பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நெட்டிசன்களும் பல்வேறு விமர்சனங்களையும், கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
வாசுகி பாஸ்கர்
இளையராஜா பாட்டு மழை போல, யாரும் பயன்படுத்தலாம் - கங்கை அமரன். அந்த மழையில சம்பாதிச்சு கட்டின வீட்டை சசிகலா பிடுங்கியதில் தப்பே இல்ல
Shan Karuppusamy
காப்புரிமை சட்டத்துக்கே முதலில் காப்புரிமை வாங்கணும் போல இருக்கு. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க விருப்பத்துக்கு ஒவ்வொரு சட்டம் எழுதறாங்க.
Shri A P Irungovel
திருவாசகத்திற்கு இசையமைக்கும் முன் மாணிக்கவாசகருக்கு ராயல்டி கொடுத்தாராமா?
Mani Maran
இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனை அவர்களுக்கிடையேயானது அல்ல.. அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை.
கலைத்துறையில் இசை சாம்ராஜ்யம் நடத்திய இரு மேதைகளும் தற்போது தங்கள் பயணத்திலிருந்து விலகி ஓய்வெடுக்கும் காலகட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களின் இசைவாரிசாக வந்தவர்கள் தந்தையைப் போல திறமை வாய்க்காததால் திரைத்துறையில் பெரும் தோல்வியை அடைந்து தற்போது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பணம் ஈட்ட முயன்றதின் விளைவுதான் இதுபோன்ற பிரச்சனைக்கு காரணம்.
ஒருவர் பாக்கெட்டை நிரப்ப இசை நிகழ்ச்சி நடத்துகிறார். அதனால் என் பாக்கெட்டுக்கு வரும் வருமானம் குறைகிறது என இன்னொருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். அவர்கள் இருவரும் பேசித் தீர்க்கவேண்டிய விஷயம் இது. இதில் நாம் ஏன் மோதிக்கொள்ளவேண்டும்..?
Alice Priya
#இளையராஜாவுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க என்பது உண்மை தான். ஆனா அந்த இசைல எல்லாம் #SPB பாடாம, இளையராஜாவும் வேற மற்ற பாடகர்களும் பாடி இருந்தா இவ்ளோ ரசிகர்கள் இருந்துருப்பாங்களா?
Venba Geethayan
இளையராஜா இசையை மொத்தமாகத் தவிர்த்துவிட்டு இசையே இல்லாமல் கூட SPBயால் அற்புதமாகப் பாட இயலும்...
Shahjahan R
தன் அனுமதி இல்லாம பாடக்கூடாதுன்னு சொல்ல இளையராஜாவுக்கு உரிமை இருக்கு. ஏன்னா, இப்போ இருக்கிற சட்டம் அந்த உரிமையைக் கொடுத்திருக்கு.
என்ன.., இந்த மாதிரி புரொகிராம் நடக்கப்போற நேரத்துல நோட்டீஸ் பாணியில் சொல்லியிருக்க வேண்டாம். ரெண்டு பேரும் போன்லயே பேசி தீர்த்திருக்கலாம். அந்தப்பக்கம் எஸ்பிபியும் இப்படியொரு அறிவிப்பு கொடுக்காம, என்ன இளையராஜா இப்படி நோட்டீஸ் வரைக்கும் போயிட்டீங்க... என்கிட்டே கேட்டிருந்தா நானே என்ன செய்யணுமோ செஞ்சிருப்பேன்ல அப்படீன்னு பேசியிருக்கலாம்.
அண்ணாமலை. @indirajithguru
இளையராஜா ராயல்டி வாங்குன பிறகு பணத்தை கிடாரிஸ்டுக்கு கொஞ்சம், தவிலுக்கு கொஞ்சம், வயலினுக்கு கொஞ்சம்னு பிரிச்சு கொடுப்பாரா?
ஊமை குசும்பன் @agn_f2f
எத்தன பேரு பாடுனாலும் அது இளையராஜா பாட்டுன்னு தான் சொல்லப்போறாங்க.. இதுல எதுக்கு ராயல்டி?!
anand @_anandhakumar
இளையராஜா பத்தி விமர்சனம் பண்ற பாதி பேரு, அடுத்தவங்க ட்வீட்ட காப்பி பண்ணி தன்னோட வால்-ல போஸ்ட் பண்ற பயலுகதேன்.
இராம.மோகன் @Nanbaendaaa
தன் பாடல்கள் மூலம் புகழ் பெறுவதை விட பணம் பெறுவதையே விரும்புகிறாரா இளையராஜா?
Athisha Vino
இளையராஜாவின் இந்த அறிவிப்பு நேர்மையானது. எந்த ஒரு படைப்பாளிக்கும் உரிய நியாயமான உரிமையையே இளையராஜா கோருகிறார்.
இளையராஜா யாரோ ரயிலில் பிச்சை எடுக்கிற ஒருவர் தன்னுடைய பாடலை பாடக்கூடாது என்று கூறவில்லை. தேனி பக்கம் இருக்கிற சிறிய டீக்கடையில் தன்னுடைய பாடலை ஓடவிடுவதை குற்றஞ்சொல்லவில்லை. பெரிய ஊடக நிறுவனங்களை ''என்னை வைத்து சம்பாதிப்பதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டு செய்'' என்கிறார்! அவ்வளவுதான். தன்னுடைய பெயரை, இசையைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் காசு சம்பாதிப்பவர்கள் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டு வியாபாரம் செய்துகொள்ளட்டும் என்கிறார்.
VIVEGAM @2point0_Rajini
எனது பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என்றால் இளையராஜா என்ன செய்வார்- கங்கைஅமரன்..
அன்புடன் பாரதி @NBhaarathi 3
காப்புரிமை தவறேயில்லை!!
யாரிடம் கேட்பது என்பதுதான் தவறே!!
#SPB இல்லாமல் #இளையராஜா இல்லை!!
Ravikumar @WriterRavikumar
இளையராஜாவை விமர்சிப்பவர்கள் அமெரிக்காவில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளால் எஸ்பிபிக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு என்பதைச் சொல்வார்களா?
Vino Jasan
எக்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்று செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, "எனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை எனது தயாரிப்பாளர்களுக்கும் தருகிறேன்," என்றார். அவரை பணத்தாசை பிடித்தவராய் சித்தரிக்கிறது இந்த கும்பல்.
எஸ்பிபியின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல... நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'?
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago