அமெரிக்க வனவிலங்கு ஆய்வாளர்
கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அமெரிக்க வனவிலங்கு ஆய்வாளர் டயேன் ஃபாசி (Diane Fossey) பிறந்த தினம் இன்று (ஜனவரி 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் (1932) பிறந்தார். பெற்றோர் பிரிந்ததால், தாயிடம் வளர்ந்தார். அறிவுக்கூர்மை மிக்க மாணவியாகத் திகழ்ந்தார். 6 வயதில் குதிரை ஏற்றம் கற்றார். விலங்குகளிடம் மிகுந்த பற்று கொண்டிருந்தார்.
* பள்ளிக்கல்விக்குப் பிறகு மாரின் ஜூனியர் கல்லூரியில் பயின்றார். கால்நடை அறிவியலில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முனைவர் பட்டமும் பெற்றார். ஆகுபேஷனல் தெரபி பயின்று, பல மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொண்டார்.
* மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது, பண்ணை முதலாளிகளின் வேண்டுகோளால், அவர்களது விலங்குகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். உலகில் உள்ள எண்ணற்ற வன விலங்குகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டானது.
* ஆப்பிரிக்கா சென்றார். டாக்டர் லூயிஸ் லீக்கி வழிகாட்டுதலின்படி, மலை கொரில்லாக்கள் குறித்த நீண்டகால களஆய்வுப் பணியைத் தொடங்கினார். காங்கோ ஆராய்ச்சித் திட்டத்துக்காக ‘நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி’, ‘வில்கி பிரதர்ஸ் பவுண்டேஷன்’ ஆகியவற்றின் நிதியுதவியுடன் ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். பின்னர், அதில் இருந்து விலகி ருவாண்டா சென்றார்.
* அங்குள்ள விருங்கா மலைப் பகுதியில் ஆய்வு மையம் நிறுவினார். சுமார் 10,000 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பல ஆண்டுகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பல சவால்களை எதிர்த்துப் போராடினார். மலைப் பிரதேச கொரில்லாக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இவர் மேற்கொண்ட பணிகளை உலகமே வியந்து பாராட்டியது.
* ‘பீனட்ஸ்’ என்று பெயரிட்டு அழைத்துவந்த ஒரு கொரில்லா தயக்கமின்றி இவரது கையைத் தொட்டது. கொரில்லா - மனித தொடர்புகளிலேயே அமைதியாக நடந்த முதல் ஸ்பரிசமாக இது பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பல கொரில்லாக்களும் இவருடன் நெருங்கிப் பழகின.
* இவரது ஆராய்ச்சிகளால், கொரில்லா குறித்த ஏராளமான பல புதிய தகவல்கள் கிடைத்தன. ‘டிஜிட்’ என்று இவர் பெயரிட்டு அழைத்த சிறு கொரில்லா கொலை செய்யப்பட்டதால், விரக்தி அடைந்தார். பின்னர், கொரில்லாக்களின் பாதுகாப்புக்கு நிதியுதவி செய்ய ‘டிஜிட் ஃபண்ட்’ என்ற அமைப்பை தொடங்கினார்.
* கொரில்லாக்களுடன் நெருங்கிப் பழகி ஏராளமான ஆய்வுகள் மேற்கொண்டார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். அவை நேஷனல் ஜியாகிரஃபிக் இதழில் வெளியாகின. வனவிலங்கு, குறிப்பாக மலைப்பகுதி கொரில்லாக்களின் பாதுகாப்புக்காக 20 ஆண்டுகளுக்கு மேல் பாடுபட்டார்.
* ‘கொரில்லாஸ் இன் தி மிஸ்ட்’ என்ற நூலை வெளியிட்டார். இது உலக அளவில் விற்பனையில் சாதனை படைத்தது. இப்புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமும் வெற்றி பெற்று, இவருக்கு பேரும் புகழும் பெற்றுத் தந்தது.
* கொரில்லாக்கள் குறித்த ஆய்வுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த டயேன் ஃபாசி 1985-ல் 53 வயதில் கொலை செய்யப்பட்டார். இறந்துபோகிற, கொல்லப்படுகிற கொரில்லாக்களுக்காக ருவாண்டாவில் இவர் கட்டிய நினைவிடத்தில், ‘டிஜிட்’ கொரில்லாவின் சமாதிக்கு அருகிலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
25 days ago