சினிமாவுல முதன்முதலா எனக்கு அமைஞ்ச ஸ்லோ பாட்டு ‘காத லன்’ல வர்ற ‘என்னவளே அடி என்னவளே’. டைரக்டர், கேமராமேன், இசை யமைப்பாளர், ஆர்ட் டைரக்டர், சிங்கர்ஸ், பாடலாசிரியர், கோ ஆக்டர் இவங்க எல்லாரோட மேஜிக் சேர்ந்ததால அந்தப் பாட்டு நல்ல ஹிட் ஆச்சு. இப்போகூட எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சப் பாட்டு. அதுக்கு அப்புறம் ஸ்லோ பாட்டுல எனக்கு ஒரு நம்பிக்கை உருவாச்சு. அடுத்தடுத்து, ‘வெண்ணிலவே வெண் ணிலவே’, ‘மின்னல் ஒரு கோடி’ மாதிரி நிறைய ஸ்லோ பாட்டுங்க நல்லாவே அமைஞ்சது.
ஒரு பாட்டோட கொரியோகிராஃபி யில இருக்கும்போது மியூசிக் பிட்டை சரியா பிடிச்சாலே பாதி வேலை முடிஞ்சது. நான் கொரியோகிராஃபி பண்ணும்போது சின்னச் சின்ன மியூசிக் பிட்டைக்கூட விடமாட்டேன். ஒரு பாட்டுக்குள்ள மியூசிக் டைரக்டர் பல சேஞ்ச் வெர்ஷன் கொடுத்துக்கிட்டே இருப்பார். அந்த பிட்டை சரியா டான் ஸுக்குள்ள கொண்டு வரணும். அப்படி பண்ணினாலே டான்ஸ்ல பாதி வேலை முடிஞ்சிடும். பாட்டும் புதுசா இருக்கும். இதை ரெண்டு, மூணு தடவை சில கொரியோகிராஃபர்கிட்டயும் சொல்லி யிருக்கேன். டான்ஸ்ல என்னை ஃபாலோ பண்ணணும்னு விரும்புறவங்களுக்கு இதுவும் ஒரு ஐடியா.
அதே மாதிரி, ஒரு பாடகரோட குரல் ஆடி, பாடுற நடிகருக்கு சரியா பொருந் தணும். ‘ஜென்டில்மேன்’ படத்துல வர்ற ‘சிக்குபுக்கு ரயிலே’ பாட்டுல சுரேஷ் பீட்டர்ஸ் குரல் வித்தியாசமா இருந்துச்சு. அந்தப் பாட்டு பண்ணும்போது அந்தக் குரலுக்கான பாடி லாங்குவேஜ்லதான் அது இருக்கும். அதே மாதிரிதான் ‘காத லன்’ படத்துல ‘காதலிக்கும் பெண்ணின் கைகள்’ பாட்டுல என்னோட பகுதியை உதித் நாராயணன் பாடியிருப்பார். ‘என்னவளே’ பாட்டு உன்னிகிருஷ்ணன், ‘இர்ராணி குர்ரதாணி கோபாலா’ எஸ்பிபி, ‘ஊர்வசி ஊர்வசி’ ஏ.ஆர். ரஹ்மான், சுரேஷ் பீட்டர்ஸ், சாகுல் ஹமீது பாடியிருப்பாங்க.
இப்படி எல்லாருடைய குரலும் எனக்கு செட் ஆகுற மாதிரி என் பாடி லாங்குவேஜையும், பாடுற விதத்தையும் பண்ணியிருப்பேன். ஏன், இன்னைக்கு ‘தேவி’ படத்துல வர்ற ‘சல்மார்’ பாட்டு வரைக்கும் இது பொருந்தியிருக்கு. இதுவும் கொரியோகிராஃபர்ஸுக்கு ஒரு சின்ன ஐடியா.
எப்பவுமே நான் டைரக்ஷன் பண்ணும் போது வேற மாதிரி. கொரியோஃகிராபி யில வேற மாதிரி. நடிக்கும்போது வேற மாதிரிதான் இருப்பேன்.
‘ஏபிசிடி’ ஹிந்தி படத்துல நடிக்கும் போது ஷாட் ரெடியானதும் கூப்பிடு வாங்க. போவேன், நடிப்பேன், வருவேன். அவ்வளவுதான். ஸ்பாட்ல இருக்கும் போது ஏதாவது ஒரு காரணத்தால லேட்டாகுதா? அப்படியே ஒரு ஓரமா நிப்பேன். நடிக்கும்போது என்னை பார்க் குறவங்க, ‘இவரா டைரக்டர் பிரபு தேவா?... இவ்ளோ அமைதியா ஓரமா நிக் கிறாரே?’ன்னு பார்ப்பாங்க. நடிக்கும் போது எந்த ஒரு பிளானும் இல்லாமதான் இருப்பேன். டிரெயின் பெட்டி மாதிரி.இன்ஜின் (டைரக்டர்) எங்கே போகுதோ அங்கே ஃபாலோ பண்ணுவேன்.
டைரக்ஷன் பண்ணும்போது என் னோட பாடி, மைண்ட்செட் எல்லாமே வேற மாதிரி இருக்கும். எனர்ஜி லெவலும் மலையில இருந்து கொட்டுற அருவி மாதிரி இருக்கும். ஒரு படம் ஆரம்பிக்கிறதுல இருந்து முடியுற வரைக்கும் அப்படியே இருப்பேன்.
கொரியோஃகிராஃப் பண்ணும் போது கெரில்லா அட்டாக்தான். அதுல எனக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு. எதிர்ல இருக்குறவங் களுக்கு புரியுதோ இல்லையோ, வேலை பாட்டுக்கு நடந்துக் கிட்டே இருக்கும். அந்த ஸ்பாட்டே தீபாவளி மாதிரி. டென் தவுசண்ட் வாலா வெடிச்சா எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும். இப்போ தயாரிப்பாளரானதும் அது மொத்தமும் வேற மாதிரி இருக்கு. எல்லா விஷயத்தையும் அனுசரித்து போயே ஆகணும். நம்மைச் சுத்தி இருக்குற வங்களோட கம்ஃபர்ட் லெவலை கரெக்டா பார்த்துக்கணும். அதுதான் பெட்டர்.
ஆரம்பத்துல இருந்தே எனக்கு நடிப்பு மேல பெருசா லவ் இருந்ததில்லை. கணக்கே இல்லாத அளவுக்கு டைரக்ஷன்லதான் லவ் இருந்துச்சு. அதனாலதான் இங்கே 12 வருஷத்துக் குப் பிறகு திரும்ப ‘தேவி’ படத்துல நடிக்க வந் தப்போ, அதை பெரிய இடைவேளை மாதிரி என் னால நினைச்சுக்க முடியலை. இத்தனை வருஷமா மனசுக்கு பிடிச்ச டைரக்ஷன்லதானே இருந் தோம்னு நினைச்சிக்கிட்டேன். ஆனா இங்கே நடிகனா திரும்ப வந்ததும் என்னை அப்படியே ஏத்துக்கிட்டாங்க. அதுவே எனக்கு இப்போ நடிப்புலேயும் ஆர்வத்தைப் கொடுத்திருக்கு.
‘தேவி’ படத்தோட ஷூட்டிங்ல நான் இருந் தப்போ என்னோட அம்மாவுக்கு கண் ஆபரேஷன் நடந்துச்சு. அந்த ஆபரேஷனை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிறகுகூட பண்ணிக்கலாம்னுதான் டாக்டர் சொல்லியிருந்தார். ஆனா, அம்மா என்னோட நடிப்பை பார்க்கணும்னு விரும்பி ஆபரேஷனை உடனே பண்ணிக்கிட்டாங்க. என்னோட அப்பா கூட, ‘அடுத்து, என்னடா பிரபு பண்ணப்போறே?’ன்னு ஒவ்வொரு படத்தோட டைரக்ஷனை தொடங் கும்போதும் கேட்பார். இப்போ எல்லாம் நான், ‘நடிச்சிக்கிட்டிருக்கேன்!’னு சொல்றேன். அதுக்கு அவர், ‘டைரக்ஷன்... டைரக்ஷன்னு டென்ஷனோட இருப்பே. இப்போ அது இல்லாம இருக்குறே. பெட்டர் டா!’ன்னு சந்தோஷப் பட்டுப்பார். அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே நான் டைரக்ஷன் பண்றதைவிட நடிக்கிறதுதான் பிடிக்கும். பையன் டென்ஷன் இல்லாமல் ரிலாக்ஸா இருக்கட்டு மேன்னு அவங்களுக்கு ஒரு ஆசை.
இந்த நேரத்துல என் ஃபிரெண்ட் சொன்னது நினைவுக்கு வருது. ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி நடிக்க வந்தப்ப 1,000 டாலர் சம்பளம் வாங்கியிருக் கார். அந்த ஆரம்ப நாட்கள்ல தன் செக் புக்ல ஒரு செக்கை எடுத்து, ‘ஜிம் கேரி.. 20 மில்லியன் டாலர்!’னு தானே எழுதி வைத்துக்கொண்டார். அந்த சம்பளத்தை ஒருநாள் அவர் வாங்கவும் செய்தாராம். என்ன மாதிரி ஒரு கனவு! அதை நிஜமாக்குறதுக்கு எப்படி உழைச்சிருப்பார்! அவரோட அந்த எண்ணம் அவ்ளோ ஸ்ட்ராங்கா இருந்திருக்கு. இந்த மாதிரி எல்லாருமே அவங் கவங்க நினைத்த விஷயத்தை அடையலாம். அதுக்கு என்ன செய்யணும்?
நான் என்னோட அனுபவத்தையே சொல்றேனே.. அதையும் அடுத்த வாரம் சொல்றேனே..!
- இன்னும் சொல்வேன்... | படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago