கணிதம், புள்ளியியலில் பல கோட்பாடுகளை வழங்கியவரும், தலைசிறந்த கணிதவியலாளருமான எஸ்.ஆர்.சீனிவாச வரதன் (S.R.Srinivasa Varadhan) பிறந்த தினம் இன்று (ஜனவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சென்னையில் (1940) பிறந்தவர். பொன்னேரியில் தந்தை தலைமை ஆசிரியராக பணியாற்றும் உயர் நிலைப் பள்ளியிலேயே இவரும் பயின்றார். கல்விக்கு முக்கியத் துவம் கொடுக்கும் குடும்பம் என்ப தால், படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இயல்பாகவே அமைந்தது.
l பள்ளி ஆசிரியரின் அற்புதமான போதனை உத்திகளும், அவர் பாடம் நடத்தும் விதமும் கணிதப் பாடத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. விடுமுறை நாட் களிலும், மாணவர்களை வீட்டுக்கு வரச்சொல்லி சில கடினமான கணக்குகளை கொடுத்துப் போடச் சொல்லுவார் ஆசிரியர்.
l விளையாட்டுபோல கணிதத்தை கற்றுத் தந்தார். கணக்கைப் பார்த்து பயந்து ஓட அவசியம் இல்லை என்பதை உணர வைத்தார். இந்த உணர்வு, இவருக்கு உந்துவிசையானது. உயர்வுக்கு வழிவகுத்தது.
l சென்னை மாநிலக் கல்லூரியில் 1959-ல் புள்ளியியலில் பட்டமும், பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார். புள்ளியியல் தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களில் வேலையில் சேர்வதற்காக, அது தொடர்பான படிப்புகளை சில மாதங்கள் பயின்றார்.
l அப்போது, முற்றிலும் கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்தார். அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் பிரபல புள்ளியியலாளர் சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, 1963-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
l நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கூரன்ட் கணிதவியல் கழகத்தில் போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோவாக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதே அமைப்பில் 1972-ல் பேராசிரியராகப் பதவியேற்றார். நிகழ்தகவு குறித்த தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். அந்த கழகத்தின் இயக்குநராக சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
l கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவு, பெரிய விலக்கங்கள் கோட்பாடுகளை (Theory of Large Deviations) உருவாக்கினார். வகையீட்டு சமன்பாடுகள் (differential equations) குறித்த கோட்பாடுகளை கண்டறிந்தார். தனது ஆய்வுகள் குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
l பேராசிரியராக இருந்தபோது விரிவுரை ஆற்றிய குறிப்புகளை அடிப்படையாக கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘ஸ்டொகாஸ்டிக் பிராஸசஸ்’ என்ற நூல் கணித உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
l நிகழ்தகவு கோட்பாட்டில் அடிப்படை பங்களிப்புகளுக்காகவும், ஒன்றிணைந்த பெரிய விலக்கங்கள் கோட்பாட்டை உருவாக்கிய தற்காகவும் ‘ஏபெல்’ பரிசை 2007-ல் பெற்றார். பத்மபூஷண் விருதை 2008-ல் பெற்றார். அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கத்தையும் வென்றார். இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள், பதக்கங்கள், கவுரவங்களைப் பெற்றுள்ளார்.
l நண்பர்கள், சக பேராசிரியர்களால் எஸ்ஆர்எஸ் வரதன், ரகு என்று அன்போடு அழைக்கப்படுகிறார். மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர் என்று புகழப்படுபவர். தமிழ் இலக்கியம், இந்திய பாரம்பரிய இசை, ஐரோப்பிய இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்டவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கூரன்ட் கணிதவியல் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago