சினிமாவுக்குள்ளே வரும்போது எது வுமே தெரியாமல் வந்து, அப்புறமா நடனம், சண்டை, நடிப்புன்னு எல் லாத்தையும் சிறப்பாகச் செய்து, நிறையப் பேர் நல்ல பெயர் எடுத்திருக்காங்க. அதே மாதிரி சில நேரத்தில் நல்லா சண்டை போடுறவங்களோ, நல்லா டான்ஸ் ஆடுறவங்களோ நடிக்க வரும்போது, ரசிகர்கள் அவங்க நடிப்பை ஏத்துக்குறதுக்கு கொஞ்சம் கால அவகாசமும் தேவைப்படுது.
நானும் முதல் மூணு, நாலு படங்களில் நடிக்கும்போது கஷ்டப்பட்டிருக்கேன். ‘மின்சாரக் கனவு’ படத்தில் இருந்து கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டேன். அடுத் தடுத்து கேஷுவலா நடிக்க ஆரம்பிச் சிட்டேன். இருந்தாலும், ‘நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க சார், சூப்பர்!’ன்னு யாரும் சொல்லி நான் கேட்டதே இல்லை.
ஆனா, போகப் போக என்னோட பாடி லாங்க்வேஜ் ரொம்ப ஃப்ரீயா ஆயி டுச்சு. என்னோட படம் வரும்போது ஃபிரெண்ட்ஸ்கிட்டே, ‘‘என்னடா படம் எப்படி இருக்கு; நல்லா பண்ணியிருக் கேன்ல?’’ன்னு கேட்பேன். அதுக்கு அவங்க நல்லா இருக்குன்னும் சொல் லாம, நல்லா இல்லைன்னும் சொல்லாம ‘‘ஓ.கேடா!’’னு சொல்வாங்க. ‘அடப்பாவி களா! எவ்வளவு கேஷுவலா, ஹாலிவுட் ஸ்டைல்ல நடிச்சிருக்கேன். இந்த மாட சாமிங்களுக்கு இது புரிய மாட்டேங் குதே’ன்னு, சின்ன வயசுல நாம எப்படி பேசுவோம்…. அந்த மாதிரி, என்னை நானே ஜாலியாப் புகழ்ந்துப்பேன்.
எப்ப வுமே எம்.ஜி.ஆர் ஸ்டைல் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப கேஷுவலா, ஸ்டைலிஷா, எளிமையா இருக்கும். அதே மாதிரி இந்தியில் சஞ்சீவ்குமார் சார் ஸ்டைல், மலையாளத்தில் மோகன் லால் சார், கன்னடத்தில் ராஜ்குமார் சார் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். அதுக்காக அவங்களை நான் ஃபாலோ செய்வ தில்லை. இவங்க எல்லாருமே காமெ டியோ, எமோஷனலோ, ரொமான்ஸ் ஸீனோ… எது செய்தாலும் கேஷுவலா, அது ஒரு டைப்ல இருக்கும்!
‘பெரிய டாக்டர்’ ஆகிட்டேன்...
‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘வானத்தைப்போல’படங்களில் டாக் டரா நடிச்சிருப்பேன். அதிலும், ‘பெண் ணின் மனதைத் தொட்டு’ படத்தில் இந்தியாவிலேயே பெரிய டாக்டர். ஏன்னு தெரியலை; அந்த நேரத்தில் என்னை டாக்டர் கேரக்டருக்கு நிறையப் பேர் யோசிச்சிருக்காங்க. இதை ஃபிரெண்ட்ஸ்கிட்டே சொல்லும்போது கூட, ‘‘டேய் நீங்க படிச்சு என்னத்த கண் டீங்க? என்னை பார்த்தீங்களா, இந்தியா விலேயே பெரிய டாக்டராயிட் டேன்!’’ன்னு சொல்வேன். அதுக்கு அவங்க, ‘‘உன்னை எப்படிடா டாக்டரா யோசிச்சாங்க!’’ன்னு கேட்டு சிரிப்பாங்க.
‘வானத்தைப்போல’ படத்தில் டாக் டரா நடிச்சப்போ, டைரக்டர் விக்ரமன் சார் என்னோட கெட்டப்பைப் பார்த்து சிரிச்சிட்டார். ‘‘என்ன சார் இப்படி சிரிக் கிறீங்க?’’ன்னு கேட்டேன். ‘‘உங்களை டாக்டரா யோசிச்சுப் பார்த்தேன்’’ன்னு சொன்னார். ‘‘ஐயையோ… ஏன் சார் ஓ.கேதானே?’’ன்னு கேட்டேன். ‘‘ஓ.கே தான்!’’ன்னு சிரிச்சிட்டே சொன்னார். டாக் டரோ, போலீஸோ, வேலைக்காரனோ, ரவுடியோ அந்தந்த வேலையை செய்து பார்த்துட்டு யாரும் வந்து நடிக்கிறது இல்லை. நமக்கு அந்த நேரத்தில் என்ன தோணுதோ, அந்த மாதிரிதான் செய்ய முடியும். அப்படித்தான் கேஷுவலா நான் படங்களில் நடிச் சிட்டிருக்கேன்.
ஒரு கேரக்டர் செய்யும்போது ‘இந்த தடவை பயங்கரமா எல்லார்கிட்டேயும் பேர் எடுக்கணும்’னு நினைச்சு, நடிச்சதே இல்லை. என்ன கொடுக்குறாங்களோ, அதில் நான் ரியலா இருந்தா எப்படி செய்வேனோ, அப்படித்தான் செய்வேன். நான் நடிக்கிற படத்தை பார்த்துட்டு, ‘‘நீங்க ரொம்ப நல்லா காமெடி செய்றீங்க. டான்ஸ் ஆடறீங்க, சண்டையும் நல்லா வருது!’’ இப்படித்தான் சொல்வாங்க. அப்போ, ‘காமெடி நடிப்பு இல் லையா?’ன்னு எனக்கு நானே யோசிச்சிப் பேன். ‘சரி ஒ.கே! இவ்வளவாவது பாரட்டு றாங்களே’ன்னு சந்தோஷப் பட்டுப்பேன்.
அந்த மாதிரி நேரத்தில்தான் இயக்கு நர் மகேந்திரன் சார் ஒரு பேட்டியில என்னைப் பத்தி சொல்லியிருக்கார்னு ஒரு ஃபிரெண்ட் சொன்னான். ‘‘அப்படியா! என்ன சொல்லியிருக்காங்க?’’ன்னு கேட் டேன். அவருக்குப் பிடித்த நடிகர்களில் நீயும் ஒருத்தன்னு சொல்லியிருக்கார்னு சொன்னான். ‘‘டேய்… உனக்கு என்னடா ஆச்சு? வேற ஏதோ பேட்டியைப் படிச்சிட்டு சொல்றடா நீ?’’ன்னு சொன்னேன். உடனே அவன், ‘‘சீரியஸாடா. நீ வேணும்னா பேட்டியைப் படிச்சிப் பாரு!’’ன்னு சொன்னான். அப்புறமா படிச்சுப் பார்த்தேன். அவரோட பேட்டியில்தான் அப்படி வருதான்னு, திரும்பத் திரும்பப் பார்த்தேன். ஏன்னா, சில தடவை பக்கங்கள் ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டு இருக்கும். அதனால் பக்கத்தோட நம்பரைக்கூட பார்த்தேன். சரியாதான் இருந்தது.
நான் கேட்டது நிஜம்தானா?
எல்லோரும் மதிக்கக்கூடிய பெரிய இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன் சார். அவரோட ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப் பூக்கள்’னு பல படங்கள்ல அப்பா டான்ஸ் மாஸ்டரா வேலை பார்த்திருக்கார். அது வரைக்கும் யாரும் இப்படி என்னோட நடிப்பை பிரத்தியேகமா குறிப்பிட்டுச் சொன்னது இல்லை. அதுவும் அவ் வளவு பெரிய இயக்குநர், அப்படிச் சொன் னதும் சந்தோஷத்தோடும், மரியாதை நிமித்தமாவும் அவரை சந்திக்கலாம்னு போயிருந்தேன்.
அப்போ அவர், ‘‘பிரபு என்னிடம் யாராவது நடிக்கணும்னு புதுசா வந்தாங்கன்னா, பிரபுதேவா எப்படி கேஷுவலாப் பண்றார் பாருங்கன்னு, சொல்லி அனுப்பியிருக்கேன்!’னு சொன் னார். அவர் அப்படிச் சொன்னது எவ் வளவு பெரிய பரிசு! நான் கேட்டது நிஜம் தானா? இன்னும் ரெண்டு, மூணு முறை அவர் சொல்லக் கேட்டுக்கலாமான்னும், அந்த இடத்தில் தோணிச்சு. அதை கேட்க பக்கத்துலேயும் பெரிய ஆளுங்க யாருமே இல்லையேன்னும் தோணிச்சு. தெரிஞ்சிருந்தா என் ஃபிரெண்ட்ஸ் யாரை யாவது கூட்டிட்டுப் போயிருக்கலா மேன்னும் நினைச்சேன்.
