ஜப்பான் மொழியியல் ஆராய்ச்சியாளர்
*ஜப்பானின் மொழியியல் ஆராய்ச்சி நிபுணரும் ஜப்பானிய மொழியையும் தமிழ்மொழியையும் ஆராய்ந்து அவற்றுக்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவருமான சுசுமு ஓனோ (Susumu Ohno) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
*டோக்கியோவில் பிறந்தவர் (1919). பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் டோக் கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அங்கேயே பணிபுரியத் தொடங்கினார். காக்சுயின் பல்கலைக் கழகத்தில் 1952-ல் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். மொழி ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டார். ஜப்பான் மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார்.
*அம்மொழியை கொரியா, ஆஸ்திரோனேசிய உள்ளிட்ட பல மொழிகளுடன் ஒப்பிட்டு அவற்றுக்கிடையேயான தொடர்பு குறித்து ஆராய்ந்தார். பிறகு இவரது கவனம் திராவிட மொழிகள் மேல் பதிந்தது. அப்போதுதான் அவற்றின் தாக்கம் ஜப்பான் மொழியில் நிறைந்துள்ளதை அறிந்தார்.
*ஜப்பான் மொழியின் தோற்றம்’ என்ற இவரது நூல் 1957-ல் வெளிவந்து, இந்நூல் வெளிவந்த பிறகுதான் ஜப்பான் மக்களுக்கு தங்கள் மொழியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆவல் உண்டானதாகக் கூறப்படுகிறது.
*ஜப்பானில் உள்ள யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள கல்லறைகளை ஒப்பிட்டும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். தமிழ் கற்பதற்காகத் தமிழகம் வந்தார். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பொற்கோவிடம் முறையாகத் தமிழ் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்றார்.
*பேராசிரியர் இமென்யு மற்றும் முனைவர் பொற்கோ உதவியுடன் ஜப்பான் - தமிழ் மொழிகளை ஆராய்ந்தார். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது மேற்பார் வையில் உருவாக்கப்பட்ட ஜப்பான் அகராதிகள் பரபரப்பாக விற்பனை யாகின. 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழஞ்சுவடிகளை ஆராய்ந்து இவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் மிகவும் பிரபலமடைந்தன.
*தொல்பொருள் ஆய்வு, நாட்டுப் பாடல்கள் ஆகியவை குறித்தும் ஆராய்ந்தார். தமிழ் அமைப்புகள், தமிழ் ஆய்வாளர்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தார். பல ஜப்பானிய மாணவர்களைத் தமிழ் கற்க ஊக்கப்படுத்தினார். இலங்கைத் தமிழ் ஆய்வாளர்களுடன் இணைந்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டர்.
*நிஹோங்கோ னோ கிகென் இவானாமி’, ‘நிஹோங்கோ னோ நென்ரின் ஷின்சோ புங்கோ’ உள்ளிட்ட பதினோரு ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். மேலும் ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழுடன் தொடர்பு கொண்டிருப்பதை விளக்க 500 சொற்களைச் சான்றாகக் காட்டி ஒரு கட்டுரை எழுதினார்.
*'தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆராய்ந்து, 1999-ல் ஜப்பான் மொழி ஆய்வு நூலாக வெளியிட்டார். சென்னையில் தங்கியிருந்தபோது இவர் எழுதிய ‘உயிரிடை நின்ற வல்லினம்’, ‘மொழி முதல் சகரம்’ ஆகிய இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மிகவும் பிரபலம்.
*தமிழகப் புலவர் குழு இவருக்குத் ‘தமிழ்ச்சான்றோர்’ என்ற பட்டம் வழங்கியது. 1990களின் முற்பகுதியில் அவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஜப்பானுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள இலக்கியம், பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் அதிசயிக் கத்தக்க ஒற்றுமைகள் காணப்படுவதை வெளிப்படுத்தியிருந்தார்.
*தமிழகத்தில் கொண்டாடும் பொங்கல் திருவிழாப் போலவே ஜப்பானிலும் ஏறக்குறைய இதே சமயத்தில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தார். தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உறவுப்பாலம் அமைத்தவர் எனப் போற்றப்பட்ட பேராசிரியர் சுசுமு ஓனோ, 2008-ம் ஆண்டில் 89-ம் வயதில் மறைந்தார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago