நோபல் பெற்ற தென்னாப்பிரிக்க இலக்கியவாதி
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த படைப்பாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜே.எம்.கோயட்ஸி (J.M.Coetzee) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் பிறந்தார் (1940). தந்தை சட்ட ஆலோசகராகவும் அரசு ஊழியராகவும் பணியாற்றினார். செயின்ட் ஜோஸஃப் பள்ளியில் பயின்றார். கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் ஆங்கிலம் பயின்றார்.
* 1960-ல் ஆங்கிலத்திலும் 1961-ல் கணிதத்திலும் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு, லண்டனில் உள்ள ஐ.பி.எம். நிறுவனத்தில் கணினி புரோகிராமராக பணியாற்றினார். 1969-ல் ‘தி இங்கிலிஷ் ஃபிக் ஷ்ண் ஆஃப் சாமுவேல் பேக்கட்: ஆன் எஸ்ஸே இன் ஸ்டைலிஸ்டிக் அனாலிசிஸ்’ என்ற கணினி தொடர்பான ஆய்வுக்கட்டுரை எழுதி டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
* இலக்கிய ஆர்வம் மட்டுமின்றி எழுதுவதிலும் திறமை பெற்றிருந்தார். ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியுயார்க்கில் ஆங்கில இலக்கியம் கற்பித்தார். 1968-ல் ‘டஸ்க்லான்ட்’ என்ற தனது முதல் நாவலை எழுதினார். மீண்டும் தென்ஆப்பிரிக்கா திரும்பிய இவர், கேப் டவுன் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார்.
* 2001 வரை ஆசிரியப் பணியோடு தொடர்ந்து எழுதியும் வந்தார். தன் சொந்த ஊர், அதன் மக்கள் குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு 1997-ல் ‘பாய்ஹுட்’ என்ற நாவலைப் படைத்தார்.
* 1983-ல் இவர் எழுதிய ‘லைஃப் அன்ட் டைம்ஸ் ஆஃப் மைக்கேட் கே’, 1999-ல் இவர் எழுதிய ‘டிஸ்கிரேஸ்’ ஆகிய படைப்புகளுக்காக இரண்டு முறை புக்கர் பரிசு வென்றார். ‘சம்மர்டவுன்’, ‘உல்ஃப் ஹால்’, ‘எலிசபத் காஸ்டெலோ’, ‘வெயிட்டிங் ஃபார் தி பார்பேரியன்ஸ்’, ‘ஏஜ் ஆஃப் அயர்ன்’, ‘ஸ்லோ மேன்’, ‘தி சைல்ட்ஹுட் ஆஃப் ஜீஸஸ்’ உள்ளிட்ட நாவல்கள் வரவேற்பைப் பெற்றன.
* ‘ஏ ஹவுஸ் இன் ஸ்பெய்ன்’, ‘தி லைஃப்ஸ் ஆஃப் அனிமல்ஸ்’, ‘தி வுமென் க்ரோஸ் ஓல்டர்’ உள்ளிட்ட சிறுகதைகள், ‘லான்ட்ஸ்கேப் வித் ரோவர்ஸ்’, ‘இன்ட்ரொடக் ஷ்ண் டு ராபின்சன் க்ரூசோ’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் முதலான இவரது படைப்புகள் உலகப் புகழ்பெற்றவை.
* ஆப்பிரிக்காவில் பதவி ஓய்வு பெற்ற பின் 2002-ல் ஆஸ்திரேலியா சென்ற இவர் அடிலெய்டில் குடியேறினார். அங்கே அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையில் கவுரவ ஆராய்ச்சியாளராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் தான் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக வைத்து 2002-ல் ‘யூத்’ என்ற நாவலை எழுதினார். இவரது மகத்தான பங்களிப்புகளுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2003-ல் வழங்கப்பட்டது.
* ஜெருசலேம் பரிசு, 3 முறை சி.என்.ஏ. பரிசு, ஐரீஷ் டைம்சின் சர்வதேச புனைகதை விருது, தி மாஸ்டர் ஆஃப் பீட்டர்ஸ்பர்க், ஜெஃப்ரி ஃபேபர் மெமோரியல் பரிசு உள்ளிட்ட ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார்.
* 2005-ல் தென்ஆப்பிரிக்காவை உலக அளவில் இலக்கிய அரங்கில் இடம்பெற வைத்ததற்காகவும், இலக்கியக் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கியதற்காகவும், ஆப்பிரிக்காவின் உயரிய ‘ஆர்டர் ஆஃப் மாபங்கப்வே’ விருதைப் பெற்றார்.
* 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றார். நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகப்பரிமாணம் கொண்ட ஜே.எம்.கோயட்ஸி இன்று 78வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
22 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago