இதுதான் நான் 76: அப்போ விதை... இப்போ பழம்!

By பிரபுதேவா

தமிழ்ல நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் நடிச்ச ‘தேவி’படம் ரிலீஸாச்சு. அந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்குறப்ப ஜாலியா இருந்தது. அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிச்சுட்டு, இரவு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் டைரக்டருக்கு போன் போட்டு ‘‘விஜய் ஓ.கேவா? ஒழுங்கா நடிச்சிருக் கேனா?’’ன்னு கேட்பேன். அதுக்கு அவர் ‘‘அய்யோ... சார்!’’ன்னு சிரிச்சுட்டு, ‘‘கரெக்டா இருக்கு!’’ன்னு சொல்வார். ‘‘இல்லல்ல. ஏதாவது தப்பா நான் பண்ணியிருந்தா சொல்லுங்க. கொஞ்சம் ஓவரா பண்ணியிருந்தாலும் சொல்லி டுங்க’’ன்னும் கேட்பேன். அதுக்கு அவர், ‘‘எல்லாமே பர்ஃபெக்டா இருக்கு!’’ன்னு சொல்வார். ‘‘சரி… ஓ.கே! தேங்க்ஸ் விஜய்!’’ன்னு சொல்லிட்டு போனை வெச்சிடுவேன். அப்புறம் கொஞ்ச நேரம் நான் நடிச்ச எல்லா ஸீனையும் மனசுல ஓட்டிப் பார்ப்பேன். ‘அதான், டைரக்டரே ஓ.கே. சொல்லிட்டாரே… அதுக்கப்புறம் எதுக்கு மனசுல ஓட்டிப் பார்க்கணும்’னு எனக்கு நானே சொல் லிட்டுத் தூங்கிடுவேன்.

‘தேவி’ ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. படத்தில் நமக்கு பேர் கிடைக்கணும் கிறதைவிட மக்களிடம் கெட்ட பெயர் எதுவும் எடுத்துடக்கூடாதுன்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. அந்தப் படத் தில் கூட இருந்த நடிகர், நடிகை, டெக்னீஷியன்ஸ்னு… எல்லாரோடும் சேர்ந்து நான் முதன்முறையா வேலை பார்த்தேன். என்னைவிட அவங்க யங்க்ஸ் டர்ஸ். முன்னெல்லாம் என்னைவிட வயசு அதிகமா இருக்குறவங்களோட படம் பண்ணியிருக்கேன். ‘தேவி’ படப்பிடிப்பு சமயத்தில் இந்த யங்க்ஸ்டர்ஸ்கிட்டே நல்லப் பெயர் வாங்கணுங்கறதுதான் என் மனசில் இருந்தது. நம்மால் எந்தத் தொந்தரவும் அவங்களுக்கு ஆகக் கூடாதுன்னும் மயிண்ட்ல ஏத்திக்கிட்டு, அப்படியே நடந்துக்கிட்டேன். அப்புறம் படமும் ரிலீஸாச்சு. எல்லா தரப்புலேயும் நல்ல பெயர் கிடைத்தது.

குறிப்பா படம் பார்த்த நிறைய நடிகர், நடிகைகள், ‘‘ரொம்ப நல்லா நடிச்சிருக் கீங்க, பிரபு’’ன்னு சொன்னாங்க. ஆரம்பத் திலெல்லாம் இந்தப் படத்தில், ‘‘நல்லா டான்ஸ் ஆடியிருக்கீங்க… இந்தச் சண்டைக் காட்சி ரொம்ப நல்லா வந் திருக்கு!’’ன்னு சொன்னவங்க ‘தேவி’ படத்தைப் பார்த்துட்டு முதல் வார்த் தையா, ‘‘நல்லா நடிச்சிருக்கீங்க’’ன்னு சொன்னாங்க. ‘அப்பாடா! நம்ம நடிப் பைப் பார்த்துட்டு பாராட்டிட்டாங்க!’ன்னு இருந்துச்சு. இந்த வார்த்தையைக் கேட்கத்தான் கிட்டத்தட்ட 11 வருஷம் இடைவெளி விழுந்திருச்சு போலிருக் குன்னு நினைச்சுக்கிட்டேன்.

‘தேவி’ படத்துக்கு அப்புறம் அடுத் தடுத்து படங்கள் நடிக்க ஆரம்பிச்சாச்சு. அதேபோல இப்போ நிறைய புதிய இயக்குநர்களைச் சந்திக்கிறேன். கதை கேட்கிறேன். அவங்க எல்லாருமே இளையவங்க. பத்து, பதினொரு வருஷங்களுக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள் வந்த நேரத்தில், இவங்க எல்லாரும் எவ்வளவு சின்னப் பசங்களா இருந்திருப்பாங்க. இப்போ அவங்க என்னைப் பார்த்தவுடனே, ‘‘உங்க நடிப்பு கேஷுவலா இருக்கும் சார். ரொம்ப எனர்ஜியா செம ஜாலியாவும் இருக்கும். உங்களோட பாடி லாங்குவேஜ் ரொம்ப பிடிக்கும். இவ்வளவு வருஷம் நாங்க உங்களை மிஸ் பண்ணிட்டோம்!’’ன்னு சொல்வாங்க. அதுக்கு அப்புறம்தான் டான்ஸ், காமெடி, சண்டைன்னு ஒவ் வொண்ணாப் பிரிச்சுச் சொல்றாங்க. அப்போ விதை விதைச்சது இப்போ பழமா கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

நடிப்பு மாதிரி டைரக்‌ஷன்லேயும் நான் எந்தப் பயிற்சியும் எடுத்துக்கிட்டதில்லை. யார்கிட்டேயும் அசிஸ்டெண்டா இருந் தும் கத்துக்கலை. இயக்குநர்கள் கே.பால சந்தர் சார், ஷங்கர் சார் படங்கள் ரொம்பப் பிடிக்கும். நடிப்பில் யாரையும் ஃபாலோவ் பண்ணாத மாதிரி டைரக்‌ஷன் லயும் யாரையும் ஃபாலோ பண்ணிய தில்லை. இப்பவும் அப்படித்தான். ஒரு பாட்டை கொரியோகிராஃப் பண்ணும் போது எப்படி ட்ரீட் பண்ணுவேனோ அந்த மாதிரிதான் ஸீனையும் ட்ரீட் பண்ணுவேன்.

பாட்டை கேட்டதும் மனசுக்குள்ள ஒரு விஷுவல் தோணும். அதே மாதிரிதான் டைரக்‌ஷன் பண்ற ஸீனைப் படிக்கும்போதும் உள்ளுக்குள்ள ஒரு விஷுவல் வரும். டைரக்‌ஷன்ல இருக்கும்போது மூளையும், மனசும் என்ன சொல்லுதோ அதைத்தான் செய்வேன். கூட இருக்கிற டெக்னீஷியன், ‘‘இந்த ஒரு ஸீன் மட்டும் க்ளோஸ்- அப்ல எடுத்துப்போம்!’’ன்னு சொன்னாக்கூட அதுக்கு அவசியமில்லைன்னா எடுக்க மாட்டேன். தேவையில்லாம டிராலியும், கிரேன், ஜிம்மி ஜிப் இப்படி எதையும் யூஸ் பண்ண மாட்டேன். எப்பவுமே என் படங்களில் எனர்ஜி லெவல் அதிகமா இருக்கும். அதுதான் என்னோட ஸ்டைல். அதே மாதிரி படம் முழுக்க ஜாலியா இருக்கும்.

சில தடவை, ‘படத்தில் இந்த இடம் ரொம்ப நல்லா வந்திருக்கு!’ன்னு ஒரு ஸீனை ரசித்து எடுத்து சேர்த்திருப்போம். படப்பிடிப்பில் இருந்த உதவியாளர் கள்கூட, ‘‘ரொம்ப பிரமாதமா இருக்கு சார்!’’ன்னு சொல்லியிருப்பாங்க. ஆனா, அந்த ஸீன் மக்களுக்கு சுத்தமா பிடிக்காம போயிருக்கு. உதவியாளர்களைக் கூப் பிடுவேன் ‘‘ஏம்ப்பா… சூப்பரா, பயங் கரமா இருக்குன்னு சொன்னீங்க. யாருக் கும் பிடிக்கலையே?’’ன்னு கேட்பேன். அதுக்கு அவங்க, ‘‘மக்களுக்கு புரி யலையோன்னு தோணுது சார்!’’ன்னு சொல்வாங்க. ‘‘அட மடசாமிகளா... புரியலையா? அவங்களுக்குப் புடிக் கலையா?’’ன்னு நான் திரும்பவும் சிரிச் சிட்டே கேட்பேன். அதுக்கு அவங்களும் சிரிச்சி மழுப்பிட்டு போயிடுவாங்க. நம்ம படத்தில் செய்யும் தப்பு ஜனங்களுக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சதுக்கு அப் புறம்தான், நல்லா அழகாப் பெருசா அந்தத் தப்பு எனக்குத் தெரியுது.

அதே மாதிரி, ‘படத்தில் இந்த காமெடி ஸீன் ஒரு மாதிரியா இருக்கே. வேணாமே!’னு நினைப்பேன். சரி… ஒரு ரிலீஃப்பா இருக்கட்டும்னு கடைசி நிமிஷத்துல சேர்ப்போம். ஆனா, அந்த காமெடி ஸீன் மக்களால் பெரிய அளவில் வரவேற்கப்படும். இந்த மாதிரி அனுபவங்கள் டைரக்‌ஷன்ல எனக்கு நிறைய கிடைச்சிருக்கு.

என்கிட்ட சிலர் பேசும்போது, ‘உங்க ளோட எல்லா படத்துலயும் ஜாலி, அடிதடி, பாட்டுங்கன்னு இருக்கே. வேற ஏதாவது சீரியஸா டிரை பண்ண லாமே!’ன்னு கேட்பாங்க. அதுக்கு நான், ‘‘படத்தில் எங்கே எமோஷனல் வேணுமோ, அது அங்கே இருக்குமே. அதுவுமில்லாம வருஷா வருஷம்தான் தீபாவளி வந்தாலும், ஒவ்வொரு தீபா வளிக்கும் எப்போதும்போல ஜாலியா பட்டாசு வெடிச்சு புது டிரெஸ் போட்டுக்கப் போறோம். என்னப்பா பழைய தீபாவளின்னு சொல்லப் போறதில்லை. அப்படிதான் நம் படமும் ஜாலியா இருக்கும்.

எம்ஜிஆர் படங்களில் பாட்டு, வசனம், சண்டைன்னு ஜாலியா இல்லாமல் இருந்தா நமக்கு பிடிக்குமா? அதுவும் படத்தில் அவர் அழுதா கொஞ்சம்கூட பிடிக்காதுல்ல. அப்படித்தான் என் படமும். அதுவும் நான் அவரோட ரசிகன். இப்போ நான் எழுதிட்டிருக்கும்போதுகூட டி.வி-யில தலைவர் நடித்த ‘தெய்வத்தாய்’ படம்தான் பார்த்துட்டிருக்கேன்.

அதே மாதிரி, சீரியஸான படங்கள் வேணும்னு சொல்றவங்கள்ட்ட இன் னொரு விஷயமும் நான் சொல்வேன். அது என்ன?

- இன்னும் சொல்வேன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 hours ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்