வெகுநாட்களுக்குப் பின்னால் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷே கம், சென்னைப் பட்டணத்தில் வந்திறங்கினார். ரயிலேறி வந்த களைப்பு முகத்தில் அப்பியிருந்தது. வாசலில் நுழைந்தபோது பரபரவென வெளி யேறிக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.
ரத்னாபிஷேகம் பிள்ளையின் முகம் பார்க்காமலே, "வாங்க கணக்கு…" வரவேற்றவன், தலை கவிழ்ந்தவாறு காலணிகளை மாட்டினான்.
இத்தனை நெருக்கத்தில் கஜேந்தி ரனைப் பார்த்திராத பிள்ளைவாள், "அய்யா… நல்லா இருக்கீங்களா..?" சந்தோஷம் பொங்கக் கேட்டார்.
விசாரிப்புகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன், "உள்ளே போங்க... பாட்டி இருக்காங்க. நான் அவசரமா வெளியே போறேன்…" எனச் சொல்லிக் கொண்டே, வாசலில் நிற்கும் வெள்ளை நிற காரை நோக்கி நடந்து போனான்.
முன்னே நடக்கவிட்டு அவனது பின்னழகைப் பார்த்த ரத்னாபிஷேகம் பிள்ளை, உறைந்து போய் நின்றார். இதுநாள்வரை கஜேந்திரனைக் கண் குளிரப் பார்க்கவிட்டதில்லை வெள் ளையம்மா கிழவி. 'இப்படி ஒரு மகனைப் பெற்ற பொம்மி… இருந்து வாழ முடியாமல் போய்விட்டாளே. காலச் சுழி எப்படியெல்லாம் விளை யாடுது'
வாசலையே பார்த்துக் கொண்டிருந்த வரை, "வாங்க கணக்குப்பிள்ளை...'' வீட்டின் மைய அறையிலிருந்து வெள்ளையம்மாவின் குரல் திருப்பியது.
"கும்பிடுறேன் தாயீ…" கொண்டு வந்திருந்த கைப் பையை இருக்கையின் மீது வைத்தார்.
எதிர் இருக்கையைக் காட்டி, "உக்காருங்க…" என்றதோடு தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
"இருக்கட்டும் தாயீ…" உள் தொண்டையில் பேசியவர், இருக்கை யின் நுனியில் ஒடுங்கி அமர்ந்தார்.
சேலை முந்தானைத் தலைப்பால் கழுத்து வியர்வையை ஒற்றியவள், "ஆவணி மாசம்… வெக்கையைப் பாருங்களேன். சித்திரை, வைகாசி மாதிரில்லே வேவுது!" உதடு குவித்து மூச்சுவிட்டாள்.
கணக்குப்பிள்ளை, பாதி வாய்க் குள்ளும் பாதி வெளியிலுமாக பேசினார். "இந்த வேக்காடெல்லாம் பட்டணக் கரையிலேதான். நம்ம ஊரு எப்பவும் போல 'குளு குளு'ன்னுதான் இருக்கு!"
பிள்ளைவாள் பேச்சில் ஊரைத் தொட்டுப் பேசியதும் வெள்ளை யம்மாவின் கண்களில் வெறுமை மிதந்தது.
"அது கெடக்கட்டும். வேற என்ன விசேஷம்?" பேச்சுத் தடத்தை மாற்றி னாள்.
"ஏகப்பட்ட விசேஷம் இருக்கு தாயீ..!"
ரத்னாபிஷேகம் பிள்ளையை ஊன்றிப் பார்த்தாள்.
"பதினாறு வருஷமா நின்னு போயி ருந்த பெருங்குடி இருளப்பசாமி கோயில் திருவிழா, இந்த வருஷம் நடக்கப் போகுது!"
மூச்சுக் காட்டாமல் செவி கொடுத் தாள்.
"அரண்மனையை ஏதோ ஆவி பிடிச்சு ஆட்டுதாம். இருளப்பசாமிக்கு இருபத்தியோரு கிடாய் வெட்டி பரிகாரம் தேடணுமாம். வயசுக்கு வராத ஏழு சின்னப் பொண்ணுகளைச் சாமி யாக்கி, காப்புக் கட்டி, முளைப்பாரி வளர்க்கிறாங்க. வைக்கோல் பிறி சுத்தி வாளெடுத்து ஆடிவர, நேர்த்திக்கடன் வெச்சு இளவட்டங்கள் விரதம் இருக் கானுங்க. ஊரே திருவிழா கோலம்தான்! ஒரே ஒரு குறை மட்டும் இருக்கு" நிறுத்தினார்.
வாய் திறக்காமலே, 'என்ன குறை?' எனக் கேட்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள்.
"தாயீ… நீங்க வந்து தலை காட்டுனீங் கன்னா, அரண்மனைக்குப் பரிகாரம் கிட்டும்." பதறிப் பதறிச் சொல்லிவிட்டார்.
"கணக்கு…!" தீக்கங்காய் பார்த்தாள்.
"மன்னிக்கணும் தாயீ. அரண் மனைக்குள்ளே ஆயிரம் குத்தம் குறை இருக்கு. இருந்தாலும் இது 'சாமி' காரியம். வாழப் போற உங்க பேரப் பிள்ளை கஜேந்திரனுக்குக் குலசாமி கடாட்சம் வேணும். உங்க உப்பைத் திங்கிற எனக்கு, இதைச் சொல்ல வேண் டிய பொறுப்பும் கடமையும் இருக்கு தாயீ..."
இருக்கையை விட்டு எழுந்த வெள்ளையம்மா, புறங்கைகளைக் கட்டிக் கொண்டு யோசனையில் நடை போட்டாள். அரை பாதி தலை கவிழ்ந்தி ருந்த கணக்குப்பிள்ளை, விழிகளை மட்டும் மேலுயர்த்தி இமையாமல் வெள்ளையம்மாவைப் பார்த்தார்.
நின்றவள், திரும்பிச் சொன்னாள். "பத்தாம் நாள் திருவிழாவுக்கு நான் மட்டும் பெருங்குடிக்கு வருவேன். அரண்மனைக்குள் நுழைய மாட்டேன். திருவிழா முடிஞ்சதும் சென்னைப் பட்டணத்துக்குக் கிளம்பிருவேன்."
"நீங்க மட்டுமா… நம்ம சின்னவரு?"
"கஜேந்திரன் வர மாட்டான். இருபது வருஷமா அவன் மேலே படாத அந்த ஊர்க் காத்து, இனிமேலும் பட வேண் டாம்." மறுபுறம் திரும்பினாள்.
ஒற்றை
ஆளாய் ஓடியாடித் திரிந்தான் தவசியாண்டிக் கோடாங்கி. குடிசைக்கு நேர் எதிரே இருபதடி தூரத்தில், இடுப்பளவு மண்சுற்றுக் கோட்டையை எழுப்பியிருந்தான். வெட்டிக் காயப் போட்டிருந்த பச்சைப் பனை ஓலை கள் வெயிலில் இளமஞ்சள் நிறத் துக்கு முறுகி இருந்தன. பல கன, உயர மூங்கில்கள் காய்ந்து கொண் டிருந்தன. கீறிப் பிளந்தத் தெப்பை களாகவும் மலர்ந்திருந்தன. கிடுகுகளாக வணையப்பட்ட தென்னங்கீற்றுகள், அம்பாரமாகக் குவிந்திருந்தன. பாதித் திண்ணையை அடைத்து, தென்னம் பாளை ஈக்கிகளும் மணிக்கயிறுகளும் குத்தூசியும் சாற்றிக் கிடந்தன.
குடிசை வாசலில் அமர்ந்து, ஏதும் புரியாதவளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. மண் குழைக்க, குடம் குடமாய் ஓடைநீர் அள்ளி வந்ததோடு சரி.
"இன்னொரு குடிசை எதுக்குப்பா? யாருக்குப்பா?"
தவசியாண்டி வாய் திறக்கலே.
கப்பலின் மேல் தளத்திலிருந்து, ஸ்காட்டையும் சைமனையும் பார்த் துக் கொண்டிருந்த ஊமையன் துரை சிங்கம், இரும்பு ஏணிப் படிகளில் விறுவிறுவென கீழிறங்கினான். நடுப் பகுதி அறைகளைக் கடந்து ஓடினான். அரியநாச்சி, உட்தாழ்ப்பாள் இட்டிருந்த அறைக் கதவைத் தட்டினான். திறக்கும் வரை தட்டினான். திறந்ததும் உள்ளே நுழையாமலே, அரியநாச்சியின் வலது கையைப் பிடித்து வெளியே இழுத் தான்.
"ஏய்… துரைசிங்கம்! என்னாச்சு உனக்கு?" கையை உதறிவிட்டு, துரை சிங்கத்தை உள்ளே இழுத்தாள். கதவை பூட்டினாள்.
ஊமையன், கப்பலின் நடுப்பகுதி அதிர கத்தினான்.
'ஹ்ஹா… ஆஹ்… ஹ்வ்… ஹா…'
அரியநாச்சி மிரண்டு போனாள்.
கதவை திறந்தான். அரியநாச்சியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இரும்பு ஏணியை நோக்கி ஓடினான். இரண்டு, இரண்டு படிகளாகத் தாவி ஏறி மேல்தளத்துக்கு வந்ததும் கப்பலின் ஓரம் பார்த்தான்.
படியேறி வந்து சேர்ந்த அரியநாச்சி, துரைசிங்கத்தின் பார்வை பதிந்த இடம் நோக்கினாள்.
யாரையும் காணோம்.
சுற்றிலும் கடல்.
- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
irulappasamy21@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago