வானில் தோன்றும் மேகங்களைப் பார்ப்பது என்பது எப்போதுமே உற்சாகம் தரும் விஷயம். பரந்த நீல வானத்தில் வெள்ளை மண்டலமாக மிதக்கும் மேகங்கள், பார்ப்பவர்களுக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லும்.
மேகங்களில் பல வகைகள் உண்டு. அவை அமைந்திருக்கும் உயரம், தோன்றும் விதம், அவற்றின் அமைப்பு என்று பல அம்சங்களைப் பொறுத்து அவற்றை வகைப்படுத்தியுள்ளனர் நிபுணர்கள்.
அவர்களின் கணக்குப்படி மேகங்களில் 90-க்கும் அதிகமான வகைகள் உள்ளன. எது எந்த வகை மேகம் என்று சுலபத்தில் அறிந்துகொள்ளும் வகையில் சர்வதேச வானிலை அமைப்பு (World Meteorological Organization) பல வகையான மேகங்களின் படங்கள் அடங்கிய அட்லஸை வெளியிட்டுவருகிறது. இதற்கிடையே, தான் குறிப்பிடும் மேகத்தை அந்த அட்லஸில் தனி வகை மேகமாகக் குறிப்பிட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகிறார். அவர் பெயர் காவின் பிரிடோர் பின்னி. பிரிட்டன்காரர்.
அந்த மேகத்தின் பெயர் அண்டுலாடஸ் அஸ்பெராட்டஸ் (Undulatus Asperatus). கொந்தளிக்கும் மேகம் என்பது அதன் அர்த்தம். அவராகவே வைத்த பெயர் அது. பொதுவாக மேகங்களுக்கு லத்தீன் மொழியில் பெயர் வைப்பதுதான் வழக்கம். ஆகவே, லத்தீன் மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் பிரிடோர் பின்னி அந்த மேகத்துக்கு அந்தப் பெயரை வைத்தார்.
உண்மையில் பின்னி வானிலை நிபுணர் அல்ல. அவர் ஒரு எழுத்தாளர். கிராபிக் டிசைனர். அவரும் நம்மைப் போலவே மேகங்களைக் கவனிக்கும் பழக்கம் கொண்டவர். மேகங்கள் ஆலமரம் மாதிரி, காளை மாடு மாதிரி, சிங்கம் மாதிரி எல்லாம் சிறிது நேரம் தோற்றமளிக்கும். இப்படியான பல வித உருவங்களிலான மேகங்களின் புகைப்படங்களைச் சேகரிக்கலானார் பின்னி.
விரைவிலேயே உலகில் அவர் போலவே பலரும் மேகங்களின் உருவங்களைப் படம் எடுத்து அவருக்கு அனுப்பலாயினர். அவர் அமைத்த மேக ரசிகர் சங்கத்தில் இன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.
மேகங்களின் விசித்திர உருவங்கள் மீது பின்னி ஆர்வம் காட்டியதுடன் நில்லாமல் ஒரு படி மேலே போய் மேகங்களின் வகைகள் மீதும் கவனம் செலுத்தினார். அந்த வகையில் தான் அவர் அண்டுலாட்டஸ் அஸ்பெராட்டஸ் மேகத்தை ஆராயலானார். பலரும் அவருக்கு அந்த வகை மேகத்தின் படங்களை அனுப்பினர். இது சாதாரண அண்டுலாட்டஸ் மேகம் போன்றது அல்ல என்று அவருக்குத் தோன்றியது. ஆகவேதான் சர்வதேச வானிலை சங்கத்துக்கு இதுபற்றி எழுதினார்.
சர்வதேச வானிலை அமைப்புதான் மேகங்களை வகைப்படுத்துகிறது. அந்தச் சங்கம் ஐ.நா. அமைப்பின் ஓர் அங்கமாகும். அது நீண்டகாலமாக மேகங்களை வகைப்படுத்தி அவற்றின் படங்கள் அடங்கிய அட்லஸை வெளியிட்டுவருகிறது. கடைசிப் பதிப்பு 1987 ஆம் ஆண்டில் வெளி யிடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் அந்த அட்லஸில் புது வகை மேகம் எதுவும் சேர்க்கப்படவில்லை.
மேகங்களின் அட்லஸின் அடுத்த பதிப்பு விரைவில் தயாரிக்கப்படலாம். அதில் பின்னி கூறும் மேகம் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அட்லஸில் அந்த மேகம் இடம்பெறுவதால் பின்னிக்கு என்ன லாபம்? ஒரு லாபமும் இல்லை. தான் குறிப்பிட்ட மேகம் தனி அந்தஸ்து பெற்றுவிட்டது என்ற திருப்திதான். மேகங்களின் மீது மோகம் கொண்ட ஒரு தனி மனிதருக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்?
http://www.ariviyal.in/
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago