குத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்!

குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னர், இரு முறை ஹெவி வெய்ட் சாம்பியன், நாக்அவுட் நாயகன் முகமது அலி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவரின் புகழ்பெற்ற பத்து உத்வேகக் கூற்றுகளின் தொகுப்பு.

இது வெறும் வேலைதான். புற்கள் வளர்கின்றன, பறவைகள் பறக்கின்றன, அலைகள் மணலைக் குவிக்கின்றன, நான் குத்துசண்டை ஆடுகிறேன்!

*

நான் உடற்பயிற்சி செய்யும்போது எண்ணுவதில்லை. வலிக்க ஆரம்பிக்கும்போதுதான் எண்ண ஆரம்பிக்கிறேன். ஏனென்றால் அப்போதுதான் உண்மையான பயிற்சி ஆரம்பிக்கிறது.

*

என்னை வெல்வது போல கனவு காண்கிறீர்களா? ஒன்று செய்யுங்கள். உடனே எழுந்து மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.

*

வீரர்கள் உடற்பயிற்சி கூடங்களில் மட்டும் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம்; மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோதிடம்தான் அதிமுக்கியம்.

*

பட்டாம்பூச்சியைப் போல மிதந்திடுங்கள்; தேனீயைப் போல கொட்டிடுங்கள்!

*

"என் இடது கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது; வலது கை பயத்தால் நடுங்குகிறது. இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"- அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்றியபோது.

*

முடியாது என்பது சிறிய மனிதர்கள் வாழ்க்கையை எளிதாக வாழக் கண்டுபிடித்து உதிர்த்த வெறும் வார்த்தை. முடியாது என்பது இயல்பு அல்ல, கருத்து. முடியாது என்பது தற்காலிகமானது.

*

நாட்களை நீ எண்ணாதே.. நாட்கள் எண்ணிக்கொள்ளட்டும். உன்னிடம் வந்து சேர்!.

*

நான் ஆகச்சிறந்தவன்; நான் அப்படித்தான் என்று எனக்குத் தெரியவரும் முன்பே இதைக்கூறியிருக்கிறேன்.

*

விருப்பம் திறமையைக் காட்டிலும் வலிமையானது.

*

ரசிகர்கள் என்னை விரும்புவதைப் போல எல்லா மக்களும் எல்லோரையும் விரும்பவேண்டும். அதுவே சிறந்த உலகத்தை உருவாக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE