அதிசய உணவுகள் 3 - ஆக்டோபஸ் உணவு உருண்டைகள்!

By சாந்தகுமாரி சிவகடாட்சம்

‘வயிறு… மனதை ஆள்கிறது!' - ஸ்பானிஷ் பழமொழி

மேலே சொன்ன பழமொழி சத்திய மானது என்பதை எங்கள் பசித்த வயிறு உணர்த்தியது. ஜியோசிகள் விற்பனையான கடைகள் எங்களைக் கைவிட்ட நிலையில், ஒரே ஒரு கடை நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்தது. ஆவலுடன் சென்றோம். அங்கே இறால் களைக் கொதிக்கும் எண்ணெய்யில் பொரித்து எடுத்து உப்பு, மிளகுத் தூளில் புரட்டியெடுத்து குச்சியில் வரிசையாக குத்தி விற்றார்கள். இரண்டு குச்சிகளை வாங்கிக் கொண்டு, வீதியின் நடுவில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கொதிக்கும் இறாலின் தோல் களை உறிக்கத் தொடங்கினேன்.

‘‘அடேடே இது என்ன வேலையற்ற வேலை, அப்படியே மென்று சாப்பிடுங் கள்'' என்று சொல்லி எங்கள் வழிகாட்டி நறுக்கென்று ஒரு இறாலை உருவி வாயில் போட்டு மெல்லத் தொடங்கினார். தயங்கியபடியே நானும் அப்படியே சாப்பிட்டேன், அதன் சுவையில் என் னையே மறந்தேன்!

நான் சுவைத்த மற்றொரு ஜியோசி ‘டாபி ஃபுரூட்' (Toffee Fruit) தாய்வானில் குட்டி குட்டி தக்காளிகளை இனிப்பு பண்டமாக கொண்டாடுகிறார்கள். சர்க் கரை பாகில் இவைகளை முக்கி, பிறகு குச்சிகளில் வரிசையாக குத்தி நடுவில் வட்டமாக வெட்டப்பட்ட பிளம் துண்டு களைச் சொருகித் தருகிறார்கள். தக்காளி யின் சுவையோடு பிளம்மின் புளிப்பும் சர்க்கரையின் இனிப்பும் கைகோர்த்துக் கொண்டு சாப்பிடுவோரை ‘வாவ்’ என்று கூவ வைக்கிறது!

என் கண்கள் ஒரிடத்தில் நிலைகுத்தி நின்றன. கையில் ஏந்திய பாத்திரத்தில் இருந்த கரைத்த மாவை, பல குழி களைக் கொண்ட கடாயில் வரிசையாக ஊற்றிக் கொண்டு ஒரு பெண் நின்றி ருந்தாள். ‘அட, நம்ம ஊர் குழிப் ப‌ணி யார‌ம் போல இருக்கிறதே' என்று எண்ணி கடையின் பெயர் பலகையை நோக்கினேன். ‘ஜாப்பனீஸ் பேன் கேக்ஸ்' என்று எழுதியிருந்தது. அதன் முன்பாக நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருந்தனர். கட்டாயமாக அதிக சுவை உள்ள பண்ட மாக இருக்கும் என்று நானும் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.

பேன் கேக் கரைசலை ஊற்றி அழ கிய சின்ன, சின்ன வட்டமான கேக்கு களை சுட்டு எடுத்து, ஒரு கேக்கின் மீது சிவ‌ப்பு காராமணி (Red Bean) கஸ்டர்டை வைத்து, அதை மற்றொரு கேக் கொண்டு மூடித் தருகிறார்கள். 10 நிமிடக் காத்திருப்புக்குப் பின் என் வாயில் ஐக்கியமான பேன் கேக்குகள் கரைந்தன‌. அதன் சுவையில் அவற்றோடு நானும் கரைந்தேன்.

திடீரென்று ஏதோ குடலைப் புரட்டிப் போடும் நாற்றம், நடந்துக் கொண்டிருந்த என்னை அதிர வைத்தது. ‘‘ஐயோ!” என்று கூவியபடி மூக்கை மூடிக்கொண்டேன். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் எதையோ வாட்டிக் கொண்டிருந்தனர். அந்தப் பொருளை வாங்க கூட்டம் கூடியிருந்தது. என் அவஸ் தையை வழிகாட்டி புரிந்துகொண்டார். “வாசம் மூச்சை திணறடிக்கும். ஆனால், சுவை நாக்கில் நிலைத்து நிற்கும். இதன் பெயர் ‘ஸ்டிங்கி டோஃபு’ (Stinky Tofu) தாய்வான் மக்களின் பிரதான ஜியோசி இது. இதை நீங்கள் அவசியம் சுவைக்க வேண்டும்” என்றார்.

‘சும்மா அதிருதுல்ல… என்று அதிர வைக்கும் இந்த டோஃபுவை சுவைப் பதா...' என்று நான் திகைத்து நின்றேன்.

‘‘மேடம், இந்த ஸ்டிங்கி டோஃபு உரு வான கதையைக் கேட்கிறீர்களா?'' என் றார் வழிகாட்டி. கதையைக் கேட்கும் நிலையிலா நாங்கள் இருந்தோம்! ஆனா லும் தலையை ஆட்டி வைத்தோம்.

‘‘சீனாவில் குவிங் டைனாஸ்டி (quing Dynasty) ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் வேங்ஜிஹி (Wangzhi-He) என்ற மனிதன் அங்கே வாழ்ந்தான். டோஃபு களை (சோயா தயிர்) விற்று அதில் வரும் வருமானத்தில் தன் காலத்தைக் கடத்தி வந்தான். ஒரு நாள் துரதிர்ஷ்டவச‌மாக ஏராளமான டோஃபுகள் விற்காமல் போய்விட்டன. மனமுடைந்து போன வேங்ஜிஹி அவற்றை ஒரு மண் ஜாடியில் போட்டு மூடி வைத்தான். பிறகு, அதைப் பற்றி முற்றிலும் மறந்து போனான். திடீர் என்று ஒரு நாள் ஜாடியைத் திறந்து பார்த்தபோது, பயங்கர துர்நாற்றத்துடன் பச்சை நிறமாக அந்த டோஃபு மாறிப் போயிருந்தது. அதில் இருந்து சிறிது எடுத்து வாயில் போட்டான். என்ன அதிச யம்! அது அதீத சுவையாக இருந்தது. இதுதான் ஸ்டிங்கி டோஃபு பிறந்த கதை’’ என்று வழிகாட்டி முடித்துக் கொண்டார்.

நொறுக்குத் தீனிகள் என்றால் முறுக்கு, மிக்ஸர், ஓலப் ப‌கோடா, காரா சேவ், முந்திரி பகோடா என்று கொரித்த எனக்கு, இந்த வினோதமான ஜியோசிகளை (நொறுக்கு தீனிகளை) ருசித்த அனுபவங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவையாக அமைந்துவிட்டன.

வழிகாட்டி என் முன் நீட்டிய ஸ்டிங்கி டோஃபுகளில் இருந்து ஒன்றை தயக்கத் துடன் எடுத்தேன். கொதிக்கக் கொதிக்க பல சாஸ்களில் புரட்டி எடுக்கப்பட்ட அந்த டோஃபுவின் சுவையைக் கண்டு, ‘அட! நன் றாக இருக்கிறதே...' என்று வியந்தேன். வழிகாட்டி நீட்டிய மற்றொரு டோஃபுவை யும் இம்முறை தயக்கமில்லாமல் வாங்கி வாயில் போட்டுக் கொண்டேன். சீனா, ஹாங்காங், தாய்வான் போன்ற நாடுகளில் மக்கள் மிகவும் ருசித்து சாப்பிடுகிற‌ ஸ்டிங்கி டோஃபு என்ற ஜியோசியை நானும் சுவைத்துவிட்டேன் என்று பெரு மிதம் என் உதடுகளில் புன்னகையாக மலர்ந்தது.

‘‘நீங்கள் வெறும் ஜியோசியாகவே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே, முழு உணவாக எதையும் சாப்பிடவில்லையே, வாருங்கள் டகோயகி (Takoyaki) விற்கும் கடைக்கு அழைத்துச் செல்கிறேன்'' என்றார் வழிகாட்டி.

நாங்கள் அரை வயிறு நிறைந்த நிலையில் இருந்தோம். முழு வயிற்று உணவுக்கு வழி செய்கிறேன் என்கிறாரே என்ற ஆர்வம் எழுந்தாலும், உணவின் பெயரும் சுற்றி விற்கப்படும் உணவு வகைகளின் உருவங்களும் என் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தின.

‘‘உங்களுக்கு விருப்பம் இருந்தால் சாப்பிடுங்கள். இல்லை என்றால் வேண் டாம்'' என்றார் வழிகாட்டி. வேகமாக நடந்த அவரின் பின்னே நாங்களும் சென்றோம். ஒரு கடையின் முன்பு சடக்கென்று நின்றார். ஏற்கெனவே அங்கே பலர் உருண்டை வடிவங்களில் இருந்த உணவைச் சுவைத்துக் கொண் டிருந்தனர்.

கடையின் உள்ளே என் பார்வையை செலுத்தினேன். இதயம் பட படத்தது, உள்ளங்கைகள் வேர்க்கத் தொடங்கின. மீன் காட்சியகங்களில், பெரிய பெரிய தொட்டிகளில் தங்களுடைய நீண்ட கால்களை (Tentacles) விரித்தும், சுருக்கியும் நகரும் ஆக்டோபஸ்களைப் பார்த்தாலே என் உடம்பு சிலிர்த்துக் கொள்ளும். இப்படி இருக்க, மிகப் பெரிய ஆக்டோபஸ்ஸை மலைப் பாம் பைப் போல‌ சுருட்டி வைத்திருந்தால் எப்படி இருக்கும்?

‘டகோயகி’ என்பது ஆக்டோபஸ் ஸைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு உருண்டைகள் என்பது புரிந்ததும் வேகமாக திரும்பி நடந்த என் கால்கள், ஒரு வினாடி பிரேக் போட்டு நின்றன.

- பயணிப்போம்...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: shanthisiva12@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

56 mins ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்