பானைக்குள் யானை!

By வியெஸ்வீ

ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். விருப்ப ஓய்வுப் பெற்று நாடக மேடையிலும், தொலைக்காட்சியிலும் நடித்து, இயக்கிக் கொண்டிருந்தார். இப்போது அவற்றில் இருந்தும் ஒதுங்கி, ஒலிப் புத்தகத் (Audio Book) தயாரிப்பில் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார் பாம்பே கண்ணன்.

வங்கி கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ ஆரம்பம். தொடந்து ‘பார்த்திபன் கனவு’, ‘பொன்னியின் செல்வன்’ என்று கல்கியின் சரித்திரப் புதினங் களை ஒலிப் புத்தகமாகத் தயாரித்தார் கண்ணன். இப்போது, இவரின் லேட்டஸ்ட் தயாரிப்பாக சாண்டில்யனின் ‘கடல் புறா’ வெளியாகிவிட்டது. இந்த ஒலிப் புத்தகங்களின் இயக்குநராக தன் முழு உழைப்பையும் கண்ணன் செலுத்த, தயாரிப்பாளராக இவ ருக்கு தோள் (காசோலை) கொடுக் கிறார், பெங்களூருவைச் சேர்ந்த சி.கே.வெங்கட்ராமன். இவர் ‘தனிஷ்க்’ நகை நிறுவனத்தின் சி.இ.ஓ.

கடந்த வியாழன் அன்று நல்லி குப்புசாமி செட்டியாரின் தலைமையில் பிரம்ம கான சபா நடத்திய ‘கடல்புறா’ வெளியீட்டு விழாவில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக வந்த டெல்லி கணேஷ், ஃபாத்திமா பாபு, ‘லேடீஸ் ஸ்பெஷல்’ கிரிஜா ராகவன் மற்றும் சடகோபன் (சாண்டில்யனின் மகன்) கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். உரக்கப் பேசிய சடகோபனின் உரை, நீளமாக இருந்தாலும் சாண்டில்யன் பற்றிய தகவல் களஞ்சியமாக இருந்தது சிறப்பு.

‘கடல் புறா’வை ஒலிப் பேழைக்குள் அடக்கு வதற்கு உரிமை கேட்டு ஆறு பேர் முதலில் வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் சடகோபனும், அவரது சகோதரரும் உரிமை கொடுத்தாலும் உருப்படியாக எதுவும் நடந்து முடியவில்லை. ஏழாவதாக பாம்பே கண்ணன். ‘யானையை எப்படி இவர் பானைக்குள் அடக்கப் போகிறாரோ?’ என்ற சந்தேகத்துடனே இவருக் கும் உரிமை தரப்பட்டிருக்கிறது. முடிவில், 40 மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடக்கூடிய சி.டி-யைக் கேட்டபோது சடகோபனுக்கு முழுத் திருப்தி!

‘‘உலகத்தின் எட்டாவது அதிசயம் இவர்...’’ என்று பாம்பே கண்ணனைப் பாராட்டி வியந்தார் சடகோபன்!

திருச்சி செயின்ட்ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் வகுப்பில் சேர்ந்திருக்கிறார் சாண்டில் யன். தேர்வில் பாஸாகவில்லை. பத்திரிகை யாளராக விரும்பி சென்னை திரும்பியவர், ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் பணியில் சேர்ந்தார். தமிழில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும், தேர்ச்சியையும் கண்ட நாளிதழ் ஆசிரியர், ‘சுதேசமித்திரன்’ தொடங்கிய வார இதழுக்கு சாண்டில்யனை ஆசிரியராக்கினார்.

முதலில் சமூக நாவல்தான் எழுதியிருக்கிறார் சாண்டில்யன். ‘பலாத்காரம்’ என்று முதலில் இதற்கு தலைப்பிட்டவர், பின்னர், ‘புரட்சிப் பெண்’ என்று மாற்றி னாராம்.

ஆரம்பத்தில் ‘அமுதசுரபி’ இதழுக்குத்தான் எழுதியிருக் கிறார் சாண்டில்யன். அப்போது அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந் தவர், வித்வான் வே.லட்சுமணன்.

பின்னர் ‘குமுதம்’ எஸ்.ஏ.பி அழைக்க, சாண்டில்யனின் சரித் திர நாவல்கள் ‘குமுதம்’ இதழில் தொடர்ந்து வெளியாகி, வெற்றி முரசு கொட்டின!

இறுதி நாட்களில் வீட்டில் உட்கார்ந்து டி.வி-யில் நிகழ்ச்சிகள் பார்ப்பது சாண்டில்யனின் பொழுதுபோக்கு. இவரை மிகவும் கவர்ந்த செய்தி வாசிப்பாளர், பாத்திமா பாபு. ‘‘இவரோட அழகை வர்ணித்து எழுதணும்னு ஆசையா இருக்கு…” என்பாராம் மகனிடம். ‘‘இத்தனைப் பெண்களை வர்ணிச்சு எழுதறீங்களே? என்னிக்காவது என்னை வர்ணிச்சு எழுதியிருக்கீங்களா?’’ என்று சண்டைப் போடுவாராம் மனைவி.

‘‘எழுதலாம்தான்... ஆனா, எனக்கு வரும்படி போயிடுமே...’’ என்று ஜோக் அடித்திருக்கிறார் சாண்டில்யன்.

‘கடல் புறா’ நாவலை 160 அத்தியாயங் களுக்கும் மேல் எழுதிய சாண்டில்யனுக்கு கல்கிதான் ஆதர்சனம். பின்னவர் தொடங்கிய பத்திரிகையின் பவள விழா நடக்கும் இந்த நேரத்தில், முன்னவரின் சரித்திர நாவல் ஒன்று ஒலிப் புத்தகமாக வெளிவருவது சிறப்பு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

17 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்