பர்டன் ரிக்டர் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

அமெரிக்காவின் அறிவியல் மேதையும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான பர்டன் ரிக்டர் (Burton Richter) பிறந்த தினம் இன்று (மார்ச் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* புரூக்ளினில் யூதக் குடும்பத்தில் பிறந்தவர் (1931). ஆரம்பக் கல்விக்குப் பின்னர் ஃபார் ராக்கவே உயர் நிலைப் பள்ளியிலும் அடுத்து, பென்சில்வேனியாவில் உள்ள மெச்ஸர்பெர்க் அகாடமியிலும் பயின்றார். உயர் கல்வியில் இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது.

* மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இயற்பியலையே தொடரலாம் என முடிவு செய்தார். இயற்பியலில் 1952-ல் பட்டம் பெற்றார். அப்போது குவாண்டம் மின்னியக்க விசையியல் துறையில் ஆர்வம் பிறந்தது. 1956-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

* குவாண்டம் வெப்ப இயக்கவியல் (quantum thermodynamics) துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை வழங்கினார். குவாண்டம் மின்னியக்க விசை யியல் கோட்பாடுகளுக்கான புதிய வரையறையையும் வகுத்தார்.

* பின்னர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இணைந்தார். எலக்ட்ரான் சிதறல்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பயன்படும் கொல்லய்டிங் பீம் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு சாத னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் உறுதுணையாகச் செயல்பட்டார்.

* 1967-ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பதவி ஏற்றார். இந்தப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அணுசக்தி கமிஷனின் ஆதரவுடன், ஸ்டான்ஃபோர்ட் பாசிட்ரான் - எலக்ட்ரான் சமச்சீரற்ற ரிங் - எஸ்.பி.இ.ஏ.ஆர். (Stanford Positron - Electron Asymmetric Ring) எனப்படும் ஒரு துகள் முடுக்கியை நிறுவினார்.

* அப்போது இணை அணுவியல் துகள்கள் ஆராய்ச்சிகளைத் தலைமையேற்று வழிநடத்தி வந்தார். இவரது அணி 1974-ம் ஆண்டில் இணை அணுவியல் ஸ்டான்ஃபோர்டு நேர்போக்கு விரைவாக்கியில் (Stanford Liner Accelerator) அடிப்படைத் துகளைக் கண்டறிந்தது. இந்த புதிய இணை அணுவியல் துகள்களை (new subatomic particle) இவர் ஒரு ‘ஸய்’ Y (psi) எனக் குறிப்பிட்டார்.

* அதே சமயத்தில் ப்ரூக்ளின் தேசிய சோதனைக்கூடத்தில் இதே மாதிரியான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த சாமுவேல் திங் என்பவரும் இதைக் கண்டறிந்தார். அவர் இதை J எனக் குறிப்பிட்டார். எனவே இது J/Y மேசான் என அறியப்பட்டது.

* முதலில் மூன்று குவார்க்குகள் என்று நம்பப்பட்டு வந்த நிலையில் இவர்களது கண்டுபிடிப்பில் நான்காவது குவார்க் இருப்பது தெரியவந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்காக, இவருக்கும் சாமுவேல் டிங்குக்கும் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு 1976-ல் வழங்கப்பட்டது.

* 1984-ல் ஸ்டான்ஃபோர்ட் லீனியர் ஆக்சலரேட்டர் மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி செனட், பட்டதாரி ஆய்வுக்குழு, பல்கலைக்கழக கேபினட் என அனைத்து அமைப்புகளிலும் இவர் முக்கியப் பங்காற்றினார்.

* அமெரிக்க அரசுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் ஜேசன் ஆலோசனை குழுவிலும் உறுப்பினராக செயல் பட்டார். என்ரிகோ ஃபெர்மி விருது, இயற்பியலுக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது அமெரிக்க அறிவியல் மற்றும் பொறியியல் கழகத்தின் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கிறார். இன்றும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் பர்டன் ரிக்டர் இன்று 86-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்