ஓஎன்வி குருப் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

பிரபல மலையாளக் கவிஞர்

ஞானபீட விருது பெற்ற பிரபல மலையாளக் கவிஞரும், பேராசிரியர், விமர்சகர், அரசியல்வாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவருமான ஓ.என்.வி.குருப் (O.N.V.Kurup) பிறந்த தினம் இன்று (மே 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் கொல்லம் அருகில் உள்ள சவற என்ற கிராமத்தில் (1931) பிறந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். மலையாள மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் மலையாள விரிவுரை யாளராகப் பணியைத் தொடங்கினார். அரசியல், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1946-ல் இவரது ‘முன்னோட்டு’ என்ற கவிதை உள்ளூர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல கவிதைகள் எழுதினார்.

* இவர் எழுதி 1949-ல் வெளிவந்த ‘அரிவாளும் ராக்குயிலும்’ என்ற கவிதைக்கு கேரள முற்போக்கு இலக்கியப் பேரவையின் ‘சங்ஙம்புழ’ விருது கிடைத்தது. இதன்மூலம் பரந்த மலையாள இலக்கிய உலகில் பிரபலமானார். அதே ஆண்டு ‘போராடுன்ன சவுந்தர்யம்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது. 1956-ல் வெளிவந்த ‘தாஹிக்குன்ன பானபாத்ரம்’ என்ற கவிதைத் தொகுப்பு மூலம் மலையாளக் கவிதை உலகிலும் புகழ்பெற்றார்.

* பொதுவுடைமை இயக்கத்தோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தவர். உலக அரங்கில் பொதுவுடைமை அரசியல் ஏற்படுத்திய மாற்றங்கள், மே தினம், புரட்சி உள்ளிட்ட விஷயங்கள்தான் இவரது ஆரம்பகாலக் கவிதைகளில் அதிகம் இடம்பெற்றன. பின்னர் மனிதநேயம், தத்துவம், சமூகம், இயற்கை, வறுமை, மனித வாழ்வின் துயரங்கள், சுற்றுச்சூழல், காதல் என இவரது களம் விரிந்தது.

* முதன்முதலாக 1950-ல் ‘காலம் மாறுன்னு’ என்ற திரைப்படத்துக்குப் பாடல் எழுதினார். அதற்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்த பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். 232 திரைப்படங்களில் 900 பாடல்களை எழுதியுள்ளார். ஏறக்குறைய அனைத்துப் பாடல்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

* 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ‘சமூக உஜ்ஜைனி’, ‘ஸ்வயம்வரம்’ ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரசித்தம். குழந்தைகளுக்காகவும் ஏராளமான பாடல்களை இயற்றினார். அவை தொகுக்கப்பட்டு ‘வளப்பொட்டுகள்’ என்ற தலைப்பில் வெளியானது.

* சில விமர்சன நூல்களையும் எழுதியுள்ளார். திருவனந்தபுரம், கோழிக்கோடு, தலசேரி எனப் பல்வேறு நகரக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 1986 வரை பணியாற்றினார். சாகித்ய அகாடமியின் செயற்குழு உறுப்பினர், கேரள கலாமண்டலத்தின் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தார்.

* கேரள மாநில சிறந்த திரைப்படப் பாடலாசிரியர் விருதை 13 முறை பெற்றுள்ளார். ‘வைஷாலி’ என்ற படத்துக்கு இவர் எழுதிய பாடல்களுக்காக 1984-ம் ஆண்டு சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றார். 1998-ல் பத்ம விருதும், 2007-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதும் பெற்றார்.

* கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது உட்பட பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றவர். கேரளப் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. முற்போக்கு எழுத்தாளர், சமூக சித்தாந்த சார்பாளர் எனப் போற்றப்பட்டார்.

* பேராசிரியர், கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், விமர்சகர், அரசியல்வாதி எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஓஎன்வி குருப் கடந்த 2016 பிப்ரவரி மாதம் 85-வது வயதில் மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்