ரோஜர் சியன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நோபல் பெற்ற அமெரிக்க வேதியியலாளர்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர் ரோஜர் யாங்கின் சியன் (Roger Yonchien Tsien) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1952) பிறந்தவர். இவரது குடும்பம் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டது. தந்தை கவுரவமிக்க எம்ஐடி கல்வி நிறுவனத்தில் பயின்ற இயந்திரப் பொறியாளர். நியூஜெர்சியின் லிவிங்ஸ்டன் பகுதியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

* அறிவுக் கூர்மைமிக்க மாண வராக விளங்கினார். வேதியியலில் அதிக ஆர்வம், திறன் பெற்றிருந்தார். சிறுவயதில் ஆஸ்துமாவால் அவதிப்பட்டதால், வீட்டிலேயே அதிக நேரம் செலவிட்டார். இதையே சாதகமாக்கிக் கொண்டவர், வீட்டின் கீழ்பகுதியில் வேதியியல் பரிசோதனைக் கூடம் நிறுவி, அதில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார்.

 அமெரிக்கா அளவிலான வாஷிங்டன் திறன் தேடல் அறிவியல் ஆராய்ச்சிப் போட்டியில் 16-வது வயதில் முதல் பரிசை வென்றார். உதவித்தொகை பெற்று ஹார்வர்டு கல்லூரியில் பயின்றார். வேதியியல் - இயற்பியலில் பட்டம் பெற்றார்.

* பட்டப்படிப்பு முடித்த பிறகு, மார்ஷல் உதவித்தொகை பெற்று இங்கிலாந்து சென்றவர், அங்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உடலியல் ஆய்வகத்தில் பயின்று, முனைவர் பட்டம் பெற்றார். கான்வில்லே அண்ட் கீஸ் கல்லூரியில் ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார்.

* பெர்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்றார். சான் டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருந்தியல், வேதியியல், உயிரி வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றினார். உயிரணு, திசுக்களில் கால்சியம் நிலையை சுட்டிக்காட்டப் பயன்படும் ‘கால்சியம் இமேஜிங்’ வழிமுறையை இவரது குழுவினர் கண்டறிந்தனர்.

* பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாற்றினார். செல் உயிரியியல், நரம்பு உயிரியியல் களங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதோடு, பல சாதனங்களையும் உருவாக்கினார்.

* மரபணு ரீதியில் புரோகிராம் செய்யப்படக்கூடிய ‘ஃப்ளோரசன்ட் டேக்’கை (Fluorescent tags) கண்டறிந்தார். இதன்மூலம் செல் மூலக்கூறுகளின் செயல்பாடுகளை அவை இயங்கும்போதே கண்காணிக்க முடிந்தது. உலோக அயனிகளின் உயிரியியல் செயல்பாடுகளைக் காண்பதற்கான ஃப்ளோரசன்ட் இண்டிகேட்டர் களை மேம்படுத்தினார். இதற்காக 2004-ல் மருத்துவத்துக்கான உல்ஃப் பரிசைப் பெற்றார்.

* புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு ஃப்ளோரசன்ட் பெப்டைட்ஸ் உதவும் என இவரது குழுவினர் கண்டறிந்தனர். மூலக்கூறு உயிரியல் துறையில் மரபணு வெளிப்பாட்டைக் கண்டறிய உதவும் பச்சை ஒளிர் புரதத்தைக் கண்டறிந்து, மேம்படுத்தியதற்காக 2008-ல் ஒசாமு ஷிமோமுரா, மார்ட்டின் சால்ஃபி ஆகியோருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* நியூயார்க் அறிவியல் அகாடமியின் லாம்போர்ட் பரிசு, அமெரிக்க தேசிய அமைப்பின் விருது, இத்தாலியின் பசானோ அறக்கட்டளையின் இளம் விஞ்ஞானி விருது, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இஸ்ரேல், கனடா, பெல்ஜியம், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஏராளமான அறிவியல் அமைப்புகளின் பல்வேறு விருதுகள், பரிசுகளையும் பெற்றவர்.

* தனியாகவும் குழுவினருடன் இணைந்தும் சுமார் 100 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அறிவியல் விழாக்கள் மூலம் இளைஞர்களிடம் அறிவியல் கல்வியை வளர்த்தார். செல் உயிரியல், நரம்பு உயிரியல் களங்களில் பல மகத்தான பங்களிப்புகளை வழங்கிய ரோஜர் யாங்கின் சியன் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி 64-வது வயதில் மறைந்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

மேலும்