தன்னுடைய ஆர்ட் கேல ரிக்கு புதிதாக விற் பனைக்கு வந்திருக்கும் கலைப் பொருட்கள் குறித்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பத்திரிகைகளில் பளிச் படங்களோடு விளம்பரம் செய் வது கபூரின் வழக்கம். அந்த விளம்பரங்களில் சிலவும், தமிழகக் கோயில்களில் இருந்த சிலைகள் கபூர் கேலரியில் இருந்த தைக் காட்டிக் கொடுத்தன. சஞ்சீவி அசோகன் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து ‘லேப்டாப்’ ஒன்றையும் போலீஸ் கைப்பற்றியது. ஆனால், அதில் இருந்து தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக(?) பின்னர் தெரிவித்த போலீஸார், ‘லேப்டாப் ஹார்டு டிஸ்க்கை டெல்லி வரைக் கும் எடுத்துச் சென்றும், அழிந்த தகவல்களை மீட்க முடியவில்லை’ என்று கைவிரித்துவிட்டார்கள்.
தொடர் விசாரணையில், சஞ்சீவி அசோகனிடம் இருந்து சுபாஷ் கபூரைப் பற்றிய திடுக்கிடும் பல தகவல்கள் கிடைத்தாலும், அவர் இருக்கும் திசையைத் தெரிந்துகொள்வதற்குக் கூட நம்மூர் போலீஸ் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், கபூருக்கு நெருக்கமான சிங்கப்பூர் பெண்மணி ஒருவர்தான் கபூரைப் பற்றிய ரகசியங்களை தானே முன்வந்து கொட்டினார்.
கபூருக்கு பல்வேறு நாடு களைச் சேர்ந்த பெண் தோழி களோடு வர்த்தக தொடர்புகள் இருப்பதாகச் சொல்கிறது போலீஸ். சிங்கப்பூரில் ஆர்ட் கேலரி நடத்தும் தமிழ் பெண்மணி ஒருவருக்கும் கபூருக்கும் வியாபாரத் தொடர்புகள் உண்டு. ஒருகட்டத்தில், இவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்துக்காக பிரச்சினை வெடிக்க, தன் னிடம் வாங்கிய சிலைகளுக் குப் பணம் தர மறுப்பதாக அந்தப் பெண்மணி மீது வழக்குப் போட்டார் கபூர்.
அந்த வழக்கில் தனக்குப் பாதகமான தீர்ப்பு வந்ததால் கோபமுற்ற சிங்கப்பூர் பெண் மணி, கபூரை காட்டிக் கொடுக்கவும் துணிந்தார். அவர் தான் கபூரைப் பற்றிய ரகசிய தகவல்களையும் அவரது பாஸ்போர்ட் எண், லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளிட்ட தகவல் களை தமிழக போலீஸ், இந்திய தொல்லியல் துறை, அமெரிக் காவின் ஹோம்லேண்ட் செக் யூரிட்டி போலீஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ரகசியமாக அனுப்பி இருக்கிறார். '
சிலை கடத்தல் புகாரில் சிக்கிய சென்னை தீனதயாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட கற்சிலைகள்
2011 அக்டோபரில் ஜெர்மனி யின் ‘கெலோன்’ நகருக்கு அருகே ‘ஸ்டுட்கார்ட்’டில் (Stuttgart) நடைபெறும் கலைப் பொருள் கண்காட்சிக்காக கபூர் ஜெர்மனி வரவிருக்கும் தகவலையும் முன் கூட்டியே ஜெர்மனி ‘இண்டர் போல்’ அமைப்புக்குச் சொன் னதும் அதே பெண்மணி தான். இவர் கொடுத்த தகவல் களை வைத்து விசா ரணையை விரித்த அமெரிக்க போலீஸார், கபூரை கைது செய்து அவரது கடத்தல் சாம்ராஜ்யத்தை அடியோடு வீழ்த்தும் சூழலை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், அதற்குள்ளாக ஜெர்மனி ‘இண்டர்போல்’ உதவி யுடன் கபூரை வளைத்துவிட்டது தமிழக போலீஸ். அமெரிக்க போலீஸ் கையில் கபூர் சிக்கி யிருந்தால் அவரது ‘நெட்வொர்க்’ என்னவென்று இந்நேரம் முழுமை யாக வெளிவந்திருக்கும். தமிழக போலீஸ் கையில் சிக்கியதால் நான்கு ஆண்டுகளாகி யும் கபூரின் மர்ம சரித்திரம் இன்னும் வெளிச்சத்துக்கு வராமலேயே இருக்கிறது. விசாரணையில் கபூர் அளித்த வாக்குமூலமும் இதுவரை வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது.
இதனிடையே, ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட கபூரை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவு போலீஸார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மேற்கொண்டார்கள். இது தொடர் பாக கடிதத் தொடர்புகள் நடந்து, பூர்வாங்க நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குள்ளாக ஐந்து மாதங்களை விழுங்கிவிட்டது நமது அரசு இயந்திரத்தின் அசுர வேக(!) இயக்கம்.
அதுவரை சும்மா இருக்குமா கடத்தல் மாஃபியா? ‘ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட கபூரை ஐந்து மாதங்களாக சட்டவிரோத காவலில் வைத்திருக்கிறார்கள். எனவே, அவருக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று சென்னை நீதிமன்றத்தில் கபூருக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஒரு மனு தாக்கலானது தெரிந்ததுமே ஜெர்மனி போலீ ஸார் ஆடிப் போனார்கள். ‘சட்டவிரோத காவல்’, என்று சொல்லி தங்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு வந்துவிடுமோ என்பதே அவர் களின் அச்சம்.
அந்த சமயத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மட்டும் சிலைக் கடத்தல் தடுப்பு (சி.ஐ.டி.) பிரிவில் இல்லாமல் போயிருந்தால், கபூர் இந்நேரம் வெளியில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருப்பார். கபூர் தரப்பில் தாக்கலான மனுவுக்கு உடனடியாக பதில் தந்த பொன்.மாணிக்கவேல், கபூரை தமிழகம் கொண்டுவர எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை உரிய முறையில் நீதிமன்றத்துக்கு புரியவைத்தார். இதை ஏற் றுக்கொண்டு, பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.
சுபாஷ் சந்திர கபூர் ஜெயகொண்டம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது...
2011-ல் கபூர் கைதானதுமே ‘கபூரிடம் கடத்தல் சிலைகள், கலைப் பொருட்களை வாங்கியவர் கள் அதை உடனடியாகத் தெரிவிக்கவும்’ என அமெரிக்க அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், கபூரிடம் சிலைகளை வாங்கி வைத்திருப்பவர்களில் ஒருவர்கூட மூச்சுக் காட்டவில்லை. அதே சமயம், கபூர் கைது செய்யப்படுவதற்கு இரண்டரை மாதங்கள் முன்னதாக 8.8.11-ல் இங்கே தமிழக சிலைக் கடத் தல் தடுப்பு (சி.ஐ.டி) பிரிவு போலீஸார் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் பல மர்மங்கள் மறைந்திருந்தன.
- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project' உதவியுடன்
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 11: தனது முயற்சியில் தளராத காவல்துறை!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago