இதுதான் நான் 81: இது என்னோட ஸ்டைல்!

By பிரபுதேவா

முதன்முதலா நான் டைரக்‌ஷன் பண்ண வரும்போது சில பேர், ‘இவர் யார்கிட்டேயும் அசிஸ் டென்டா கூட இல்லை. எதுக்கு இந்த வேலை? நல்லா நடிச்சிட்டுத்தானே இருக்கார். அதை மட்டும் கவனிக்க வேண்டியதுதானே!’ன்னு சொன் னாங்க. இன்னும் ஒரு சிலர், ‘கொரியோ கிராஃபியில நிறைய விஷயம் பண்ணிட்டி ருக்காரே, வரட்டும்… கண்டிப்பா டைரக்‌ஷன்லேயும் நல்லா பண்ணு வாரு!’ன்னும் சொன்னாங்க.

டைரக்‌ஷன் செய்ய வந்தப்போ, ‘பிரபு வுக்கு ஏன் இந்த வேலை?’ன்னு சொன் னதை நான் தப்பாவே எடுத்துக்கலை. வந்து ஜெயிச்சிட்டோம். ஓ.கே! ஒரு வேளை ஜெயிக்காமப் போயிருந்தால் அவங்க சொன்னது எல்லாம் உண்மை யாத்தானே ஆகியிருக்கும்னு நினைச்சிப் பேன். அதனால், அதை நான் நெகட்டிவ் ஆக எடுத்துக்கலை. டைரக்‌ஷன் பண்ணும்போது ‘ஈகோ பார்ப்பது, யார் சொல்றது பெருசு? எது சின்னது..?’ இதையெல்லாம் தூக்கி கீழே வெச்சிட்டுத்தான் வேலை பார்ப்பேன். அப்போதான் கரெக்டா வேலை நடக்கும்கிறது என் நம்பிக்கை.

டைரக்‌ஷன் பண்ணும்போது ஒவ் வொரு விஷயத்தையும் ரசிப்பேன். நம்மை சுத்தி நடக்குறதை காது கொடுத்து கேட்டுப்பேன். ஆனா, அப்படி கேட்குற எல்லா விஷயத்தையும் செய்யணும்னு நினைக்க மாட்டேன். எனக்குன்னு ஒரு முடிவை எடுப்பேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ஐடியா சொல்வாங்க. மத்தவங்க சொல்றதை மூளைக்கு ஏத்திப்பேன். அதில் எனக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் மனசால பண்ணுவேன். அதைத்தான் நான் இப்போ வரைக்கும் செய்யறேன்.

படம் பண்ணும்போதும் சில டைரக்டர், ஸ்டோரி போர்டு வரைஞ்சு, அதன்படி ஷூட் பண்ணுவாங்க. என்னோட முதல் படம் ‘நுவ்வொஸ்தானென்டே நேனொத்தன்டடனா’ பண்ணும்போது நானும் ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முதல் நாள் இரவு எப்படி ஸீன் வரணும்னு ஒரு ஸ்டோரி போர்டு மாதிரி எழுதிப்பேன். அதில் படமெல்லாம் வரைஞ்சு, தெளிவா இருக்காது. அதில் என்ன எழுதியிருக்கேன்? எப்படி ஸீனை எடுக்கப் போறேன்னு எனக்கு மட்டும்தான் புரியும்.

தானா அமையுது

அதுவும் முதல் படம், முதல் நாள் ஷூட்டிங் மியூஸிக் பேஸ்ல ஸீன் எடுத் தோம். அதுக்கு எப்படி ரீ-ரெக்கார்டிங் இருக்கணும்னு நானே மனசுக்குள்ள செட் பண்ணிக்கிட்டேன். வெளியில சவுண்ட் எதுவும் இருக்காது. பக்கத்தில் இருக்குறவங்களுக்குக்கூட, ‘இது எதுக்கு? ஏன்?’ன்னும் தெரியாது. ஷூட் முடிஞ்சு மூணு நாட்களுக்குப் பிறகுதான் அந்த ஸீன் எப்படி வரப்போகுதுன்னு, கூட இருக்குறவங்கக்கிட்டே போட்டு காட்டினேன். எல்லோருக்கும் பிடிச் சுப் போச்சு. கடைசியில படமே கொரியோகிராஃபி மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. என்னோட எல்லா படங்களுமே கொரியோகிராஃபி மாதிரிதான் இருக்கும். அதுவும் ஒரு டைமிங்குள்ள இருக்கும். இதை நான் வேணும்னு பண்றதில்லை. தானா அமையுது.

நான் டைரக்‌ஷன் பண்ற படத்துக்காக மியூஸிக் டைரக்டரோட உட்கார்ந்து ஒரு பாட்டு பண்ணும்போது அதோட ராகம், தாளம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா, என் படங்களோட பாட்டுங்க நல்லா ஹிட் ஆகும். ‘பிரபு ஒரு கொரியோகிராஃபர். பாடல் களை நல்லா எடுப்பாரு!’ன்னு மியூஸிக் டைரக்டருங்க ஸ்பெஷல் அக்கறை எடுத்துக்கிட்டு ஒருவிதமான எதிர்பார்ப் போட கூடுதலான சிரத்தையோட என் படத்துக்கான பாடல்களை உருவாக்கு வாங்கன்னு நினைக்கிறேன்.

கொரியோகிராஃபி செய்யறதுக்காக ஒரு பாடலைக் கேட்டதுமே உள்ளுக் குள்ளே எனக்கு ஒரு விஷுவல் வந்துடும்னு முன்னாடியே சொல்லியிருக் கேன். அது மாதிரி, ஒரு படம் டைரக்‌ஷன் பண்ணும்போதும் இந்த ஸீனுக்கு இப்படித்தான் மியூஸிக் பிட் இருக் கணும்னு நானே முடிவு பண்ணிடுவேன்.

எனக்குத் தெரிஞ்சிடும்

உதாரணமா, ஒரு காட்சியில் ஹீரோ யின் மார்க்கெட் போய் காய்கறி வாங்கப் போறாங்க. அவங்க எந்த இடத்துல எத்தனை ஸ்டெப்ஸ் வெச்சி நடந்து போகணும்கிற வரைக்கும், நான் மியூஸிக்ல போட்டு வெச்சிடுவேன். கடைக்குள்ளே போய் ஒரு வெண்டைக் காய் வாங்குறான்னா, அதை எந்த டைமிங்ல அவங்க எடுத்து டப்.. டப்னு உடைச்சுப் பார்க்கணும்கிற வரைக்கும் மியூஸிக்கோட சொல்வேன். அவங் களோட டைமிங் கொஞ்சம் மாறினாலும் கரெக்டா எனக்குத் தெரிஞ்சிடும்.

உடனே அவங்கக்கிட்ட, ‘டைமிங் மாறுது. இந்த இடத்துல டப்புன்னு உடைங்க!’ன்னு திரும்பவும் சொல்வேன். இதெல்லாம் ஆரம்பத்துல அவங்களுக்குப் புரியாது. பின்னாடி மியூஸிக் இப்படி வரப் போகுதுன்னு சொன்னதும், அவங்களே புரிஞ்சிப்பாங்க. ‘போக்கிரி’, ‘எங்கேயும் காதல்’னு பல படங்களில் இந்த மாதிரி நிறைய நடந்திருக்கு. இப்போ ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ பண்றேன். அதுவும் இப்படித்தான் நடக்கும்.

சரியா இருந்தா ஓகே!

அடுத்ததா, என் லைஃப்ல ஆரம்பத் தில் இருந்து இப்போ வரைக்கும் சிபாரிசு செய்றது சுத்தமா பிடிக்காது. ஒருத்தரை பிடிக்கலைன்னாக்கூட, படத்தோட கேரக்டருக்கு சரியா இருந்தா அவங்க தான் அதில் நடிப்பாங்க. ஆனா, எனக்குப் பிடித்த ஒருத்தருக்கு வேலை தெரியலைன்னா கண்டிப்பா அவங்க வேண்டாம்னு சொல்லிடுவேன். அதுக்கு சிலர், ‘நீங்க தானே படத்தோட டைரக்டர். அதுவும் இப்போ தயாரிப்பாளர் வேற. இவ்ளோ நல்ல பொசிஷன்ல இருக்கீங்க. நீங்க சொன்னா மத்தவங்க கேட்பாங்களே!’ன்னு சொல்வாங்க. அதுக்கு நான், ‘அப்படி இல்லீங்க. அது வேற இது வேற!’ன்னு சொல்லிடுவேன்.

கொரியோகிராஃபியில இருந்து டைரக்‌ஷனுக்கு வந்ததுனால எடிட்டிங் பண்ணும்போது நான் பண்ற ஸீன் சாதாரணமாவே ஒரு ரிதத்தோட அமைஞ்சிடும். அதே மாதிரி கொரியோ கிராஃபியில இருந்து டைரக்‌ஷனுக்குள்ள வந்ததுனால நான் ஃபாலோ பண்ற இன்னொரு விஷயமும் இருக்கு. எப்படி ஒரு பாட்டு பண்ணும்போது, எங்கே டான்ஸ் இருக்கும்? எந்த இடத்துல நடக் கணும்? எங்கே ஜம்ப் இருக் கணும்னு பார்த்து பார்த்து டிரெஸிங் யூஸ் பண்ணுவோமோ, அந்த மாதிரிதான் டைரக்‌ஷன் பண்ணும்போதும் எந்த ஸீனுக்கு என்ன டிரெஸிங்? எந்த ஃபைட்டு? எந்த மாதிரி டிரெஸிங் இருக் கணும்கிறதையும் முடிவு பண்ணு வேன். இந்த விஷயத்துல ஒவ்வொரு டைரக்டரும் ஒவ்வொரு விதத்தை ஃபாலோ பண்ணுவாங்க. நான் ஃபாலோ பண்றது இந்த ஸ்டைல்.

நான் டைரக்‌ஷன் பண்ணும்போது பெரும்பாலும் அந்தப் படத்துல வர்ற பாடல்களுக்கு கொரியோகிராஃபி பண் றதை முக்கால்வாசி தவிர்த்துடுவேன். அது ஏன்?

- இன்னும் சொல்வேன்…



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்