இந்தி இலக்கியவாதி, படைப்பாளி
பிரபல இந்தி படைப்பாளியும் இந்தி இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான விஷ்ணு பிரபாகர் (Vishnu Prabhakar) பிறந்த தினம் இன்று (ஜுன் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்தரபிரதேசம் மாநிலம் முஸாஃபர் நகர் அருகே உள்ள மிரான்பூர் கிராமத்தில் பிறந்தார் (1912). பிறந்த ஊரில் ஆரம்பக்கல்வி கற்றார். தனது மகன் மேற்கொண்டு படிப்பதற்காக ஹரியாணாவில் உள்ள தன் சகோதரன் வீட்டுக்கு அம்மா அனுப்பி வைத்தார்.
* அங்கு இவர் மெட்ரிகுலேஷன் முடித்தார். ஏழ்மை நிலையால் உயர் கல்வி பயில இயலவில்லை. அரசாங்கத்தில் ஒரு கடைநிலை ஊழியராக மாமா இவரைச் சேர்த்துவிட்டார். பணியாற்றிக் கொண்டே தன் படிப்பையும் தொடர்ந்தார். இந்தியில் பிரபாகர், பூஷணா, சமஸ்கிருதத்தில் பிரயாகா உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ஆங்கில இலக்கியத்தில் பட்டமும் பெற்றார்.
* டால்ஸ்டாய், தாமஸ் ஹார்டி, சார்லஸ் டிக்கின்ஸ், ஓ ஹென்றி உள்ளிட்டோரின் படைப்புகளை வாசித்தார். அந்த ஊரில் இருந்த நாடகக் கம்பெனி ஒன்றில் இணைந்து செயல்பட்டார். எழுதவும் தொடங்கினார்.
* இவரது முதல் கதை ‘திவாளி’, இந்தி மிலாப் என்ற இதழில் 1931-ல் வெளிவந்தது. ‘ஹத்யா கே பாத்’ என்ற இவரது முதல் நாடகம் 1939-ல் வெளிவந்தது. விஷ்ணு என்ற இயற்பெயரிலேயே எழுதிவந்தார்.
* கவிதைகள் உள்ளிட்ட இலக்கியத்தின் அத்தனை களங்களிலும் கவனம் செலுத்தினார். ‘ஆவாரா மசீஹா’, ‘ஆராதனாரீஷ்வர்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் பாராட்டுக்களைப் பெற்றன. முன்ஷி பிரேம்சந்த் மற்றும் சரத் சந்திரரின் தாக்கம் இவரது படைப்புகளில் வெளிப்பட்டன.
* தேசபக்தி, தேசியம், சமூக சீர்திருத்தம், அரசியல், தலைமுறை இடைவெளித் தாக்கங்கள், நவீன குடும்ப முறைகள் ஆகியன குறித்த கருத்துகள் இவரது படைப்புகளில் இடம்பெற்றன. 1955 முதல் 2 ஆண்டுகள் தில்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றினார்.
* ஓர் நூலை எழுதுவதற்கு முன்னர், நிறைய ஆய்வுகளை மேற்கொள்வார். சரத் சந்திரரைப் பற்றிய ‘ஆவாரா மசீஹா’ என்ற நூலை எழுதுவதற்காக அவர் பிறந்த ஊர், பர்மா உள்ளிட்ட அவர் வாழ்ந்த அத்தனை இடங்களுக்கும் ஏறக்குறைய 14 ஆண்டுகள் பயணம் மேற்கொண்டு தகவல்கள் திரட்டினார்.
* இவரது ‘டல்தி ராத்’, ‘ஸ்வப்னமயி’, ‘தர்ப்பண் கா வ்யக்தி’, ‘கோய் தோ’ உள்ளிட்ட நாவல்களும் ‘ஆதி அவுர் அந்த்’, ‘ரெஹ்மான் கா பேட்டா’, ‘சஃபர் கே சாதி’, ‘கண்டித் பூஜா’, ‘சங்கர்ஷ கே பாத்’ உள்ளிட்ட கதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
* ‘சமாதி’, ‘டாக்டர்’, ‘யுகே யுகே கிராந்தி’, ‘பந்தினி’, ‘அப் அவுர் நஹி’ உள்ளிட்ட நாடகங்கள், ‘ஜானே அஞ்சானே’, ‘அமர் ஷஹீத் பகத்சிங்’, ‘சர்தார் வல்லபாய் பட்டேல்’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாறுகள், ‘ராஹ் சல்தே சல்தே’, ‘மேரே ஹம்சஃபர்’ உள்ளிட்ட பயண நூல்கள் இந்தி இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.
* சாகித்ய அகாடமி விருது, மஹாபண்டிட் ராகுல் சாங்கிருத்யாயன் விருது, பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், நினைவுச் சித்திரங்கள், சிறுவர் இலக்கியம், பயணக் கட்டுரைகள் உள்ளிட்ட இலக்கியத்தின் அத்தனைக் களங்களிலும் முத்திரைப் பதித்த விஷ்ணு பிரபாகர், 2009-ம் ஆண்டு 97-வது வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago