மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய தேமுதிகவின் 3 எம்எல்ஏக்கள், 5 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
சந்திரகுமார் தலைமையில் போர்க்கொடி தூக்கியவர்கள் அடுக்கடுக்காக சரமாரி குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். அதற்கு பதிலடி தரும் விதமாக, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ பேசிய விதம் நெட்டிசன்களை நெருட வைத்துவிட்டது. அது தொடர்பான தொகுப்பு இதோ...
வைகோ எந்த மீட்டிங்லயும் கேப்டன பேசவே விட மாட்டாப்ல, தட் மொமெண்ட்
ஒரு கட்சியின் தலைவர் மட்டகரமான பொருள்படும்படி பேசி, தனது தரத்தை தானே தாழ்த்திக் கொண்டார்!
#வைகோ
#வைகோ - உயர் ரத்த அழுத்தம்
#ராமதாஸ் - குறைந்த ரத்த அழுத்தம்
#விஜயகாந்த் - படபடப்பு
#தமிழகதேர்தல்களம்
எவன், எவனுக்கு எத்தன கோடி குடுத்தான்னு வைகோ சரியா சொல்லுறாரு. அண்ணன அரசியல்வாதின்னு நினைச்சா அக்கௌண்டண்டா இருக்காரு.
சந்திரகுமார் விலகியதால் பாதிப்பு இல்லை: வைகோ
அதெப்படி பாதிப்பு உங்களுக்கு இருக்கும்?
வைகோவை பார்த்தா பாவமா இருக்கு. எப்படி பேசினார் ஒரு காலத்தில்? :/
*
எனக்கு எப்பவுமே வைகோ மேல சின்ன சாஃப்ட் கார்னர் இருக்கும்... இப்போல்லாம் சுத்தமா இல்லை
வைகோ, திருமாவையும் சேர்த்து புதைகுழிக்குள் இழுத்துச் செல்கிறார். இந்த பிரஸ் மீட் அநாகரீகத்தின் உச்சம், சாதி வெறித்தாக்குதல். உணர்ச்சி வசப்படும் திமுக தொண்டர்கள் இதற்கு எதிர்வினையாற்றினால் என்ன நடக்கும்...?
இந்தாங்க வைகோ இனி இப்படி பேசாதீங்க!
வைகோ தேர்தலுக்கு பிறகு காணமல் போவது உறுதி.
அடித்து ஆடுகிறார் வைகோ.
திணறும் திமுக.
தேமுதிக விவகாரத்தில், விஜயகாந்த் கோபப்படாத நிலையில், வைகோ ஏன் கோபப்பட வேண்டும்?
பழ.கருப்பையா கேள்வி.
வைகோ அவர்களே, அம்மையாரைப் பற்றி பேசியிருந்தால் இந்நேரம் கலவரம் ஆகியிருக்கும், திமுகவின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. #மனவருத்தம்
>Umamaheshvaran Panneerselvam:
கலைஞர் மனநிலை தற்போது எப்படி இருக்கும்?
தனக்காகவும் திமுகவுக்கும் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் வைகோவை நினைத்து புன்னகைத்துக்கொண்டிருப்பார்.
"கலைஞர் நல்லா ஊதுவார்" என்று முன்பு ஒருமுறை பேசினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது வைகோவும் அதே பொருளில் பேசியுள்ளார். கலைஞரையும் திமுகவையும் விமர்சிக்க ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளபோது, இத்தகைய சாதிரீதியான தாக்குதல்களில் தலைவர்களே ஈடுபடுவது வேதனையளிக்கிறது. சாதி ஒழிப்புக் களத்தில் போராடும் எவராலும் இதை ஏற்க முடியாது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago