நெட்டிசன் நோட்ஸ்: தமிழக சட்டம் - ஒழுங்கு... சிறப்பா, சிரிப்பா?

By க.சே.ரமணி பிரபா தேவி

தமிழகத்தில் அதிகரித்திருக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ஒருபுறம் அச்சுறுத்தலையும் மறுபுறம் பெரும் கவலையையும் தோற்றுவிக்கின்றன. சென்னையில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் நான்கு வழக்கறிஞர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதேபோல தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களில் 20-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஓசூரில் தலைமைக் காவலர் ஒருவரே, கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். இத்தகைய சம்பவங்களால் நெட்டிசன்கள் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக கருதுகிறார்களா?

>Balamurugan ‏

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் இளம் பெண் கொலை.

#அமைதிப்பூங்காவுக்கு அர்த்தம் கேட்டது யாருப்பா?

>எனக்குள் ஒருவன்.! ‏

தொடர் கொலைகள், சந்தி சிரிக்கும் தலைநகர சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை திசை திருப்ப சில என்கவுண்ட்டர்கள் நடக்கலாம்.

>சி.பி.செந்தில்குமார் ‏

கொலைகள் நடக்கும் போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்று ஜெ கூறுவது சரியா?- வைகோ #சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதுன்னு எந்த மாநில முதல்வர்தான் சொல்வார்?

>Deepak Vasudevan

பொது இடங்களில் பட்டப்பகலில் அரங்கேறும் கொலைகள். சென்னை தலைநகரம்- கொலைநகரம்?

>2.0 ‏

ரயில் நிலையம் எல்லாம் மத்திய அரசு கண்ட்ரோல்தான? நுங்கம்பாக்கம் கொலை மாநில அரசை எப்படி பாதிக்கும். #doubt

>priya ‏

மக்கள் கூடியுள்ள பொது இடத்துல நடந்த கொலை! இதல்லாம் சட்டம், ஒழுங்கு கீழ தானப்பா வருது?

>RIP SWATHI ‏

நாட்பட்ட சோதனைகளுக்கு மத்தியில் இந்த பெண் கொலை மிகவும் வருத்தப்பட வைக்கிறது #நுங்கம்பாக்கம் கொலை

>Dr S RAMADOSS ‏

சென்னையில் 3 வாரத்தில் 3 வழக்கறிஞர்கள் கொலை: வாராவாரம் வழக்கறிஞர் படுகொலை... சட்டம்- ஒழுங்கு குறட்டை விட்டு உறங்குது!

>SKP Karuna ‏@skpkaruna

அவங்கவங்க சொந்தப் பிரச்சனைக்காக கூலிப்படை வச்சு கொலை செய்வதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்க முடியாது என சபையில் தெளிவா முதல்வர் சொல்லிட்டாங்க.

>BJP Tamilnadu

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. வலிமையான கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்.

>சி.பி.செந்தில்குமார் ‏

சட்டம் - ஒழுங்கு பற்றி கருணாநிதியின் குற்றச்சாட்டு நியாயமற்றது - சரத்குமார்.

#நாட்டாமை நீங்க சமக தலைவரா? இல்ல அதிமுக தொண்டரா?

>Prabhu ‏

1000 ரூபாய் வாங்கி ஓட்ட போட்டுட்டு சட்டம் சரியில்லயாம் ஒழுங்கு சரியில்லையாம்.

>பரம்பொருள் ‏

கொலை, கொள்ளைலாம் சட்டம் ஒழுங்குல வராதாம்.. எல்லாரும் போய் புள்ளகுட்டிய படிக்க வைங்க போங்க...

>Dr S RAMADOSS ‏

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்த நிலை மாறி இப்போது அபார்ட்மென்ட் சிரிக்கிறது!

>புகழ் ‏

சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும் நாட்டில் கடவுளின் தேவை குறைவாகவே இருக்கு..

>அட்டகத்தி:-[ ‏

ஒரு கொலை நடந்திருந்தால் வீடியோ வந்திருச்சா என்று கேட்க்கும் மனநிலையில்தானே மக்கள் உள்ளனர்.

>2.0 ‏

தனிமனித விரோதங்களால் நடக்கும் கொலைகளும் சட்ட ஒழுங்கு பிரச்சனையிலா வருகிறது? #டவுட்

>சேலம் சுரேந்திரன் ‏

சட்ட, ஒழுங்கு சீர்குலைந்து வருவதை காவல்துறை வேடிக்கை பார்க்காமல் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

>Arisi Sri Ram

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது - அரசு. நல்லா சொல்லுங்க! சிறப்பா உள்ளதா? சிரிப்பா உள்ளதா?

>śámúŕai ‏

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு பட்டியலில் 3வது இடத்தில் இந்தியா.

>Sa.Na. Kannan

விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு தருபவர்கள், அதிக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிற, எளியவர்கள் வந்து செல்கிற பேருந்து, ரயில் நிலையங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் யோசிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்