கவிஞர், இலக்கிய விமர்சகர்
குஜராத்தி மொழி மற்றும் ஆங்கில மொழிக் கவிஞரும் தலைசிறந்த இலக்கிய விமர்சகருமான நிரஞ்சன் பகத் (Niranjan Bhagat) பிறந்த தினம் இன்று (மே 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அகமதாபாத்தில் பிறந்தார் (1926). நகராட்சி பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். 1946-ல் பம்பாய் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
* குஜராத்தி, ஆங்கிலம், வங்க மொழி, பிரெஞ்ச், ஸ்பானிஷ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். லண்டனில் சில ஆண்டுகள் சட்டம் பயின்றார்.
* 1950-ல் பாம்பே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவுடன் அகமதாபாத்தில் எல்.டி. கலைக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகச் சேர்ந்தார். மூன்றாண்டுகளுக்குப் பின் ஜி.எல்.எஸ். கலைக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகச் சேர்ந்தார். பின்னர் செயின்ட் சேவியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.
* ரவீந்திரநாத் தாகூரால் மிகவும் கவரப்பட்ட இவர், தானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1943-ல் முதன் முதலாக ‘சோனாலு’ என்ற கவிதையை எழுதினார். அடுத்த ஆண்டுதான் இவரது முதல் கவிதை ஜாக்ருதி குமார் என்ற இதழில் வெளிவந்தது. முதல் கவிதைத் தொகுப்பின் பெயர் ‘சாந்தோலயா’. அதைத் தொடர்ந்து ‘கின்னாரி’ கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
* ‘சாகித்ய சாதனா’ என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இரண்டாண்டு காலம் செயல்பட்டார். ‘ஆதுனிக் கவிதா’, ‘யந்த்ர விக்னம் அனே மந்த்ரகவிதா’, ‘சாகித்யாச்சார்யா’, 8 தொகுதிகளாக வெளிவந்த ‘ஸ்வாத்யலோக்’ உள்ளிட்ட விமர்சன நூல்கள் இவரை குஜராத் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமையாக உயர்த்தின.
* இவரது ‘ஸ்வாத்யலோக்’ நூலின் ஒவ்வொரு தொகுதியும் கவிதையின் கோட்பாடு, நடைமுறை விமர்சனம், ஆங்கில இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், குஜராத்தி இலக்கியம் உள்ளிட்ட வெவ்வேறு விஷயத்தைக் குறித்து விவாதிக்கிறது. ‘பிரபல்த்வீப்’, ‘33 காவ்யோ’, ‘சந்தோலயா’ ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. ரவீந்திரநாத் தாகூரின் ‘சித்ராங்கதா’ உள்ளிட்ட பல படைப்புகளை குஜராத்தியில் மொழிபெயர்த்தார். ‘ஸ்வப்னவாசவதத்தம்’ என்ற சமஸ்கிருதக் காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘குஜராத் கவிதைகளின் பேராசிரியர்’ எனக் குறிப்பிடப்பட்டார்.
* இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார். பைபிளிலிருந்து ‘தி புக் ஆஃப் ஜாப்’ என்ற நூலை மொழிபெயர்த்தார். மேலும் பல உலகப் புகழ்பெற்ற படைப்புகளை குஜராத்தில் மொழிபெயர்த்தார்.
* புதுடெல்லி சாகித்ய அகாடமியின் பொதுக் கவுன்சில் உறுப்பினராக ஐந்தாண்டுகள் செயல்பட்டார். 1999-ம் ஆண்டின் குஜராத்தி மொழிக்கான சாகித்ய அகாடமி விருது வென்றார். ஆங்கிலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இவற்றை இவர் தனது மானசீக குரு ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாணியில் எழுதியுள்ளார்.
* நர்மத் ஸ்வர்ண சந்த்ரக் விருது, பிரேமானந்த் ஸ்வர்ண சந்த்ரக் விருது, ரஞ்சித்ராம் ஸ்வர்ண சந்த்ரக், நர்ஷீஷ் மேத்தா விருது, குஜராத் சாகித்ய பரிஷதின் சச்சிதானந்த சம்மான் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றார். இன்று 91-வது வயதில் அடியெடுத்து வைக்கும் நிரஞ்சன் பகத், தற்போது, பிரெஞ்ச் மொழியின் பிரபல கவிதைத் தொகுப்பை குஜராத்தியில் மொழிபெயர்த்துவருகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
21 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
27 days ago