ராபர்ட் பேடன் பவெல் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

இங்கிலாந்தின் படைத் தளபதியும் சிறுவர், சிறுமியருக்கான சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான ராபர்ட் பேடன் பவெல் (Robert Baden-Powell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்து நாட்டின் பேடிங்டன் என்ற இடத்தில் பிறந்தவர் (1857). இவரது முழுப் பெயர் ராபர்ட் ஸ்டீவன்சன் ஸ்பித் பேடம் பவெல். மூன்று வயதில், தந்தை காலமானார். படுசுட்டியான இந்தச் சிறுவன் பயின்ற பள்ளியைச் சுற்றிலும் காடாக இருந்தது.

* யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் சென்றுவிடுவான். மலையேறுவது, காட்டு விலங்குகளைப் பிடிப்பது, நெருப்பு உண்டாக்குவது, பிடித்த விலங்குகளை எப்படி சமைப்பது என்று அனைத்தையும் தானாகவே கற்றுக்கொண்டான்.

* ராணுவத்தில் சேர்வதற்கான தேர்வில் தேறி, 1876-ல் ராணுவத்தில் இணைந்தார். சிறு படையைக் கொண்டு அற்புதமான பலவித போர்த்தந்திரங்களைக் கையாண்டு, எதிரிகளை நிலைகுலையச் செய்தார்.

* இவரது திறமைகளைப் பாராட்டிய ஆப்பிரிக்க சுதேசிகள் ‘ஒருபோதும் தூங்காத ஓநாய்’ என்பதைக் குறிக்கும் ‘இம்பிசா’ என்ற பெயரில் இவரை அழைத்தனர். 43-வது வயதிலேயே மேஜர் ஜெனரல் பதவியை எட்டிவிட்டார். 1907-ல் ‘ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ்’ என்ற நூலை ராணுவத்தினருக்கான பாடப்புத்தகமாக எழுதினார். அடுத்த ஆண்டு ‘எய்ட்ஸ் ஃபார் ஸ்கவுட்டிங்’ என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

* ஆப்பிரிக்க போர் முடிந்து பிரிட்டன் திரும்பியபோது, இங்கிலாந்து முழுவதும் இவரது போர்க்கால சாகசங்கள் பரவியிருப்பதையும் சிறுவர், சிறுமியர் இவரது உருவம் பொறித்த பொத்தான்களை அணிந்திருப்பதைக் கண்டார்.

* சிறுவர்களை ஆளுமைத் திறன்மிக்க நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்த இவர், 1907-ல் 22 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். தென்னப்பிரிக்காவில் முகாம் ஒன்றை நடத்தி, பல்வேறு பயிற்சிகளை அளித்தார். இந்த முனைப்பு, சிறுவர்களுக்கான சாரணர் இயக்கமாக மலர்ந்தது. மிக விரைவில் நாடு முழுவதும் பரவியது.

* தனது ‘ஸ்கவுட்டிங் ஃபார் பாய்ஸ்’ நூலில் பல மாற்றங்களைச் செய்து மீண்டும் வெளியிட்டார். பெண்களும் இந்த இயக்கத்தில் சேர முன்வந்தனர். 1910-ல் சிறுமியர் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார். இவை வளர்ந்துவரும் வேகத்தையும் அதன் அற்புதப் பலன்களையும் கண்டு வியந்த மன்னர், இவரை ராணுவத்திலிருந்து விடுவித்து, சாரணர் இயக்கத்தை வழிநடத்திச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

* அன்றிலிருந்து இந்த இயக்கத்துக்காக 30 ஆண்டுகள் கடுமையாகப் பாடுபட்டார். ‘ஸீ ஸ்கவுட்’, ‘கப்ஸ் ஸ்கவுட்’, ‘ரோவர் ஸ்கவுட்’, ‘ஏர் ஸ்கவுட்’ என உருவாக்கி, மக்களின் அனைத்துப் பிரிவினரையும் இணைக்கக்கூடிய இயக்கமாக இதை மாற்றினார்.

* உலகம் முழுவதும் இந்த இயக்கம் வெற்றிகரமாக கிளைவிரித்தது. 28 நாடுகள் இவருக்கு பரிசுகளும் விருதுகளும் வழங்கி சிறப்பித்தன. இங்கிலாந்து மன்னர் ‘லார்ட்’ பட்டம் வழங்கினார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.

* 1912-ல் உலக சகோதரத்துவத்தை வளர்க்கும் நோக்கில் உலகம் முழுவதும் பயணம் செய்தார். உலகப் புகழ்பெற்ற நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பில் கிளின்ட்டன், ஜார்ஜ் புஷ், பில்கேட்ஸ் உள்ளிட்ட பல சாதனையாளர்கள் சாரணர் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள். தன்னலமற்ற சேவையுணர்வை உலகம் முழுவதும் இளம் மனங்களில் விதைத்த ராபர்ட் பேடன் பவெல் 1941-ம் ஆண்டு 84-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்