‘ராஜநடை’ படத்தில் ‘ராதா ஓ… ராதா’ என்ற பாட்டு, விஜயகாந்த் சாரோட வேறொரு படத்துல இடம்பெறவேண் டிய பாட்டு. ஆனா, அந்தப் படத்தில் அதைச் சேர்க்க முடியலை. அது எந்தப் படம்னு இப்போ எனக்கு நினைவுல இல்லை. நல்ல மியூசிக், நல்ல டான்ஸ் மூவ்மென்ட்ஸ்ல அமைஞ்ச அந்தப் பாடலை மிஸ் பண்ணக்கூடாதுன்னு, ‘ராஜநடை’ படத்தில் வெச்சாங்க. அந்தப் பாட்டுக்காக நான் செஞ்சு காட்டிய டான்ஸ் ஸ்டெப்ஸை பார்த்துட்டு விஜயகாந்த் சார் ஆட மறுத்துட்டார். அவரிடம் ‘‘இது உங்களுக்கு ரொம்ப ஆஃப்டா இருக்கும். கண்டிப்பா நீங்க பண்ண முடியும் சார்’’னு சொன்னேன். என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து ஆடினார். நல்லாவே அமைஞ்சது அந்தப் பாட்டு!
விஜயகாந்த் சார் மாதிரியே அன்பா, ஜாலியாப் பேசக்கூடிய இன்னொரு மனிதர் பிரபு சார். அவர் நடிச்ச ‘ஆனந்த்’ படத்தில், என் அப்பாவிடம் டான்ஸ் உதவியாளரா வேலை பார்த்தேன். அதே மாதிரி பிரபு சாரோட ‘வெற்றிவிழா’ படத்துக்கும் அப்பாதான் கொரியோகிராஃப். அதிலும் வேலை பார்த்தேன். பிரபு சாரோட வேலை பார்க்குறப்ப, நல்ல கம்ஃபோர்ட் லெவல் இருக்கும். எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கிற அவர், கூட இருக்குறவங்களையும் சிரிக்க வைப்பார்.
‘சார்லி சாப்லின்’ படத்தில் அவ ரோட சேர்ந்து நடிக்குறப்ப, நல்லா நடிச்சா உடனே பாராட்டுவார். பிரபு சார் டான்ஸ்ல ஒரு விதமான இங்கிலீஷ் ஸ்டைல் இருக்கும். நல்ல கிரேஸும் இருக்கும்.
‘ஆனந்த்’ படமெடுத்தப்ப எனக்கு 13 வயசிருக்கும். அப்போ எப்படி பார்த்தேனோ, அதே மாதிரிதான் பிரபு சார் இப்பவும் பழகுறார். சமீபத்தில் ‘தேவி’ பட பிரீமியர் ஷோவுக்குக் கூப்பிட்டேன். ‘‘கண்டிப்பா வர்றேன் பிரபு’’ன்னு சொன்னபடியே வந்தார். பிரபு சார் பழகுவதற்கு ரொம்பவும் ஈஸியான டைப். நல்லா படிச்சவர். எல்லாரிடமும் மரியாதையோட நடந்துப்பார்.
இப்பவும் நல்லா நினைவுல இருக்கு ‘சார்லி சாப்லின்’ படத்தில் ஒரு ஸீன்ல, ஜாலியா சிரிச்சுப் பேசிட்டிருக்கிறப்ப, எதிர்ல நிற்கிற என்னிடம் அவர் ஏதோ ஒரு விஷயம் சொல்வார். அதுக்கு நான் ‘‘முடியாது’’ன்னு சொல்வேன். அந்த நொடியில என் சட்டை காலரைப் பிடிச்சு கோபத்தோட அவர் நடிச்சது இருக்கே ‘அப்பாடா’ அப்படி ஒரு நடிப்பு. சிவாஜி சாரோட வாரிசாச்சே, சும்மாவா!
எனக்குக்கூட என்னை அறியாமலே என் அப்பாவின் டான்ஸ் ஸ்டைல் சில இடங்கள்ல வரும். அதே மாதிரி பிரபு சாரோட நடிப்பு அந்த நேரத்தில் என்னை பிரமிக்க வெச்சுது. ‘சார்லி சாப்ளின்’ படத்தில் ‘அவ கண்ண பார்த்தா’, ‘சான்ஸா சல்பஸா’ பாட்டுங்கள்ல பிரபு சார் ஆடுறப்ப ஒரு தனி ஸ்டைலே தெரிஞ்சுது. நானும் கூட ஆடியிருப்பேன். ஆனா, என்னைவிட அவரோட ஸ்டைல் பார்க்க ரொம்ப நல்லா இருந்துச்சு!
பிரபு சார் மாதிரியே எனக்கு ரொம்ப பிடிச்ச இன்னொரு ஸ்டைலிஷ் டான்ஸர் ராதிகா மேடம். செம ஸ்டைலிஷா ஆடுவாங்க. அவங்களோட நடை, மூவ்மென்ட்ஸ், ஆட்டிடியூட், மேனரிசம் எல்லாம் பார்க்குறப்ப மைக்கேல் ஜாக்சனோட சிஸ்டர் ஜானெட் ஜாக்சனை நினைவு படுத்தும். ஸ்பாட்ல ரொம்ப ஜாலியா இருப்பாங்க. அவங்களிடம் எப்பவும் ஒரு ஃபயர் இருக்கும். அவங்களோட சேர்ந்து நான் நிறையப் பாட்டுக்கு கொரியோகிராஃப் செஞ்சது இல்லை.
தெலுங்குல சிரஞ்சீவி சார்கூட ராதிகா மேடம் சேர்ந்து நடிச்ச படத்துக்கு நான் கொரியோகிராஃப் பண்ணியிருக்கேன். ‘ராசய்யா’ படத்துல நடிச்சிருக்கேன். அவங்க ஆடிய நிறைய பாட்டுங்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘ரெட்டை வால் குருவி’ படத்தில் ‘கண்ணன் வந்து ஆடுகிறான்’ பாடலில் அவங்க ஸ்டைல் ஆஃப் டான்ஸிங் அப்படி இருக்கும். லைட்டாதான் ஆடுவாங்க. ஆனா, அதில் அப்படி ஒரு ஸ்டைல் இருக்கும்.
அந்த நாட்கள்ல எல்லாம் ஹீரோ, ஹீரோயினும் ஒரு பேக்கேஜ் மாதிரி தான். நல்லா நடிக்கிறவங்களே, நல்லா ஆடுவாங்க. நல்ல அழகா இருப் பாங்க. நல்லா வசனம் பேசுவாங்க. இப்படி எல்லா திறமையும் ஒரே நபரிடம் இருக்கும். இவங்களை எல்லாம் இயக்குநர் எப்படி தேர்வு செஞ்சார்னு ஆச்சர்யமா இருக்கும்! அந்த மாதிரிதான் விஜயசாந்தி மேடமும். நடிப்புக்கு இணையா டான்ஸ்லயும் அவங்க ஷார்ப்பா இருப்பாங்க. தனித்துவம் இருக்கும். பழக அவங்க ரொம்ப ஃபிரெண்ட்லி டைப். டான்ஸ் உதவியாளர் வரைக் கும் நல்லா பேசிப் பழகுவாங்க. பெரிய இடைவெளியை மெயின் டெய்ன் பண்ண மாட்டாங்க. அவங் களோட நிறைய தெலுங்கு பாடலுக்கு வேலை பார்த்திருக்கேன். அவங்க அரசியலுக்கு வர்றாங்கன்னு சொன்னதும் என்னால் அதை நம்பவே முடியலை. ஆனா, நிஜமாவே வந்தாங்க.
டான்ஸ் ஆடுறப்ப சில பேர்கிட்ட அதுக்கு முன்னாடி பார்க்காத ஒரு ஃபயரை பார்ப்போம். ராதா மேடம்கூட அந்த டைப்தான். அவங்களுக்கு எப்ப வும் உள்ளுக்குள்ள ஒரு ஃபயர் இருக்கும். பாட்டுங்கள்ல அவங் களோட டிரெஸ்ஸிங் சென்ஸ்கூட அப்படி அழகாயிருக்கும்.
இந்த நேரத்தில் இன்னொரு ஹீரோயின் பத்தியும் சொல்லணும்னு தோணுது. தேவி, மாதுரி தீட்ஷித் கலந்த டான்ஸர்னுதான் நான் பானுப்ரியா மேடத்தை சொல்வேன். ஷார்ப், கிரேஸ்னு அவங்க டான்ஸ்ல ஒரு யுனிக் தன்மை இருக்கும். சில பேர் ஆடி முடிக்கிறப்ப அதை முழுமையா ஃபினிஷ் பண்ணாம போவாங்க. பானுப்ரியா மேடம் அடிப்படையில் ஒரு பரத நாட்டியக்காரர். அவ்வளவு ஷார்ப்பா ஆடி முடிப்பாங்க.
தெலுங்கில் நிறைய பாட்டுகளுக்கு கொரியோகிராஃப் செஞ்சிருக்கேன். ஆனா, பானுப்ரியா மேடத்தோட பாட் டுங்க எனக்கு அங்கே அமையலை. அவங்க அந்த நேரத்தில் தமிழ்ல நிறைய படம் செஞ்சிட்டிருந்தாங்க. அதுக்குப் பிறகு தமிழ்ல மூணு, நாளு பாட்டுங்க அவங்களுக்கு செய்தேன். கனக்கச்சிதம்னு சொல்வோமே அந்த மாதிரிதான், பானுப்ரியா மேடம் டான்ஸ் ஸ்டைல பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு இருக்கும்.
ஈர்ப்புன்னு சொன்னதும் குஷ்பு மேடம் டான்ஸ் நினைவுக்கு வருது. குழந்தைங்க ஆடுறப்ப எப்படி ரசிப்போம்! அந்த மாதிரிதான் குஷ்பு மேடம் டான்ஸ் எல்லாரையும் ரசிக்க வைக்கும். ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் ‘ரம்..பம்..பம்.. ஆரம்பம்’ பாட்டுக்கு மாஸ்டரா வேலை பார்த்தேன். கமல் சார், குஷ்பு மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுற பாட்டு அது. பாட்டுல ஒரு இடத்துல குஷ்பு மேடம் எட்டுல இருந்து பத்து முறை சுத்தி ரவுண்ட் அடிக்கிற மாதிரி ஒரு ஸ்டைல். முதல்ல நான் பண்ணிப்பார்த்தேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, குஷ்பு மேடம் அந்த இடத்தை ரொம்ப ஈஸியா பண்ணிட்டு போய்ட்டாங்க.
‘ரம் பம் பம் ஆரம்பம்’ பாட்டுக்கு கமல் சாரோட ஆபீஸ்லதான் ரிகர்சல் பார்த்தோம். அந்தப் பாட்டுக்கு ரெண்டு, மூணு நாட்கள் ரிகர்சல் தேவைப்பட்டது. அதுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு பெருசா குஷ்பு மேடம் அறிமுகம் கிடையாது. அவங்க நடிக்கிற படத்தில் வேலை பார்க்கு றோம்னு சந்தோஷமா இருந்துச்சு. அதுக்கு அப்பறம் ’அண்ணாமலை’ படத்துலயும் அவங்கக்கூட சேர்ந்து வேலை பார்க்குற வாய்ப்பு அமைந்தது.
படத்துக்கு அப்பாதான் கொரியோகிராஃப். மூணு நாட்கள்ல ‘அண்ணாமலை அண்ணாமலை’ பாட்டையும், ‘வந்தேன்டா பால்காரன்’ பாட்டையும் முடிச்சோம். இப்படி சீக்கிரமே ஷூட்டிங் முடிச்சுட்டா எப்பவும்போல கிரிக்கெட் விளை யாடப் போயிடுவோம். அந்த நேரத்தில் எங்கக்கூட ரஜினி சாரும் வந்து கிரிக்கெட் விளையாடுவார்.
பயணம் பயணம்னு உலகத்துல பல இடங்களுக்குப் போனாலும், எப்பவுமே எனக்கு ரொம்பவும் பிடிச்ச இடம் ஒண்ணு இருக்கு. அங்கே ஷூட்டிங்னா மட்டும் அப்படி ஒரு சந்தோஷம் வந்துடும். அது எந்த இடம்?
- இன்னும் சொல்வேன்… | படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago