“Education is the basic importance in the planned development of a nation” - First Five Year Plan
“Education is the most crucial investment in human development. Education influences improvement in health, hygiene, demographic profile, productivity and all that is connected with the quality of life.” - The Ninth Five Year Plan
ஐந்தாண்டு திட்டங்களில் கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதைப் போலவே பெற்றோரின் மனநிலையிலும் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் உறுதிமொழி படிவத்தில் கையொப்பம் பெறுவதற்கான வந்த சிலர், படிவத்தில் எழுதப்பட்டிருந்த மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி போன்றவற்றை சரிப்பார்த்து கையெழுத்து போட்டு விட்டு, இப்போது பிள்ளைகள் எவ்வாறு படிக்கின்றனர் என்று கேட்டனர். மேலும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளும் படியும் கூறிச்சென்றனர்.
ஆனால், வேறு பல பெற்றோரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. படிவத்தில் கையொப்பமிட்டு பெரும்பாலான பெற்றோர் ஏதாவது குறை கூறினால்தான் தன்னை அக்கறையுள்ள பெற்றோராக கருதுவர் என்பதைப்போல விதவிதமாய் பிள்ளைகளின் மீது தேவையற்ற குற்றசாட்டுகளை வைத்தனர்.
அவற்றில் சில...
“என் மகள் எப்போதும் எழுதிக்கொண்டே இருக்கிறாள்.”
“என் மகன் என்னை டிவி பார்க்கவே விடுவதில்லை.”
“கையெழுத்தே சரியில்லை.”
“ஒரு மதிப்பெண்ணில் முதல் ரேங்க்-ஐ தவறவிட்டாள்”
தற்போதைய மாணவர்களைவிட பெற்றோரின் மனநிலையே கவலை தருவதாய் இருக்கின்றது. கையெழுத்தே சரியில்லை என்று மகளை குறைகூறிய தந்தைக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. ஏனெனில், அப்பெண்ணின் கையெழுத்து அவ்வளவு அழகு கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல. அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவர் பொறியியல் முடித்துவிட்டு செங்கல் சூளை நடத்துவதாய் தெரிவித்தாள். ஓ! இவர் தன்னுடைய நிறைவேறாத ஆசையை பெண்ணின் மீது திணிக்கிறார் என்று புரிந்தது.
பெற்றோர் பலரது மனநிலை இப்படித்தான் இருக்கிறது. ராணுவ வீரர் ஒருவர் வந்தார். என் மகள் 90% மார்க் வாங்கவில்லை என்று குறைபட்டார். அவளது உள்வாங்கும் திறன் அளவுக்குத் தானே அவள் மதிப்பெண் பெற முடியும் என்றேன். அது அவருக்கு புரிந்தது போலவே தெரியவில்லை. அதற்கும் மேல் Attitude, Aptitude, Individual Difference என்று அவருக்கு பாடம் நடத்தி புரியவைக்க எனக்கு நேரமில்லை.
அடுத்து வந்தவர், இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார். படிவத்தில் கடகடவென கையெழுத்திட்டு நீட்டியவர், 'நேற்று ஏதோ National Level Talent Test' என்று சொல்லியனுப்பியிருந்தீங்களே, அதைப் பற்றி சொல்லுங்க' என்று பரபரத்தார். 'அதற்கு முன் உங்கள் மகன் State Level Talent Exam-ல் qualify ஆயிருக்கான். அதற்காக அவனுக்கு 1000 ரூபாய் Cheque வந்திருக்கு. அதைப் பாருங்க' என்று கூறி, 'அப்பாவிடம் அதை காட்டுப்பா சந்தோஷப்படுவார்' என்றேன். மூச்சிரைக்க வகுப்பறையிலிருந்து எடுத்துக்கொண்டு ஓடிவந்தான் பிள்ளை. அதை கையில் வாங்கி வைத்துக்கொண்டு மீண்டும் அந்த Exam-ஐ பற்றி சொல்லுங்க என்றார். என்ன மனிதர் இவர். கடுகடுவென்று முகத்தை வைத்துக் கொண்டு! பிள்ளை எத்தனை பெரிய சாதனை செய்துவிட்டு அருகில் நிற்கிறான். முதலில் பெருமிதத்துடன் அவனிடம் கைகொடுத்து வாழ்த்தி அவனுக்கு ஒரு சிறு அங்கீகாரத்தையும் கொடுக்காமல் அடுத்து என்ன என்ன என்று நிற்கிறாரே என்று மிகவும் வருத்தமானது.
‘நீங்கள் ஹெட்மாஸ்டரைப் பாருங்கள்’ என்று அனுப்பி வைத்தேன். அவர் அங்கேயும் அதைப்போலவே காரியத்திலேயே கண்ணாக இருந்ததைப் பார்த்த தலைமை ஆசிரியர் முதலில் பிள்ளைக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்லுங்கள் என்று வற்புறுத்திய பிறகே கைகுலுக்கி இருக்கிறார். இந்த தந்தையிடம் அந்த பிள்ளை எப்படித்தான் இருக்கிறானோ. இந்த ஆள் வீட்டிலும் இப்படித்தான் போல, அதான் பிள்ளை வாயே திறக்கிறது இல்லையோ என்று கூறி வருத்தப்பட்டார் தலைமை ஆசிரியர்.
“கல்வி என்பது போரையும் வறுமையையும் அறியாமையையும் போக்குவதற்காகவும், மக்களிடையே ஒற்றுமையையும் பரந்த மனப்பான்மையையும் ஏற்படுத்துவதற்காகவும் அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்காகவும் தானே தவிர, கல்வி மட்டுமே ஒரு தனிச்சிறப்புமிக்க, அனைத்தையும் நிகழ்த்தக்கூடிய மாய உலகை அடைந்து விடும் வழியாகிவிடாது”என்கின்றன கல்விக்கொள்கைகள்.
அதுமட்டுமல்லாமல் எதனையும் விட முக்கியமானது தனி மனிதனின் ஆளுமையும் உளவியல் சார்ந்த நல் வளர்ச்சியுமே என்பதை பெற்றோர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் பிள்ளைகளை வெறும் மதிப்பெண் பெரும் எந்திரங்களாக பார்க்காமல் அவர்களது முழு உடல், உள மற்றும் ஆளுமை வளர்ச்சியில் அக்கறை செலுத்துவது ஒவ்வொரு பெற்றோரது இன்றியமையாத கடமை.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago