ஹென்றி ஹாலெட் டேல் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற இங்கிலாந்து மருத்துவர்

பிரிட்டனைச் சேர்ந்த உடலியல், மருந்தியல் நிபுணரும், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான சர் ஹென்றி ஹாலெட் டேல் (Sir Henry Hallett Dale) பிறந்த தினம் இன்று (ஜூன் 9). அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:

* லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் (1875) பிறந்தார். தந்தை மண்பாண்ட வியாபாரி. பள்ளிக்கல்விக்குப் பிறகு கேம்பிரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் பயின்றார். உடலியல், விலங்கியல் பாடங்களில் நன்கு நிபுணத்துவம் பெற்றார்.

* உதவித்தொகை பெற்று, லண்டன் செயின்ட் பார்த்தலோமியோ மருத்துவமனையில் மருந்தியல் தொடர்பாகப் பயின்றார். உடலியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கினார். 6 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அப்போது, தனது முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார்.

* இதற்கிடையே, உதவித்தொகை பெற்று மருத்துவம் பயின்றார். 1909-ல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஜார்ஜ் ஹென்றி லூயிஸ் உதவித்தொகை பெற்று, லண்டன் கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். அங்கு தன் வாழ்நாள் நண்பராக நீடித்த ஓட்டோ லோவியை சந்தித்தார். இவர் ஜெர்மனியை சேர்ந்த மருந்தியல் நிபுணர் ஆவார்.

* லண்டன் தேசிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பின் உயிரி வேதியியல், மருந்தியல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். நண்பர் ஓட்டோ லோவியுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற் கொண்டுவந்தார். உடலில் உள்ள ரசாயனங்கள் உடல் இயக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்.

* விலங்கு திசுக்களில் ஹிஸ்டமின் கலவையை அடையாளம் கண் டார். ரத்தக்குழாய் விரிவடைதல், மென்மையான நரம்புகள் சுருங்கு தல் உள்ளிட்ட உடலியலின் ரசாயன விளைவுகள், நரம்பு மண்டல அமைப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை நிரூபித்தார். நரம்புத் தூண்டலின் வேதியியல் பரிமாற்றத்தில் அசிட்டைல்கோலினின் பங்களிப்பை இவரது ஆய்வுகள் உறுதிசெய்தன.

* லண்டன் ராயல் சொசைட்டியின் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். 1932-ல் சர் பட்டம், ஆர்டர் ஆஃப் மெரிட், ஆர்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் உள்ளிட்ட பல்வேறு கவுரவங்களைப் பெற்றார். 2-ம் உலகப்போரின்போது இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.

* ராயல் இன்ஸ்டிடியூட்டின் டேவி ஃபாரடே ஆராய்ச்சிக்கூடத்தில் இயக்குநராகப் பதவி ஏற்றார். அங்கு வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றினார். நரம்புத் தூண்டுதலின் வேதியியல் பரிமாற்றம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக, தனது நண்பர் ஓட்டோ லோவியுடன் இணைந்து 1936-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்திவரும் ‘வெல்கம் ட்ரஸ்ட்’ அமைப்பின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். 1946-ம் ஆண்டுமுதல் தனது அறிவு, ஆற்றல் அனைத்தையும் இந்த அமைப்பின் மேம்பாட்டுக்காகவே பயன்படுத்தினார்.

* மருத்துவ ஆராய்ச்சித் திட்டங்களில் தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்தார். ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். ‘அட்வென்சர்ஸ் இன் ஃபிசியாலஜி’, ‘ஆட்டம் கிளினிங்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

* உலகம் முழுவதும் பல புகழ்பெற்ற அறிவியல் அமைப்புகளில் கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. உலகெங்கும் மருத்துவ ஆராய்ச்சிகள் தழைக்க அரும்பாடுபட்ட சர் ஹென்றி ஹாலெட் டேல் 93-வது வயதில் (1968) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்