எழுத்தாளர், ஓவியர், தத்துவமேதை, நாடகாசிரியர், நாவலாசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட போலந்து படைப்பாளி ஸ்டானிஸ்லா விட்கேவிச் (Stanislaw Witkiewicz) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* போலந்து தலைநகர் வார்சாவில் (1885) பிறந்தார். இவரது அப்பா சிறந்த ஓவியர், கட்டிட வடிவமைப் பாளர், கலை விமர்சகர். பள்ளிகள், கல்வி முறை மீது தந்தைக்கு விருப்பம் இல்லாததால், வீட்டில் மகனுக்கு தானே கல்வி கற்பித்தார். பிரபல கல்வியாளர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகளை வீட்டுக்கு வர வழைத்தும் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
* படு சுட்டியான இவர், கல்வி மட்டு மல்லாமல் இலக்கியம், ஓவியம், இசை, தத்துவம், அறிவியல், புகைப்படக் கலை, அழகியல் என பலவற்றையும் கற்றுத் தேர்ந்தார். 8 வயதிலேயே குறு நாடகங்கள் எழுதி, வீட்டில் இருந்த சிறிய அச்சகத்தில் அச்சிட்டார்.
* பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அனைத்து முக்கிய இடங்களையும் புகைப்படம் எடுத்தார், ஓவியங்களாகவும் வரைந்தார். எழுத்தாற்றல் மிக்க இவர், தத்துவார்த்தமான பல கட்டுரைகளை எழுதினார். 17-வது வயதில் இவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டார்.
* ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்தார். முதல் உலகப் போரில் தனது படைப்பிரிவின் அரசியல் பொறுப்பாளராக செயல்பட்டார். சிறந்த தத்துவச் சிந்தனைகளைக் கொண்டிருந்தார்.
* அந்தக் காலகட்டத்தில் போர், சமூகப் புரட்சி, அந்நியப் படையெடுப்பு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டார். இவை பின்னாளில் இவரது படைப்புகளில் இடம் பெற்றன. காயம் பட்டதால் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
* நாடு திரும்பிய பிறகு, வருமானம் ஈட்டுவதற்காக ஓவியங்கள் வரையத் தொடங்கினார். இவை மிகவும் பிரபலமடைந்தன. ஓவியக் கலைக்கான விதிமுறைகள், பல்வேறு பாணிகளுக்கான வழிகாட்டி முறைகளைத் தொகுத்து எழுதினார்.
* நாவல், நாடகம் எழுதுவதையும் நிறுத்தவில்லை. 1920-களில் ‘ஃபார்மிஸ்ட்’ என்ற கலைக்குழுவுடன் இணைந்து செயல்பட்டார். அப்போதுதான் தனது பெரும்பாலான நாடகங்களை எழுதினார். 1918 - 1925 காலகட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 40 நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றன.
* அடுத்த 12 ஆண்டுகாலத்தில் ஆயிரக்கணக்கான ஓவியங்களைத் தீட்டினார். இலக்கிய, கலை விமர்சனக் கட்டுரைகள், அறிவியல் கட்டுரை தொடர்களையும் எழுதினார். போலந்து நாட்டின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராகப் பிரபலமடைந்தார். ஆசிய, ஐரோப்பிய மொழிகளில் ஏறக்குறைய 40 மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன.
* தனது இறுதி நாட்களில் தத்துவப் படைப்புகளில் அதிக கவனம் செலுத்தினார். பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். பல பொது அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் உரையாற்றினார். போலந்து நாட்டின் உயரிய கவுரவமான ‘கோல்டன் லோர்’ என்ற விருதை போலந்து இலக்கிய அகாடமி இவருக்கு வழங்கியது.
* ஒரு எழுத்தாளராக, நாடகாசிரியராக போலந்து இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்புகளை வழங்கினார். 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளி, தத்துவவாதி என்று போற்றப்பட்ட ஸ்டானிஸ்லா விட்கேவிச் 54-வது வயதில் (1939) மறைந்தார். இவரது நாடகங்கள் உலகின் பல நாடுகளிலும் இன்றளவும் மேடையேற்றப்பட்டு பாராட்டுப் பெற்று வருகின்றன.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
21 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago