இந்தி, வங்கமொழி இசையமைப்பாளர்
புகழ்பெற்ற இந்தி, வங்கமொழித் திரைப்பட இசையமைப்
பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட பங்கஜ் மல்லிக் (Pankaj Mullick) பிறந்த தினம் இன்று (மே 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கல்கத்தாவில் (1905) பிறந்தார். தந்தை பாரம்பரிய வங்க இசைக் கலைஞர். துர்காதாஸ் பந்தோபாத்யாயிடம் இந்திப் பாரம்பரிய இசையைக் கற்றார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் பயின்றார்.
* இசைக் கலைஞர் ஆகவேண்டும் என்று சிறுவயதிலேயே முடிவு செய்தார். க்யால், த்ருபத், டப்பா மற்றும் பிற சாஸ்திரிய சங்கீதத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தார். படிப்பு முடிந்தவுடன், ரவீந்திரநாத் தாகூரின் உறவினர் தீனேந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவரிடம் ரவீந்திர சங்கீத் பயின்றார்.
* இப்பாடல்களை முதன்முதலாக வர்த்தக ரீதியாக ரெக்கார்டிங் செய்தார். அப்போது அவருக்கு வயது 18. தாகூரின் கவிதைகளை பிரபலப்படுத்தினார். 1927-ல் கல்கத்தா வானொலி நிலையம் தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் அங்கு சேர்ந்தார். இவர் சங்கீதம் கற்றுத் தரும் இசைப் பாடங்கள் நிகழ்ச்சி அதில் ஞாயிறுதோறும் ஒலிபரப்பானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
* 50 ஆண்டுகாலம் வானொலி நிலையத்தின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தார். இன்றும் ஒலிபரப்பாகிவரும், அமரத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படும் ‘மகிஷாசுரமர்த்தினி’ நிகழ்ச்சிக்கு இசையமைத்தார். இது வங்க கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், துர்கா பூஜைக்கு இணையாகவும் மாறியது.
* மவுனப் படமாக இருந்த திரைப்பட உலகில் 1931-ல் தனதுபயணத்தைத் தொடங்கினார். தாகூரின் பாடல்களை சினிமாவிலும் புகுத்தி, சாதாரண மக்களிடம் கொண்டு சேர்த்தார். தனது பாடல் களுக்கு இசை தந்தவர் என தாகூர் இவரைப் போற்றியுள்ளார்.
* ‘நேமேசே ஆஜ் ப்ர்தோம் பாதல்’ இவரது முதல் திரைப்படம். சில படங்களில் நடித்தும் உள்ளார். நல்ல குரல் வளமிக்கவர். பல படங்களில் தான் இசையமைத்த பாடல்களைத் தானே பாடியும் உள்ளார்.
* எழுதும் திறனும் கொண்டிருந்த இவர், பல இசை நூல்களை எழுதி வெளியிட்டார். வங்காளம், இந்தி, உருது, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏராளமான பாடல் இசைத்தட்டுகளை வெளியிட்டுள்ளார்.
* பாடல்களை இயற்றும் திறனும் பெற்றிருந்தார். தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தில் ஏராளமான பக்தி, தேசபக்திப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள் உட்பட 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். பல பாடல்களைத் தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
* இந்தியத் திரையிசையில் அதுவரை நடிகரே பாடிவந்த நிலையை மாற்றி, பின்னணிப் பாடல் முறையைத் தொடங்கிவைத்தவர்களில் முதன்மையானவர் இவர். 1970-ல் பத்ம விருது, 1972-ல் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார். நாட்டில் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கப் பாடலைப் பாட இவர் அழைக்கப்பட்டார். 2006-ல் இவரது பெயரில் தபால்தலை வெளியிட்டது.
* இந்திய சாஸ்திரிய இசை நிபுணரும், மாயமந்திரம் செய்யும் குரலுக்குச் சொந்தக்காரர் எனப் போற்றப்பட்டவரும், இந்தியத் திரையுலகுக்கு தனது இசையால் மகத்தான பங்களிப்புகளை வழங்கியவருமான பங்கஜ் மல்லிக் 73-வது வயதில் (1978) மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago