மெக்சிகோவைச் சேர்ந்த அறிவியல் அறிஞரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான மரியோ ஜோஸ் மோலினா (Mario Jose Molina) பிறந்த தினம் இன்று (மார்ச் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 மெக்சிகோவில் பிறந்தவர் (1943). தந்தை நீதிபதி. சிறுவயதில் தன்னிடம் இருந்த பொம்மை நுண்ணோக்கிகள் மற்றும் வேதியி யல் சாதனங்களைக் கொண்டு பல்வேறு அறி வியல் புத்தகங்களில் தான் படிப்பதை உடனடி யாக பரிசோதனை செய்து பார்த்துவிடுவான்.
* பள்ளிப் படிப்பை முடித்தபின், 1965-ல் மெக்சிகோ நேஷனல் அடானமஸ் பல்கலைக் கழகத்தில் ரசாயனப் பொறியியலில் பட்டம் பெற்றார். மேற்கு ஜெர்மனியில் ஃப்ரிபர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பின்னர் பெர்கேலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
* உயர் ஆற்றல் வாய்ந்த ரசாயன லேசர்கள் உள்ளிட்ட பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், அழிவு நோக்கங்களுக்குப் பயன் படுவதைக் கண்டு வேதனையடைந்தார். வானியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட இவர், அப்போது பல பிரபல அறிவியல் இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.
* 1973-ல் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஷெர்வுட் ரோலன்டின் சோதனைக்கூடத்தில் பணியாற்றத் தொடங்கினார். மனிதனால் உருவாக்கப்படும் கரிமச் சேர்ம வளிமங்கள், சூரியக் கதிர்வீச்சுடன் இணைந்து, அடுக்கு வளிமண்டலத்தில் சிதைவடைவதால் வெளிப்படும் குளோரின் அணுக்கள், ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கக் கூடியவை என்பதைக் கண்டறிந்தனர்.
* இந்த ஆராய்ச்சி, வளிமண்டலத்தில் குளோரோஃப்ளுரோகார்பன் (chlorofluorocarbon - CFCs) மிக அதிகமாகப் படர்வது குறித்த ஆராய்ச்சிக்கு வழிவகுத்தது. குளோரோஃப்ளுரோகார்பன் வாயுக் களால் ஓசோன் படலத்துக்கு ஏற்படும் பாதிப்பையும் அதனால் உண்டாகும் ஓசோன் துளையினால் பூமிக்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் விளக்கினார்.
* இதன் பிறகு அட்லான்டிக் நகரில் கூடிய அமெரிக்க வேதியியல் கழகம் சி.எஃப்.சி.க்களை வளிமண்டலத்தில் வெளியிடுவதற்கு முழுமையான தடை விதித்தது. மேலும் உலகளாவிய அளவில் ஏரோசால் கேன்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளிலிருந்து இந்த சி.எஃப்.சி.க்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
* ஓசோன் படலத்தினால் பூமிக்கு ஏற்படும் ஆபத்தைக் குறித்து விளக்கியதற்காக ஷெர்வுட் ரோலன்ட் மற்றும் டச்சு நாட்டைச் சேர்ந்த அறி வியலாளர் பால் ஜே. க்ரூட்சன் ஆகியோருக்கும் இவருக்கும் கூட்டாக 1995-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* 1974 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் புரோபுல்சன் சோதனைக்கூடம், கால்டெக், மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார்.
* அன்டார்டிக் ஓசோன் துளையைக் கண்டுபிடித்த முன்னோடிகளில் ஒருவர் என்ற பெருமை பெற்றார். மெக்சிகோ ஜனாதிபதியின் காலநிலை கொள்கை ஆலோசகர், அமெரிக்க அதிபரின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைக் கமிட்டி, அறிவியல் சேவைகள் அமைப்பின் அறங்காவலர் குழுவிலும் முக்கிய பதவிகளில் செயல்பட்டார்.
* உலகம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான நிலைமாற்ற அணியில் (transition team on environmental issues) முக்கிய பங்காற்றினார். வானியல் மற்றும் சுற்றுச்சூழல் ரசாயனத் துறையில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ள மரியோ ஜோஸ் மோலினா இன்று 74-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago