இந்தி கவிஞர், விமர்சகர்
இந்தி இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க கவிஞரும் விமர்சகருமான நாம்வர் சிங் (Namvar Singh) பிறந்த தினம் இன்று (மே 1). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
 பனாரஸில் (இன்றைய வாரணாசி மாவட்டம்) ஜீயன்புர் என்ற கிராமத்தில் பிறந்தார். சிறந்த மாணவராக விளங்கினார். சிறு வயது முதலே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்றார். இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார்.
இவர் இந்தி, உருது, வங்காளம், சமஸ்கிருத மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். ஆவாஜ்புரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் வேலை பார்த்த பள்ளியில் மாணவர் சங்கம் ஒரு இலக்கிய மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கியது. அந்த இதழில் இவரது முதல் கவிதை தீவாலி வெளியானது. தொடர்ந்து நிறைய கவிதைகள் பல்வேறு இதழ்களிலும் வெளிவரத் தொடங்கின.
நவயுவக் சாகித்ய சங் என்ற அமைப்பில் இணைந்தார். இங்கு இந்தி இலக்கியத்தின் ஏறக்குறைய அனைத்து முக்கிய ஆளுமைகளும் பங்கேற்று வந்தனர். சில ஆண்டுகளில் இந்த அமைப்பின் பொறுப்பை ஏற்று நடத்தினார். நவீன இந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தி இலக்கியத்தின் தலைசிறந்த இலக்கிய திறனாய்வாளரும், விமர்சகரும் படைப்பாளியுமான ஹசாரி பிரசாத் த்விவேதியின் சிஷ்யர் இவர்.
நிறைய வாசித்து வந்தார். கவிதைகளிலிருந்து நூல் விமர்சனங்களை எழுதத் தொடங்கினார். பிரகதிஷீல் லேகக் சங் என்ற எழுத்தாளர்களின் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு பனாரசில் தொடங்கப்பட்ட போது, இவரும் அதில் தவறாமல் பங்கேற்று வந்தார். ஏராளமான முக்கிய இலக்கியவாதிகளை அங்கு சந்தித்தார்.
‘ஜனயுக்’ வாராந்திர இலக்கிய இதழையும் ‘ஆலோசனா’ என்ற காலாண்டு பத்திரிகையையும் நடத்தி வந்தார். இவற்றில் இவரது கவிதைகள், விமர்சன கட்டுரைகள் வெளிவந்தன. இலக்கியம், சமூகம், வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான தனது சிந்தனைகளையும் கட்டுரைகளாக எழுதி வந்தார்.
காசி நகரையும் கங்கையையும் மிகவும் நேசித்தார். அவற்றின் புகழைப் பேசிக்கொண்டே இருப்பார். 1953 முதல் காசி இந்து பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக வேலை பார்த்தார். 1974-ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தி பேராசிரியராக நியமனம் பெற்றார். அங்கே 18 ஆண்டுகள் பணியாற்றினார். ஜெயனூர் பாரதிய பாஷா கேந்த்ர என்ற அமைப்பை நிறுவினார்.
பின்னர் ஜோத்புர் பல்கலைக்கழகத்தின் இந்தி துறையிலும் ஆகரா, ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரி யராகப் பணியாற்றினார். மகாத்மா காந்தி சர்வதேச இந்தி பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகவும் பணியாற்றினார். கதைகள், கவிதைகள், ஆலோசனைகள், கட்டுரைகளை எழுதி வந்தார்.
இவரது நயீ கஹானி, கவிதா கே நயே பிரதிமான், தூஸ்ரி பரம்பரா கீ கோஜ், இந்தி கீ விகாஸ் மே அபபிரம்ஷ் கா யோக், ப்ருத்விராஜ ராசோ கீ பாஷா, ஆதுனிக் இந்தி கீ பிரவ்ருத்தியா, சாயாவாத் உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
1971-ம் ஆண்டு இவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் இந்தி அகாதமி தில்லியின் ஷலாகா சம்மான் விருது, உத்தரபிரதேச இந்தி அமைப்பின் சாகித்ய பூஷன் சம்மான், பாரத் பாரதி சம்மான் உள்ளிட்ட பல கவுரவங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். இந்தி இலக்கிய முற்போக்கு விமர்சனத்தின் முன்னோடி எழுத்தாளராகத் திகழ்பவர்.
ஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய இலக்கிய களத்தில் முக்கிய ஆளுமையாக செயல்பட்டுவரும் நாம்வர் சிங் இன்று 90-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago