பத்திரிகை சுதந்திர தினம்: ஜனநாயகத்தின் நான்காவது தூண் சுதந்திரமாக செயல்படுகிறதா?

By இந்து குணசேகர்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் இன்று பல்வேறு தடைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான கிடுக்கிப் பிடிகள் அதிகரித்து வருகின்றன.

அதன் விளைவு ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை தனது சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

2016-ம் ஆம் ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சர்வதேச ஊடகவியாளர்கள் சம்மேளனம் கூறுகிறது. 2015-ம் ஆண்டு இந்த எண்ணிகை 2,297 ஆகும். இதில் காணாமல்போன பத்திரிகையாளர்கள் பலர் உள்ளனர்.

தொடர்ந்து போர் நடைபெறும் இடங்களிலும், அதிகார வர்க்கத்தின் பழிவாங்கும் உணர்ச்சி காரணமாகவும், மதவாத சக்திகளாலும் பத்திரியாளர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் இந்த சம்மேளனம் கூறுகிறது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து ஆபத்தான நாடுகளாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் உள்ளன.

சமீப காலங்களில் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான வன்முறைகள் சீனா, ரஷ்யா, வடகொரியா, பூடான் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம்

கடந்த 16 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 54 பத்திரிகையாளர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்தேறியுள்ளது. கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 142 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் துப்பறியும் பணியில் ஈடுபட்டவர்கள். அரசியல் மற்றும் மதவாத சக்திகள் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள்.

உலக அளவில் பத்திரிகை சுதந்திரம் உள்ள நாடுகளில் இந்தியா 135-வது இடத்தில் உள்ளது.

இறுதியாக பத்திரிகை சுதந்திரம்தான் வரலாற்றில் புரட்சியை பதிவு செய்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கிறது. எனவே உண்மையான ஜனநாயகம் தழைக்க பத்திரிகை சுதந்திரத்தைக் காப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்