சிவபுரம் நட ராஜர் நாடு திரும்பி விட்டாலும் அத்துடன் திருடப் பட்ட மற்ற ஐந்து சிலைகள் இருக்குமிடம் இதுவரை தெரியவில்லை என்கிறது காவல்துறை. ஆனால், ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட் (The India Pride Project)' என்ற அமைப்பைச் சேர்ந்த விஜய்குமா ரும் அவரது நண்பர்களும் அந்த சிலைகள் இருக்கும் இடத்தை ஆதாரத்துடன் கண்டுபிடித்து விட்டார்கள்.
இந்தியாவில் இருந்து குறிப் பாக தமிழகத்தில் இருந்து கடத்தப் பட்ட சாமி சிலைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதைக் கண்டுபிடித்ததில் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்புக்கு முக்கியப் பங்கு உண்டு. சிங்கப் பூரில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பொதுமேலாளராக பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த எஸ்.விஜய் குமார்தான் இந்த அமைப்பின் அமைப்பாளர்.
இதுவரை தமிழகம் திரும்பி உள்ள சிலைகளில் பெரும் பகுதியை இங்கு கொண்டுவந்து சேர்த்ததிலும், விஜய்குமார் வட்டத் தின் பிரதிபலன் பாராத உழைப்பு ஒளிந்திருக்கிறது. சிலைக் கடத்தல் மர்மங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்பதைவிட இந்தியாவுக்குச் சொந்தமான கடவுள் சிலைகளும் பிற கலைச் செல்வங்களும் இந்தியாவுக்கே திரும்பிவர வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கும் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பினர் இதற்காக சர்வதேச அளவில் தங்களுக்குள் கைகோர்த்து செயல்படு கிறார்கள்.
சென்னை மியூசியத்தின் பொறுப்பாளராக இருந்தவர் பி.ஆர்.னிவாசன். தொல்லி யல் ஆர்வலரான இவர் 1963-ல் ‘தென் இந்தியாவின் ஐம்பொன் சிலைகள்’ (Bronzes Of South India) என்ற புத்தகம் எழுதினார். சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள் குறித்து இப்புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருந்தது. இதில் சிவ புரம் நடராஜர், சோமாஸ்கந்தர் சிலைகளைப் பற்றியும் படங்களு டன் தகவல்களை னிவாசன் பதிவு செய்திருக்கிறார்.
1972-ல் இருந்தே நார்டன் சைமன் மியூசியம் தனது கேலரி யில் சிவபுரம் சோமாஸ்கந்தர் சிலையை வைத்திருப்பதைக் கண்டுபிடித்த விஜய்குமாரின் அமெரிக்க நண்பர்கள், அங்குள்ள சோமாஸ்கந்தர் சிலை மற்றும் சிவ புரத்தில் உள்ள (போலி) சோமாஸ் கந்தர் சிலைகளின் படங்களை ஒப் பிட்டுக் காட்டி, சைமன் மியூசியத் தில் உள்ள சிலை தான் சிவபுரத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரிஜினல் சோமாஸ் கந்தர் சிலை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
1972-ல் சிவபுரம் விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் சிலை களையும் 1973-ல் பார்வதி, சம்பந்தர் சிலைகளையும் நார்டன் சைமன் மியூசியம் விலைக்கு வாங்கி இருப்பது அதன் பழைய ஆவணங்களின் மூலம் தெரியவருகிறது. இதில், விநாயகர் சிலையானது, இந்த நிமிடம்வரை சைமன் மியூசியத்தின் கேலரியில் வைக்கப்பட்டுள்ளது. சிவபுரத்தில் இருந்து கடத்தப்பட்ட மற்ற நான்கு சிலைகளும் நார்டன் சைமன் மியூ சியம் வசமே உள்ளன. சோமஸ் கந்தர் சிலையைப் போலவே நார்டன் சைமன் மியூசியத்தில் உள்ள விநாயகர் உள்ளிட்ட மற்ற நான்கு சிலைகளையும் ஒப்பிட் டுப் பார்த்தால் உண்மை வெளிச்சத் துக்கு வந்துவிடும் என்பது விஜய் குமார் வட்டத்தினரின் நம்பிக்கை.
பத்தூர் நடராஜர் வந்த கதை
திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி அருகே உள்ள பத் தூரில் 1972-ல் பூமிக்கடியில் இருந்து நடராஜர் சிலை உட்பட 10 ஐம்பொன் சிலைகள் எடுக்கப் பட்டன. இதில் நடராஜர் சிலை மட்டும் கடத்தப்பட்டு லண்டனில் இருந்த கனடா ஆர்ட் கேலரி உரிமையாளர் ஒருவரின் கைக்குப் போய்ச் சேர்ந்தது. இதையடுத்து, கடத்தல் கும்பல் எஞ்சிய ஒன்பது சிலைகளையும் திருட முயற்சித்த போது போலீஸ் பிடியில் சிக்கி யது. எனினும், ஏற்கெனவே கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்பதற்காக 1982-ல் லண்டன் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பாக ஸ்காட்லாந்து போலீஸும் அப் போது விசாரணை நடத்தியது.
அப்போது தமிழக தொல்லியல் துறையின் இயக்குநராக இருந்த தொல்லியல் அறிஞர் முனைவர் நாகஸ்வாமி லண்டன் நீதிமன்றம் வரைக்கும் சென்று சாட்சியம் அளித்தார். 1986-ல் வழக்கு இறுதிக் கட் டத்தை எட்டியபோது, பத்தூரில் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் மண் மாதிரியையும் நடராஜர் சிலையில் ஒட்டி இருந்த மண் மாதிரியையும் ஆய்வுக்கு அனுப்பியது நீதிமன்றம். இரண் டும் வெவ்வேறானவை என எதிர் பார்க்காத முடிவைச் சொன்னது ஆய்வு முடிவு. ஆனால், மண் மாதிரிகள் வெவ் வேறாக இருந்தது ஏன் என்பதற்கு தமிழக தொல் லியல் துறை ஆகமப்படியான ஒரு விளக்கத்தைக் கொடுத்தது. அது என்ன தெரியுமா?
- சிலைகள் பேசும்...
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 4: சிவபுரத்து நடராஜர்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago