யூடியூப் பகிர்வு: வெள்ளித்திரை தேடலை ஒரே ஷாட்டில் முன்வைக்கும் டேக் ஒன் ஷாட் ஒன் குறும்படம்

By பால்நிலவன்

எந்தத் துறையிலும் முயற்சி என்ற சொல்லுக்கு மிகப்பெரிய அர்த்ததங்கள் உண்டு. அதிலும் திரைத்துறையில் அதற்கான அர்த்தமே வேறு. அதை தெளிவாக வரையறுத்துவிடவும் முடியாது. முயற்சியா? உழைப்பா? முயற்சிக்கான உழைப்பா? முயற்சிக்கான உழைப்போடு ஒவ்வொரு சினிமா கம்பெனியாக படியேறுவதற்குத் தேவையான அலுப்பே இல்லாத ஆர்வமா? ஆர்வம் இருந்தும் தகுந்த அங்கீகாரத்துக்காக காத்திருக்கும் பொறுமையா? தனது திறமை ஒருநாள் நிச்சயம் இந்த உலகம் புரிந்துகொள்ளும் என்று இலவு காத்த கிளியாக வெட்டுவெட்டு என்று வாழ்க்கை கிளைகளின் மேல் அமர்ந்து காத்துக்கொண்டிருப்பதா? என்று முடிந்தமுடிவாக இதுதான் என்று வரையறுத்துவிட முடியாது.

கலை மூவிஸ்க்காக 'டேக் ஒன் ஷாட் ஒன்' என்ற இந்த ஆறரை நிமிடக் குறும்படம் இந்தமாதிரி ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது. அதேநேரத்தில் தெளிவாக சொல்லிவிடுகிறது. பொட்டென்று நெற்றியில் அடித்ததுபோலவும் சொல்லும் இயக்குநர் இறைநகர் ஆதியின் முயற்சியும் நமக்குப் புரிகிறது.

இப்படத்தில் நடித்திருக்கும் ஆதேஷ்பாலாவே இக்குறும்படத்தை தயாரித்துள்ளார். திரைத்துறையில் இயங்கிவரும் தனது மதிப்புக்குரியவர்களின் வாழ்த்தையும் திரைத்துறையில் தனக்கு முன் பணியாற்றிய தந்தையையும் பணியாற்றிவரும் தாயையும் மூன்றரை நிமிடங்களில் நினைவுகூர்கிறார். அந்த மூன்றுநிமிடங்களோடு சேர்த்து தனது தயாரிப்பில் உருவான 'டேக் ஒன் ஷாட் ஒன்' குறும்படத்தையும் இணைத்து 10 நிமிட படமாக பதிவேற்றியுள்ளார்.

திரைத்துறையினரின் வாழ்த்துக்களையும் தாய்தந்தையருக்கான வணக்கத்தையும் கடந்துபோக மூன்றரை நிமிடம் ஆகும். ஆனால் இச்சின்னஞ்சிறு குறும்படத்திற்கே பெரியவர்களை நினைவுகூர இவ்வளவு மெனக்கெட்டிருக்கும் ஆதேஷ்பாலாவின் ஆர்வத்தை என்னனவென்று சொல்வது? ஆனால் அதைத் தொடர்ந்து வரும் அவரது ஆறரை நிமிடக் குறும்படமே அவரின் ஆர்வம் எத்தகையது என்பதை நிரூபித்துவிடுகிறது.

ஒரு இளைஞர் ஒரு இயக்குநரின் அலுவலகத்திற்குள் நுழைகிறார். சினிமா வாய்ப்பு கேட்டுத்தான்! இத்தனைக்கும் அவர் வழியிலேயே தடுக்கப்படுகிறார். ஆனால் அதை உடைத்துக்கொண்டுதான் அந்த இளைஞர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைகிறார். ஒருவேளை இதுதான் இயக்குநர் சொல்ல விரும்பும் முயற்சிக்கான இலக்கணமோ?

இந்த சிம்பாலிக்கான சிங்கிள் ஷாட்டில் மேலும் வியக்கத்தக்க விஷயங்களையும் சிறந்த ஒரு காட்சியின் வழியே உணர்த்திவிடுகிறார் இயக்குநர் இறைநகர் ஆதி.

வாய்ப்பு தேடும் இளைஞராக தயாரிப்பாளர் ஆதேஷ்பாலா வந்து உணர்ச்சிமிக்க நடிப்பினால் நம் புருவங்களை உயர்த்தவைக்கிறார்.

அது எப்படி என்று நீங்களும் பாருங்களேன்......

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்