இந்தியில ‘ஏபிசிடி’ பார்ட் ஒன் செய் தேன். நல்ல பெயர் கிடைச்சது. எப்ப வுமே நான் நடிக்கிறப்ப என்னைப் பார்ப் பதைவிட பக்கத்தில் இருக்கிறவங்க, அதுக்கு எப்படி ரியாக்ட் செய்றாங்கன்னு தான் பார்ப்பேன். நான் அழ வேண் டிய ஸீன்ல அழுது நடிக்கிறப்ப அதுக்கு மத்தவங்க எப்படி ரியாக்ட் செய்றாங் கன்னும் பார்ப்பேன். ஒரு மாதிரி வெட் கமா இருக்கும். ஏன்னா, நாம் சரியா செய்திருக்கோமா? இல்லையான்னு பெரிய ஸ்க்ரீன்ல தெரிய மாட்டேங்குது. சின்ன விஷயம் ஸ்கிரீன்ல பெருசா தெரியுது. அதே மாதிரி சின்ன தப்பையும் பெருசா காட்டுது.
அதனாலயே அதில் பார்க்க பயப்படுவேன். ஆனா, இந்தியில் ‘ஏபிசிடி 2’ நடிக்குறப்ப நடந்த ஒரு சம் பவம் இப்போ நினைவுக்கு வருது. படத் தில் ஒரு சோகமான ஸீன். அமெரிக்காவில் இருக்கும் என் மகனைப் பார்க்கப் போவேன். அவன்கூட நின்னு போட்டோ எடுக்குற மாதிரி ஸீன். கேஷூவலா செய்தேன்.
அந்தக் காட்சியை நடிச்சு முடிச்சப்ப, எனக்கே ரொம்ப நல்லா பண்ணிட்டோம்னு உள்ளுக்குள்ளே ஒரு அடி அடிச்சுது. படம் வந்தப்ப பார்த்தேன். முதன்முறையா வாழ்க்கையில நான் நடிச்சு எனக்கே பாதிப்பு ஏற்படுத்தின ஸீன் அது! வேற யாராவது ஒரு சோக மான ஸீன் பண்ணும்போது நம்மை அறி யாமலே அழுகை வரும் தெரியுமா? அந்த மாதிரி எனக்கும் இருந்தது. படத்தை பார்த்துட்டு மூணு, நாலு பெரிய நடிகர்கள் போன் செய்து, அந்தக் காட்சியை குறிப்பிட்டுப் பாராட்டுனாங்க.
சாதாரணமா நாம் திரும்பும்போதும், நடக்கும்போதும் ஒரு மாதிரி இருப்போம். அதுவே கேமரா ஓடுறப்ப நடை, பார்வை, சிரிப்பு இதெல்லாமே வேற மாதிரியிருக்கும். இதெல்லாத்தையும் நான் தவிர்த்தேன். அதே மாதிரி ஹைஸ்பீடுன்னா ஒரு நடை இருக் கும். நான் அதற்கும் இப்போ என்னை மாத்திக்கிறது இல்லை. கேமராவைப் பார்த்ததும் ஆர்வத்தில் நிறைய செய்ய ணும்னு ஆரம்பத்திலெல்லாம் நினைப் பேன்.
இப்போ அதெல்லாம் வேண்டாம்னு தோணுது. எதையும் நிரூபிக்கிறதுக்காக நான் பண்றதில்லை. எதைப் பண்ணணும் கிறதை நான் தெரிஞ்சிக்கிட்டேனோ, இல்லையோ… எதுவெல்லாம் பண்ணக் கூடாதுங்கிறதைத் தெளிவா தெரிஞ்சிக் கிட்டேன். அப்படியும் சில தடவை தப்பு நடக்குதுன்னு வையுங்க? அப்போ டைரக்டர் சொல்வாங்க; அதெல்லாம் தான் என் கேரியர்ல இப்போ நான் மெயினா எடுத்துக்கிட்டேன்.
சமீபத்தில் ‘தேவி’ படம் வந்துச்சு. தினமும் ஷூட்டிங் முடிந்ததும் டைரக்டர் விஜய்க்கு இரவு பதினொண்ணு, பதி னொன்றரை மணிக்கு போன் செய்வேன். தினமும் ஒரே ஒரு சந்தேகத்துக்காகத் தான் போன் செய்வேன். என்ன சந்தேகம் அது?
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago