சுயமோக செல்ஃபிக்களின் ஆபத்தான மரணங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்து குறித்து ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் தெரிந்துதான் இருக்கும் என்பதையும் நிச்சயமாக சொல்லமுடியவில்லை. ஒரு விபரீதம் வரும்போது அதைப் புரிந்துகொள்ள அப்போது நம் உயிர் நம் கையில் இருக்காது என்பது கசப்பான உண்மை.
ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி, அணைக்கட்டு உச்சியில் செஃபி, மலைமுகட்டில் நின்று செல்ஃபி, சிங்கத்துடன் செல்ஃபி, போன்றவற்றை கேட்பதற்கே எரிச்சலாக இருக்கும். ஆனால், இடம், நேரம், ஆர்வம் போன்றவற்றை கருத்தில்கொண்டு இச்செய்திகளை ஓரளவு புரிந்துகொள்ளமுடியும். ஆனால் விடலைத்தனமான பதின்பருவத்தைக் கடந்துகொண்டிருக்கும் இளசுகளின் நிலைமைதான் பலநேரங்களில் புரிந்துகொள்ளமுடியவில்லை.
'செல்ஃபி' குறும்படம் இவற்றின் பலஅம்சங்களையும் விளக்கமுற்படவில்லை. ஆனால் ஆபத்தான இடத்துக்கு ஒரு பிரச்சனை நகர்ந்து செல்லும் திசையை சுட்டிக்காட்டியுள்ளது. மாலைப்பொழுதில் அயர்வாக வீடுதிரும்பினாலும் வரும் குறுஞ்செய்திகளும் பதில்களும் மும்முரமாக அதனால் உற்சாகம் அடையும் பெண்ணைப் பற்றிய குறும்படம் இது.
குறுஞ்செய்திகளின் ஊடே அவ்வப்போது செல்ஃபி படங்களையும் அனுப்புவது அவளுக்கு வழக்கமாகிவிடுகிறது. ''காலைல ஜிம்முக்குப் போகணும் நாளைக்குப் பாக்கலாம்'' என்று கடைசியாக ஒரு செய்தியையும் அனுப்பிவிட்டு குளியலறைக்கு செல்கிறாள். அப்படி சென்றவள் பின் எதற்காக வேகமாக வந்து ஸ்மார்ட்போனை திரும்பவும் எடுத்துச் செல்ல வேண்டும்.
பரவசமும் படபடப்பும் பதட்டமும் கொண்டு ஸ்மார்ட்மோன் செல்ஃபி மோகத்தில் அலைக்கழியும் நிஷா சுப்பிரமணியன் நடிப்பு குறும்படத்தின் செய்தியை உளவாங்கிக்கொள்ள பெருமளவில் உதவுகிறது.
இக்கால இளைஞர்களின் மனநிலையும் அவர்களது போக்கையும் சுட்டிக்காட்டுவதற்காக, 10 நிமிடத்தில் ஒரு நல்ல குறும்படத்தை தந்துள்ளார் இயக்குநர் யோகேஷ். இது ஒரு சிறு உதாரணம் என்பது போல இயக்கியுள்ளார். அப்பெண் ஜிம்மிலிருந்து தனது காரை எடுத்துச்செல்லும் அந்த மலேஷிய வீதிகளின் அழகைக் காட்டியுள்ள ராஜ்குமாரின் கேமரா கோணம் பொறாமையாக இருக்கிறது. யோகேஷ்ஷின் இக்குறும்பட இயக்கத்திற்கு துணைநிற்கும் தினேஷ்ஷின் இசையும் எடிட்டிங்கும் சிறப்பாக பொருந்தியுள்ளது. 3சி கிரியேஷன்ஸ் சார்பாக பணியாற்றிய மொத்த குறுபடக் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
செல்ஃபி குறும்படத்தைக் காண
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago