இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்
காந்தியவாதியும் இந்தியாவின் தலைசிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலருமான சண்டி பிரசாத் பட் (Chandi Prasad Bhatt) பிறந்த தினம் இன்று (ஜூன் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* உத்தராகாண்ட் மாநிலத்தின் கோபேஷ்வர் என்ற கிராமத்தில் பிறந்தவர் (1934). குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ருத்ரபிரயாக் மற்றும் புரியில் பள்ளிக் கல்வி பயின்றார். பட்டப் படிப்பு முடிக்காமலேயே இவரது படிப்பு முடிவுக்கு வந்தது.
* கர்வால் மோட்டார் ஓனர்ஸ் யூனியனில் புக்கிங் கிளர்க்காக பணியாற்றினார். 1956-ல் அந்த ஊருக்கு வருகை தந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் பேச்சால் கவரப்பட்டார். இவரும் ஏராளமான இளைஞர்களும் சர்வோதயா இயக்கத்தில் இணைந்தனர். காந்திஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், வினோபா பாவே ஆகியோரைத் தன் வழிகாட்டிகளாக ஏற்றார்.
* காந்தியக் கொள்கைகள், பூமிதானம், கிராமதானம் குறித்து பிரச்சாரம் செய்தார். பெண்கள் மற்றும் தலித்துகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். சர்வோதயா இயக்க செயல்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவதற்காகத் தான் பார்த்து வந்த வேலையை 1960-ல் துறந்தார்.
* 1964-ல் கோபேஷ்வர் என்ற இடத்தில் ‘தஷோலி கிராம் ஸ்வராஜ்யா மண்டல்’ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே காடுகள் சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
* மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும் தன் மக்களின் நலனைக் காப்பதற்காகவும் ‘சிப்கோ ஆந்தோலன்’ என்ற இயக்கத்தை 1973-ல் தொடங்கினார். கிராம மக்கள் மரங்களைக் கட்டித் தழுவியபடி, அவற்றை வெட்ட வருவோரைத் தடுத்தனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டது.
* காடுகளைப் பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகளை மலைப்பகுதி மக்களின் பங்கேற்புடன் மேற்கொண்டார். இந்த முகாம்களில் பங்கேற்றவர்கள் தங்கள் கிராமங்களில் மரங்களை நட்டனர். இவர்கள் நட்ட மரங்களில் 88 சதவீத மரங்கள் செழித்து வளர்ந்தன. இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது.
* ‘பர்பத் பர்பத் பஸ்தி பஸ்தி’, ‘பிரதிகார் கே அங்க்கூர்’, ‘ஃபர்தர் ஆஃப் லார்ஜ் பிராஜக்ட்ஸ் இன் தி ஹிமாலயா’, ‘சிப்கோ எக்ஸ்பீரியன்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். 2003-ம் ஆண்டு தேசிய வன ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பு, காடுகள் மேலாண்மை தொடர்பான தற்போதைய அனைத்து கொள்கைகள் மற்றும் சட்டபூர்வமான கட்டமைப்புகளை மீளாய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
* ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று, சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றார். மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் தனது அனுபவ அறிவைப் பகிர்ந்துகொண்டார்.
* இவரது சமூக சேவைகளுக்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மகத்தான பங்களிப்புகளுக்காகவும் ரமன் மகசேசே விருது வழங்கப்பட்டது. மேலும் பத்மபூஷண், காந்தி அமைதி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
* இன்று 84-வது வயதில் அடியெடுத்து வைக்கும் சண்டி பிரசாத் பட், இப்போதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளைச் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago