்ப் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய சாதனையாளர் ஆவார்.

* இயற்பியலாளர், வேதியியலாளர், உயிரியியலாளர், புவியியலாளர், கட்டிடக்கலை வல்லுநர், வான் ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ராபர்ட் ஹூக், 1703-ம் ஆண்டு தமது 68-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்