சின்ன வயசுல இருந்தே எனக்கு ஷூட்டிங் கிளம்புறோம்னா அவ் வளவு ஆசையா இருக்கும். ஆரம்பத்தில் எல்லாம் அப்பாவோடு சேர்ந்து போறப்ப, கார்ல ஏறி உட்கார்ந்ததும் உடனே ஷூட்டிங் ஸ்பாட் வந்துடணும்னு நினைப்பேன்.
அப்போவெல்லாம் வாஹினி, ஏவி.எம், ஜெமினி, மோகன் ஸ்டுடியோக்கள்லதான் பெரும்பாலும் செட் போட்டு, பாட்டுக் காட்சி எடுப் பாங்க. ஆழ்வார்பேட்டை வீட்டுலேர்ந்து ஸ்டுடியோ போக 45 நிமிஷம் ஆகும். காரில் ஏறி உட்கார்ந்ததும் கண்ணை மூடிப்பேன். கார் கதவை திறந்து பார்த்தா ஷூட்டிங் ஸ்பாட்டா இருக்கணும்னு தோணும். ஷூட்டிங்னா அப்படி ஒரு ஆர்வம்!
இப்படி ஆசை ஆசையா ஷூட்டிங் போன அந்த இடங்களெல்லாம் இப்போ பில்டிங், காம்ப்ளக்ஸா மாறுறப்ப ஒரு மாதிரியாதான் இருக்கு. சிவாஜி சார், நாகேஷ் சார் மாதிரி பெரிய பெரிய ஜாம்பவான்கள் சாதனைகள் செஞ்சுட்டு திடீர்னு நம்மை விட்டு ஒரு நாள் பிரிஞ்சு போறப்ப, ‘இனிமே அவங்க இல்லையா?’ன்னு மனசுக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்குமே அப்படிதாங்க, ஸ்டுடியோவெல்லாம் கட்டிடமா மாறுறப்ப ஒரு ஃபீலிங் வந்துடுது.
இதை எழுதிட்டிருக்கிற இந்த நேரத் தில் ‘யங் மங் சங்’ படத்தோட ஷூட்டிங் குக்காக கும்பகோணம் பக்கத்தில் இருக் கிற ஒரு கிராமத்துக்கு நானும் தங்கர்பச்சான் சாரும் போய்ட்டிருக் கோம். ‘‘பயங்கர வெயில்… டயர்டா ஆகிடுது, ரொம்ப கஷ்டமா இருக்கு’’ன்னு பேசிட்டிருக்கும்போதே எதிர்ல ஒரு விவசாயி மண் வெட்டியைத் தோள் பட்டையில போட்டுட்டுப் போறார். எப்படி யும் அவருக்கு 80 வயசு இருக்கும்.
காலையில வந்து சுட்டெரிக்கிற வெயில்ல நின்னு வயல்ல வேலை பார்த் துட்டு, அதே தெம்போட வீட்டுக்குப் போய்ட்டிருக்கிற அவரோட உழைப்பு எவ்வளவு பெரிய விஷயம்! நாம ஷூட்டிங் போய் வேலை பார்க்கிறோம். ஆனா, போறப்ப ஏ.சி கார்ல போறோம். கேரவான், நேரத்துக்கு சாப்பாடுன்னு இருக்கோம். அப்போ அந்த விவ சாயியைப் பார்த்த பிறகு, ‘இனி, கஷ்டமா இருக்கு. டயர்டா இருக்கு’ன்னு சொல்லக் கூடாதுன்னு மனசுல தோணுச்சு.
நாங்களும் விவசாயக் குடும்பம்தான். ஊர்ல எங்க தாத்தா, மாமா எல்லாருமே விவசாயிங்க. என்னோட அப்பா சினிமா வுல பரபரப்பா இருந்த நேரத்துலேயே அதை விட்டுட்டு மரம், செடி கொடி, மாடுங்க, தோப்புன்னு விவசாயம் பண்ண ஆரம்பிச்சுட்டார். இப்பவும் ஒரு டீ-ஷர்ட், சார்ட்ஸ் போட்டுட்டு தோட்டத்துல வேலை பார்ப்பார்.
விவசாயிங்க தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வயல் வெளிக்கு போக ஆரம்பிச்சுடுவாங்க. நான் சின்ன வயசுல பார்த்திருக்கேன். எங்க மாமா அதிகாலை 4 மணிக்கெல்லாம் சாப்பிட்டுட்டிருப்பார். பாத்ரூம் போவ தற்காக எழுந்திருக்கிற எனக்கு அதை பார்க்கிறப்ப ரொம்ப ஆச்சர்யமா இருக்கும். அதுவும் அந்த நேரத்தில் நல்லா சாப்பிடுவார். முழு எனர்ஜியோட கடுமையா வயல்வெளியில போய் வேலை பார்ப்பார்.
திரும்ப காலையில 8 மணிக்கு உடம்பெல்லாம் வயல் மண்ணும், வியர்வையுமா வீட்டுக்கு வந்து சேர்வார். அப்போதான் நாங்க எழுந்திருச்சி ரெடியாயிட்டிருப்போம். அப்படி வற்றவர், கை, கால், உடம்பில் இருக்கிற மண்ணையெல்லாம் கழுவு வார். தண்ணியில அந்த வயல்வெளி மண்ணு கரைஞ்சு போறதைப் பார்க் குறப்பவே நல்லா இருக்கும். எங்களுக்கும் அந்த மாதிரி கை, கால்கள்ல மண்ணை ஒட்டிக்கலாம்னு தோணும்.
அப்புறம் வேட்டியைக் கட்டிக்கிட்டு, ஒரு துண்டைத் தோள்பட்டையில போட்டுட்டு வந்து எங்கக்கூட உட்கார்ந்து டிபன் சாப்பிடுவார். அவர் அந்தத் துண்டை உதறிவிட்டுட்டு சாப்பிட உட் கார்றதைப் பார்க்குறப்ப ஸ்டைலா இருக்கும். அதுக்கு அப்புறம் விவசாய சம்பந்தமான மத்த வேலைகளைப் பார்க்க போய்டுவார். டிரெஸ்ல எவ் வளவோ மாடல்கள் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு ரொம்பச் சிறப்பான டிரெஸ் புடவைதான். வேலையில சிறப்பான வேலைன்னு பார்த்தா அது விவசாயம்தான்.
விவசாயிக்கு விடுமுறை இல்லை
விவசாயி வேலை பார்க்குறப்ப அவங்க சோர்வா இருந்து நான் பார்த்ததே இல்லை. விவசாயம் பண்றது போர் அடிக்குதுன்னு சொல்லி கேள்விப் பட்டதும் இல்லை. அதே மாதிரி இன்னைக்கு ஒரு நாள் ஓய்வு எடுத் துக்கிறேன்னு எந்த விவசாயியும் லீவ் போட்டதில்லை. வருஷம் முழுக்க வேலை பார்த்துக்கிட்டே இருப்பாங்க.
எங்க மாமா கலப்பையைப் பிடித்து ஏர் உழுறப்ப அதை வாங்கி நானும் நகர்த்தியிருக்கேன். மண்ணுக்குள்ள அந்தப் கலப்பை போகணும்னா நம்ம உடம்புல நல்ல தெம்பு இருக்கணும். இல்லைன்னா, அது ஒரு பக்கம் இழுத்துட்டுப் போயிடும். அவ்வளவு உறுதியான உடம்போட கடுமையா வேலை பார்க்குறதுனாலதான் இயல் பாவே விவசாயிகளுக்கு ‘சிக்ஸ் பேக்’ வந்துடுது.
எப்பவுமே விவசாயிங்க மேன்லியா, ரொம்ப சாதாரண டிரெஸ்லதான் இருப்பாங்க. ஆனா, ஸ்டைலிஷா இருப் பாங்க. என்ன, ஏதுன்னு தெரியாமக்கூட ஒரு பாட்டை கேட்டதும் எல்லாரும் நடனம் ஆடலாம். ஆனா, தெரிஞ்சிக்காம யாராலேயும் விவசாயம் பண்ண முடியாது. எனக்கு ரொம்பப் பிடிச்ச தொழில் விவசாயம். நாளைக்கு என் பசங்களே, ‘‘அப்பா நான் விவசாயம் பண்றேன்’’ன்னு சொன்னா அதில் எனக்கு அவ்வளவு சந்தோஷம்!
நாட்டுக்கு ராணுவம் எவ்வளவு முக்கியமோ, அந்த மாதிரிதான் விவசாயமும். ராணுவம், அரசியல்ல இருக்கிறவங்களுக்கு எப்படி நிறைய சலுகைகளைக் கொடுக்கிறோமோ, அந்த மாதிரி விவசாயிகளுக்கும் ரயில், விமானம், மருத்துவம், கல்வியில சலுகைகள் கொடுக்கணும். போகிற வழியில் ஒரு பசுமையான இடத்தைப் பார்க்கிறப்ப கண்ணுக்கும், மனசுக்கும் எவ்வளவு சந்தோஷமா இருக்கு! அதை உருவாக்கி பாராமறிக்கிற விவசாயியை நாம் கொண்டாட வேண்டாமா?
இன்ஜினீயரிங் படிச்சுட்டு வெளிநாடு போறாங்க. டாக்டருக்கு படிக்கிறாங்க, வெளிநாடு போய் வேலை பார்க்கிறாங்க. இந்த மாதிரி வெளிநாடுகளுக்குப் போய் நிறைய வேலைங்க பார்க்கலாம். நிறையப் பேர் பார்க்கவும் செய்றாங்க. ஆனா, விவசாயம் பண்றவங்க யாரும் நான் அமெரிக்கா போய் விவசாயம் பண்றேன்னு சொல்றது இல்லை. அவங்க பிறந்த ஊர்லயே, அந்த மண்ணுலயேதான் பண்றாங்க. இந்தியா விவசாய நாடு. ‘இந்தியாவோட முதுகெலும்பே விவசாயம்தான்’னு பாடப் புத்தகத்திலெல்லாம் போட்டுருக் காங்க. ஆனா, ஏன் இங்கே அந்த அளவுக்கு விவசாயத்துக்கும், விவசாயி களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேங்குறான்னு தெரியலை.
வெளிநாட்டுல நிறைய ஊர்கள்ல பசங்களுக்கு 18 வயது ஆனதுக்கு அப்புறம் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ ராணுவத்துக்குப் போய் சேவை செய்யணும்னு ரூல்ஸ் இருக்கு. அதே மாதிரி இந்தியாவுலே யும் விவசாயத்தை ஆறு மாசம், ஒரு வருஷம் பார்க்கணும்னு ரூல்ஸ் கொண்டுவந்தா நல்லா இருக்கும். அப்பதான் விவசாயத்தோட அருமை புரியும்.
சாதாரணமா பசங்க ஏதாவது தப்பு பண்ணிட்டா, அவங்களைத் திட்டுறப்ப, ‘‘ஆடு, மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு?’’ன்னு சொல்வாங்க. அப்படி சொல்றதுனால என்ன ஆகுது தெரியுங்களா?
- இன்னும் சொல்வேன்…
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago